தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் | |
---|---|
சுருக்கக்குறி | தேமுதிக |
தலைவர் | காலஞ்சென்ற விஜயகாந்த்[1] |
நிறுவனர் | விஜயகாந்த் |
பொதுச் செயலாளர் | பிரேமலதா விஜயகாந்த் |
தொடக்கம் | 14 செப்டம்பர் 2005 |
தலைமையகம் | கேப்டன் ஆலயம், 125/7, ஜவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை – 600107, தமிழ்நாடு, இந்தியா. |
மாணவர் அமைப்பு | தேமுதிக மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | தேமுதிக இளைஞர் அணி |
பெண்கள் அமைப்பு | தேமுதிக பெண்கள் அணி |
தொழிலாளர் அமைப்பு | தேசிய முற்போக்குத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு |
கொள்கை | |
நிறங்கள் | மஞ்சள் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[2] |
கூட்டணி | அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 0 / 234 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
dmdkparty.com | |
இந்தியா அரசியல் |
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) 2005 செப்டம்பர் 14 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். விஜயகாந்த் இதன் நிறுவனத் தலைவர் ஆவார்.
கட்சிக் கொள்கைகள்
[தொகு]தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு:[3]
- “அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.
- அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம்.
- தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது.
- தீவிரவாதத்தை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும், ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது.
- அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் நதிகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது.
- தமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது.
- இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது.
- விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது.
- நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.
- ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம்.
2006 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
15வது மக்களவைத் தேர்தல்
[தொகு]15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது [4].
தொகுதி | வேட்பாளர்[5] | பெற்ற வாக்குகள் |
---|---|---|
திருவள்ளூர் (தனி) | சுரேஷ். | 110,452 |
வட சென்னை | யுவராஜ் | 66,375 |
தென்சென்னை | வி.கோபிநாத் | 67,291 |
மத்திய சென்னை | வி.வி.ராமகிருஷ்ணன் | 38,959 |
ஸ்ரீபெரும்புதூர் | மு.அருண் சுப்பிரமணியன். | 84,530 |
காஞ்சீபுரம் (தனி) | தமிழ்வேந்தன். | 103,560 |
அரக்கோணம் | லயன் எஸ்.சங்கர் | 82,038 |
வேலூர் | செளகத் ஷெரீப் | 62,696 |
கிருஷ்ணகிரி | பி.டி.அன்பரசன் | 97,546 |
தர்மபுரி | இளங்கோவன் | 103,494 |
திருவண்ணாமலை | எஸ்.மணிகண்டன் | 56,960 |
ஆரணி | இரா. மோகன் | 105,729 |
விழுப்புரம் | கணபதி | 127,476 |
கள்ளக்குறிச்சி | சுதீஷ் | 132,223 |
சேலம் | அழகபுரம் மோகன்ராஜ் | 120,325 |
நாமக்கல் | என். மகேஷ்வரன் | 79,420 |
ஈரோடு | முத்து வெங்கடேஸ்வரன். | 91,008 |
திருப்பூர் | திணேஷ்குமார் | 86,933 |
நீலகிரி (தனி) | செல்வராஜ். | 76,613 |
கோவை | ஆர்.பாண்டியன். | 73,188 |
பொள்ளாச்சி | கே.பி. தங்கவேல். | 38,824 |
திண்டுக்கல் | ப. முத்து வேல்ராஜ் | 100,788 |
கரூர் | ஆர்.ராமநாதன். | 51,196 |
திருச்சி | ஏ.எம்.ஜி. விஜயகுமார் | 61,742 |
பெரம்பலூர் | துரை.காமராஜ். | 74,317 |
கடலூர் | முன்னாள் அமைச்சர் தாமோதரன் | 93,172 |
சிதம்பரம் (தனி) | சபா சசிகுமார். | 66,283 |
மயிலாடுதுறை | ஜி.கே.பாண்டியன் | 44,754 |
நாகப்பட்டினம் (தனி) | மகா.முத்துக்குமார். | 51,376 |
தஞ்சாவூர் | டாக்டர் ராமநாதன். | 63,852 |
சிவகங்கை | பர்வத ரெஜீனா பாப்பா | 60,054 |
மதுரை | கே. கவிஅரசு | 54,419 |
தேனி | எம்.சி. சந்தானம் | 70,908 |
விருதுநகர் | க. பாண்டியராஜன் | 125,229 |
ராமநாதபுரம் | சிங்கை ஜின்னா. | 49,571 |
தூத்துக்குடி | சுந்தர் | 61,403 |
தென்காசி (தனி) | இன்பராஜ் | 75,741 |
திருநெல்வேலி | எஸ். மைக்கேல் ராயப்பன் | 94,562 |
கன்னியாகுமரி | எஸ். ஆஸ்டின் | 68,472 |
புதுச்சேரி | கே.ஏ.யூ. அசனா | 52,638 |
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்
[தொகு]2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[6]
16ஆவது மக்களவைத் தேர்தல்
[தொகு]இத்தேர்தலில் பாசக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.[7]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
[தொகு]மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.[8][9].
- தொகுதிப் பங்கீடு:
கட்சி/அணி | போட்டியிடவிருக்கும் தொகுதிகள் |
---|---|
தேமுதிக | 104 |
மக்கள் நலக் கூட்டணி + தமாகா | 130 |
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|
104 | 0 | 1034384 | 2.4 % .[10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-announcement-premalatha-vijayakanth-appointed-as-dmdk-general-secretary-477730
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-16. பார்க்கப்பட்ட நாள் 2009-04-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-09. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
- ↑ "தேமுதிகவுக்கு 41 இடங்கள் தென் மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளைக் கேட்கலாம்". Archived from the original on 2011-03-08. பார்க்கப்பட்ட நாள் 2011-03-08.
- ↑ "2014 லோக்சபா தேர்தல்".
- ↑ http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1485129
- ↑ "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. 19 மே 2016. Archived from the original on 2016-11-24. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.