பதுவை நகர அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 44: வரிசை 44:


புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
=== அர்ச் அந்தோணியாரின் புதுமைகள்===
அர்ச் அந்தோணியார் வாழும் போது மட்டும் அல்ல அவர் இறந்த போதும் பல புதுமைகளை செய்தார் . அவருடைய புதுமைகளை பார்த்த திருச்சபை அவரை ஒரே ஆண்டில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது. இனி நாம் அவருடைய புதுமைகளை பார்போம் .

அர்ச் அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1. அர்ச் அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.
அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும் போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.
2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.
1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.


சிறுவயதில்

அர்ச் அந்தோணியார் சிறு வயதிலே புதுமை செய்யும் வரம் பெற்று இருந்தார் அது என்ன என்றால் ஒரு முறை அவர்க்கு கோவிலுக்கு சென்று திவ்யபலி பூசை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது தந்தை அவரை வீட்டு தோட்டத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிடமல் அதை விரட்ட வேண்டு என்று அவர் தந்தை அவரிடம் சொன்னார். ஒரு பக்கம் பூசை செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் மறுபக்கம் பறவைகள். உடனே ஆண்டவரிடம் வேண்டினார் பறவைகளை எல்லாம்
அரண்மனைக்குள் செல்லுமாறு சொன்னார். அனைத்து பறவைகளும் அரண்மனைக்குள் சென்றது. அவர் சந்தோசத்துடன் பூசை பார்க்க சென்றார். அவரது தந்தை வந்த போது அந்தோணியாரை தோட்டத்தில் காண வில்லை. தந்தைக்கு கோபம். ஆனால் அந்தோனியார் நடந்ததை சொன்னார். அரண்மனையில் இருந்து பறவைகளை வெளியே விட்டார்.

குருமடத்தில்

அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.

தப்பறைகளின் சம்மட்டி

அந்தோணியார் தப்பறைகளுக்கு ஒரு சம்மட்டியாகவே இருந்தார். அதில் முக்கியமான மூன்று நிகழ்வுகளை பார்போம் ..
1.மீன்களுக்கு போதித்தல் ..........
அந்தோணியார் ஒரு மிக பெரிய போதகராக இருந்தாலும் அவரால் எல்லா நேரமும் மக்களை சர்வேசுரனுடைய வாக்கியத்திற்கு செவி கொடுக்க வைக்க இயலவில்லை. ஒரு நேரம் Rimini நகரிலே போதிக்க சென்றார். அங்கே ஒரு பதிதர்கள் அவர்கள் சர்வேசுரனுடைய வார்த்தைகளை வெறுத்தனர். எனவே ஒருவரும் அந்தோணியாரடைய வார்த்தைகளை கேட்க வரவில்லை.
அந்த நகரத்து மக்களை பார்த்து சர்வேசுரனுடைய வார்த்தைகளை கேட்டக முடியாதவர்களே உங்களுக்கு போதிப்பதை விட அந்த மீன்களுக்கு போதிப்பேன் என்று சொல்லி அங்கு இருந்த கடல் கரைக்கு சென்றார். அந்தோணியார் என்ன செய்கிறார் என்று பார்க்க அந்த பதிதர்கள் அவரை பின் சென்றனர்.


அந்தோணியார் கடல் ஓரத்திலே நின்று மீன்களை பார்த்து ஓ பாக்கியம் பெற்ற மீன்களே கடவுளின் வார்த்தை களை கேட்க வாருங்கள் என்று சொன்னார். சிறுது நேரத்தில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வரிசையாக நின்று அந்தோணியார் சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தன.பிரசங்கம் முடிந்த பிறகு அவைகளுக்கு அவர் ஆசீர் வழங்கி அவைகளை அனுப்பி விட்டார்.

2.தேவ நற்கருணையை கழுதை வணங்குதல்

ஒரு முறை பதிதன் ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

3. விஷம் சாப்பிடுதல்

அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார். அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.

ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர். அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள் யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது"
அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் அறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.


===இறப்பு===
===இறப்பு===

15:36, 11 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

பதுவை நகர புனித அந்தோனியார்
குழந்தை இயேசுவுடன் பதுவை நகர அந்தோனியார்
(ஓவியர்: அந்தோனியோ தே பெரெதா)
மறைவல்லுநர், மறைப்பணியாளர்
அவிசுவாசிகளின் சம்மட்டி
கோடி அற்புதர்
பிறப்பு(1195-08-15)15 ஆகத்து 1195
லிஸ்பன், போர்த்துகல்
இறப்பு(1231-06-13)சூன் 13, 1231 (அகவை 36)
பதுவை
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
புனிதர் பட்டம்30 மே 1232, ஸ்போலேத்தோ, இத்தாலி by ஒன்பதாம் கிரகோரி
முக்கிய திருத்தலங்கள்புனித அந்தோனியார் பேராலயம், பதுவை, இத்தாலி
திருவிழா13 ஜூன்
சித்தரிக்கப்படும் வகைபுத்தகம்; அப்பம்; குழந்தை இயேசு; லீல்லி மலர்
பாதுகாவல்அமெரிக்க பழங்குடியினர்; பிரேசில்; முதியோர்; நற்கருணை பக்தி; மீனவர்; அறுவடை; குதிரைகள்; இழந்துபோன பொருட்களைக் கண்டெடுக்கச் செய்கிறவர்; தபால்; மாலுமிகள்; ஒடுக்கப்பட்டோர்; வறியவர்; போர்த்துகல்; கர்ப்பிணிகள்; பசியுறுவோர்; பயணம் செய்வோர்; பரிசல்காரர்;

பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.

வாழ்க்கைக் குறிப்பு

இளமை

ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.

புனித அகுஸ்தீன் சபையில்

ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்சிஸ்கன் சபையில்

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.

மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.

அர்ச் அந்தோணியாரின் புதுமைகள்

அர்ச் அந்தோணியார் வாழும் போது மட்டும் அல்ல அவர் இறந்த போதும் பல புதுமைகளை செய்தார் . அவருடைய புதுமைகளை பார்த்த திருச்சபை அவரை ஒரே ஆண்டில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது. இனி நாம் அவருடைய புதுமைகளை பார்போம் .

அர்ச் அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1. அர்ச் அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.

           அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும்  போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு  சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.

2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.

            1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.


சிறுவயதில்

    அர்ச் அந்தோணியார் சிறு வயதிலே புதுமை செய்யும் வரம் பெற்று இருந்தார் அது என்ன என்றால் ஒரு முறை அவர்க்கு கோவிலுக்கு சென்று திவ்யபலி பூசை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது தந்தை அவரை வீட்டு தோட்டத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிடமல் அதை விரட்ட வேண்டு என்று அவர் தந்தை அவரிடம் சொன்னார். ஒரு பக்கம் பூசை செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் மறுபக்கம் பறவைகள். உடனே ஆண்டவரிடம் வேண்டினார் பறவைகளை  எல்லாம்

அரண்மனைக்குள் செல்லுமாறு சொன்னார். அனைத்து பறவைகளும் அரண்மனைக்குள் சென்றது. அவர் சந்தோசத்துடன் பூசை பார்க்க சென்றார். அவரது தந்தை வந்த போது அந்தோணியாரை தோட்டத்தில் காண வில்லை. தந்தைக்கு கோபம். ஆனால் அந்தோனியார் நடந்ததை சொன்னார். அரண்மனையில் இருந்து பறவைகளை வெளியே விட்டார்.

குருமடத்தில்

அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.

தப்பறைகளின் சம்மட்டி

அந்தோணியார் தப்பறைகளுக்கு ஒரு சம்மட்டியாகவே இருந்தார். அதில் முக்கியமான மூன்று நிகழ்வுகளை பார்போம் .. 1.மீன்களுக்கு போதித்தல் ..........

அந்தோணியார் ஒரு மிக பெரிய போதகராக இருந்தாலும் அவரால் எல்லா நேரமும் மக்களை சர்வேசுரனுடைய வாக்கியத்திற்கு செவி கொடுக்க வைக்க இயலவில்லை. ஒரு நேரம் Rimini நகரிலே போதிக்க சென்றார். அங்கே   ஒரு பதிதர்கள் அவர்கள் சர்வேசுரனுடைய வார்த்தைகளை வெறுத்தனர்.  எனவே ஒருவரும் அந்தோணியாரடைய வார்த்தைகளை கேட்க வரவில்லை. 

அந்த நகரத்து மக்களை பார்த்து சர்வேசுரனுடைய வார்த்தைகளை கேட்டக முடியாதவர்களே உங்களுக்கு போதிப்பதை விட அந்த மீன்களுக்கு போதிப்பேன் என்று சொல்லி அங்கு இருந்த கடல் கரைக்கு சென்றார். அந்தோணியார் என்ன செய்கிறார் என்று பார்க்க அந்த பதிதர்கள் அவரை பின் சென்றனர்.


அந்தோணியார் கடல் ஓரத்திலே நின்று மீன்களை பார்த்து ஓ பாக்கியம் பெற்ற மீன்களே கடவுளின் வார்த்தை களை கேட்க வாருங்கள் என்று சொன்னார். சிறுது நேரத்தில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வரிசையாக நின்று அந்தோணியார் சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தன.பிரசங்கம் முடிந்த பிறகு அவைகளுக்கு அவர் ஆசீர் வழங்கி அவைகளை அனுப்பி விட்டார்.

2.தேவ நற்கருணையை கழுதை வணங்குதல்

ஒரு முறை பதிதன் ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

3. விஷம் சாப்பிடுதல்

அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார். அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.

ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர். அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள் யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது" அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் அறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.

இறப்பு

1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.

1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.

ஆதாரங்கள்

  1. Purcell, Mary (1960). Saint Anthony and His Times. Garden City, New York: Hanover House. பக். 19, 275–6. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Anthony of Padua
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுவை_நகர_அந்தோனியார்&oldid=1399912" இலிருந்து மீள்விக்கப்பட்டது