மாந்தாதா, மத்தியப் பிரதேசம்
Appearance
ஓங்காரேஸ்வரர்
மாந்தாதா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°15′N 76°09′E / 22.25°N 76.15°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | காண்டுவா |
பெயர்ச்சூட்டு | ஓங்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MP |
வாகனப் பதிவு | எம். பி |

மாந்தாதா (Mandhata, also called Shivapuri or Mahismati), மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள காண்டுவா மாவட்டத்தில் உள்ள மாந்தாதா மலையில் பாயும் நர்மதை ஆற்றில் அமைந்த மாந்தாதா எனும் ஓம் வடிவ தீவுப் பகுதியின் தெற்கில் ஓங்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில் உள்ளது. இது ஓம்காரஸ்வரர் சாலை இரயில் நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]
முன்னர் அவந்தி நாட்டின் தலைநகரமாக மாந்தாதா விளங்கியது. மாந்தாதா ஆற்றுத் தீவு இரண்டு km (1.2 mi) நீளம் மற்றும் 1 km (0.62 mi) அகலம் கொண்டது. இங்குள்ள சிவலிங்கத்தை பண்டைய மன்னர் மாந்தாதா வழிப்பட்டதாகவும், இதனையே தனது தலைநகராகக் கொண்டதாக தொன்மக் கதைகள் கூறுகிறது.