செலூசியா
செலூசியா | |
---|---|
இருப்பிடம் | பாக்தாத் ஆளுநகரம், ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 33°5′40″N 44°31′20″E / 33.09444°N 44.52222°E |
வகை | குடியிருப்பு |
பரப்பளவு | 5.5 km2 (2.1 sq mi) |
வரலாறு | |
கட்டுநர் | செலூக்கஸ் நிக்காத்தர் |
கட்டப்பட்டது | கிமு 305 |
பயனற்றுப்போனது | கிபி 165 |
காலம் | எலனியக் காலம் |
கலாச்சாரம் | பண்டைய கிரேக்கம், பார்த்தியம், சாசானியம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1927–1932, 1936–1937, 1964–1968, 1985–1989 |
அகழாய்வாளர் | லெராய் வாட்டர்மென், கிளார்க் ஹோப்கின்ஸ், அந்தோனியா இன்வெர்நிஸ்சி, ஜியோர்சியா குல்லினி |
செலூசியா (Seleucia), பேரரசர் அலெக்சாந்தரின் படைத்தளபதியான செலூக்கஸ் நிக்காத்தர், (கிமு 305–281) எலனியக் காலத்தில் செலூக்கியப் பேரரசின் தலைநகரமாக புதிய செலூசிய நகரத்தை, தற்கால ஈராக் நாட்டின் பாக்தாத் ஆளுநகரத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கு கரையில் கிமு 305ல் நிறுவப்பட்டது. செலூசியா நகரம் 5.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. செலூக்கியப் பேரரசில் பொழிவுடன் விளங்கிய செலூசியா நகரம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து கிபி 165ல் முற்றிலும் சிதைந்து போனது. சிதைந்த இந்நகரத்தை 1927–1932, 1936–1937, 1964–1968 மற்றும் 1985–1989 ஆகிய ஆண்டுகளில் லெராய் வாட்டர்மென், கிளார்க் ஹோப்கின்ஸ், அந்தோனியா இன்வெர்நிஸ்சி மற்றும் ஜியோர்சியா குல்லினி போன்ற தொல்லியல் அறிஞர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
வரலாறு
[தொகு]செலூக்கியப் பேரரசின் ஆட்சியில்
[தொகு]எலனியக் காலத்தில் செலூக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தர் கிமு நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனது இரண்டாவது தலைநகராக செலூசியா நகரத்தை நிறுவினார். புதிய செலூசிய நகரத்திற்கு பாபிலோன் நகரத்து குடிமக்கள் குடியேற்றப்பட்டனர்.இருப்பினும் இவரது முதன்மை தலைநகரம், தற்கால சிரியா-துருக்கியில் எல்லையில் இருந்த அந்தியோக்கியா நகரம் ஆகும்.[1]
பார்த்தியப் பேரரசின் ஆட்சியில்
[தொகு]பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசர் முதலாம் அர்தசிர் (கிபி 211/2–224) ஆட்சிக் காலத்தில் செலுசியா நகரத்தில் தேவாலயங்கள் கட்டப்பட்டு கிறித்துவர்களின் வாழ்விடமாக மாறியது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seleucia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press.
உசாத்துணை
[தொகு]- "Seleucia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (9th) 21. (1886). New York: Charles Scribner's Sons.
- "Seleucia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press.
- Richard Talbert, Barrington Atlas of the Greek and Roman World, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-03169-X), p. 91.
- Oxford Classical Dictionary s. v.
- L.T. Doty, A Cuneiform Tablet from Tell Umar, Mesopotamia, vol. XIII-XIV, pp. 13–14 and 91-98, 1978–79
- G. Pettinato, Cuneiform Inscriptions Discovered at Seleucia on the Tigris», Mesopotamia, vol. V-VI, pp. 49–66, 1970–71
- A. Invernizzi, Ten Years Research in the al-Mada'in Area. Seleucia and Ctesiphon, Sumer, vol. 32, pp. 167–175, 1976
மேலும் காண்க
[தொகு]- University of Turin excavation web site
- "Seleucia". Jewish Encyclopedia. (1901–1906).