இலித்தியம் பொலோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் பொலோனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பொலோனைடு
பண்புகள்
Li2Po
வாய்ப்பாட்டு எடை 222.86 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிறம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் பொலோனைடு (Lithium polonide) என்பது Li2Po என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். பொலோனியச் சேர்மங்களில் அதிக வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்டது பொலோனைடு ஆகும்.[2][3]

தயாரிப்பு[தொகு]

ஐதரோபொலோனிக் அமிலம் என்றழைக்கப்படும் நீர் கலந்த ஐதரசன் பொலோனைடு இலித்திய உலோகத்துடன் ஒடுக்க வினை புரிந்து இலித்தியம் பொலோனைடு உருவாகிறது. ஐதரசன் பொலோனைடு, இலித்தியம் பகுதிப்பொருளாக உள்ள காரங்களுடன் அமில-கார வகை வினை புரிந்தும் இலித்தியம் பொலோனைடு தயாரிக்கப்படுகின்றது.

H2Po + 2 Li → Li2Po + H2

இலித்தியம், பொலோனியம் இரண்டையும் சேர்த்து 300 முதல் 400 °செ. வெப்பநிலைக்குச் சூடுபடுத்தியும் இலித்தியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.

வடிவமைப்பு[தொகு]

சோடியம் பொலோனைடு போலவே இலித்தியம் பொலோனைட்டுச் சேர்மமும் புளோரைட்டுக் கனிமத்தின் அமைப்புக்கு எதிரான படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. பக். 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236046. http://www.google.com/books?id=8qePsa3V8GQC. பார்த்த நாள்: சூன் 17, 2012. 
  2. 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 899. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA. 
  3. 3.0 3.1 Moyer, Harvey V. (1956), "Chemical Properties of Polonium", in Moyer, Harvey V. (ed.), Polonium, Oak Ridge, Tenn.: United States Atomic Energy Commission, pp. 33–96, doi:10.2172/4367751, TID-5221.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_பொலோனைடு&oldid=2052691" இலிருந்து மீள்விக்கப்பட்டது