பலராம்பூர்
பலராம்பூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பலராம்பூரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°26′N 82°11′E / 27.43°N 82.18°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
District | பலராம்பூர் |
ஏற்றம் | 106 m (348 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 82,488 |
• அடர்த்தி | 2,274/km2 (5,890/sq mi) |
மொழி | |
• அலுவல் | இந்தி[2] |
• கூடுதல் மொழி | உருது[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-47 |
பாலின விகிதம் | 912/1000♂/♀ |
இணையதளம் | www |
பலராம்பூர் (Balrampur) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்த பலராம்பூர் மாவட்டம் ம்ற்றும் பலராம்பூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[3] பலராம்பூர் நகரம் ரப்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகரம் லக்னோ பலராம்பூரிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 36.28 எக்டேர் பரப்பும், 28 வார்டுகளும், 12,638 குடியிருப்புகளும் கொண்ட பலராம்பூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 82488 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 42997 மற்றும் பெண்கள் 39491 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 10756 (13.04 %) ஆகும். சராசரி எழுத்தறிவு 67.75 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 53.60%, இசுலாமியர்கள் 44.66% மற்றும் பிற சமயத்தினர் 1.74% ஆக உள்ளனர். பலராம்பூர் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5436S & 35 ஆக உள்ளனர்[4][5]
வரலாற்று முக்கியத்துவம்
[தொகு]வழிப்போக்கர்களின் விரல்களை வெட்டி மாலையிட்டுக் கொள்ளும் குணம் படைத்த அங்குலிமாலானுக்கு[6][7] கௌதம புத்தர் அருள் புரிந்த சிராவஸ்தி நகரத்திற்கு 17 கிலோ மீட்டர் தொலைவில் பல்ராம்பூர் நகரம் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]27°26′N 82°11′E / 27.43°N 82.18°E பாகையில் அமைந்த பலராம்பூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[8]
தொல்லியல் களங்கள்
[தொகு]பலராம்பூர் நகரத்திற்கு அருகில் சிராவஸ்தி மற்றும் ஜேதவனம் போன்ற பௌத்த தொல்லியற்களங்கள் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India: Balrampur". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
- ↑ 2.0 2.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ "Rapti river is wreaking havoc in Balrampur district » Ampinity News". Ampinity News (in அமெரிக்க ஆங்கிலம்). 3 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Balrampur City Population Census 2011
- ↑ Balrampur Population Census 2011
- ↑ Murthy, K. Krishna (1 January 1987). Glimpses Of Art, Architecture And Buddhist Literature in Ancient India. Abhinav Publications. pp. 121–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-226-0. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
- ↑ Dhammika, Shravasti (2005). The Buddha and His Disciples. Buddhist Publication Society. pp. 59–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-24-0280-7. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
- ↑ "Balrampur, India Page". Global Gazetteer Version 2.2. Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
உசாத்துணை
[தொகு]- Chowhan, Thakur Baldeo Singh (2018). The Life of Maharaja Sir Digbijai Singh Bahadur K.C.S.I, Balrampur Estate, Oudh. Bloomsbury India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9387457613.
வெள் இணைப்புகள்
[தொகு]- "Balrampur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911).