நெபுலேசர்
𒀭𒀝𒌉𒍑𒌶 நபூ-அப்லா-உஃசூர் Nabû-apla-uṣur | |
---|---|
| |
மன்னர் நபோபலசாரின் உருளை முத்திரை | |
புது பாபிலோனியப் பேரரசின் மன்னர் | |
ஆட்சி | கிமு 626 – 605 |
முன்னிருந்தவர் | கந்தாலனு (பாபிலோனின் மன்னர்) |
பின்வந்தவர் | இரண்டாம் நெபுகாத்நேசர் |
பிறப்பு | கிமு 658 |
இறப்பு | கிமு 605 (அகவை 53) |
நபோபலசார் (Nabopolassar) (பிறப்பு: கிமு 658 - இறப்பு: கிமு 605) பாபிலோனியாவின் மன்னர் ஆவார்.[1] இவ்ர் பாபிலோன் நகரத்தை தலைநகராகக் கொண்டு கிமு 626 முதல் 605 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் புது பாபிலோனியப் பேரரசை நிறுவியர் ஆவார். இவர் கிமு 616-இல் மெசொப்பொத்தேமியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.[2] இவர் மீடியாப் பேரரசு மற்றும் பிற்கால எகிப்தியர்களுடன் கூட்டமைத்து, புது அசிரியப் பேரரசுடன் மோதினார். இவர் கிமு 615-இல் புது அசிரியப் பேரரசின் நிப்பூர் இராச்சியத்தை கைப்பற்றினார்.[3]
புது அசிரியப் பேரரசு வாரிசுச் சண்டை மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளால் நலிவுற்றதால், பாபிலோனியர்கள் மற்றும் மீடியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.[4] கிமு 612-இல் மன்னர் நபோபலசாரின் பாபிலோனியப் படைகளும், மீடியர்களின் படையும் இணைந்து, புது அசிரியப் பேரரசின் தலைநகரமான நினிவேவைக் கைப்பற்றினர்.[5]
பின்னர் புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்-உபாலித் தங்கியிருந்த மேல் மெசொப்பொத்தேமியாவின் (வடக்கு சிரியா) அரான் நகரத்தை கிமு 610-இல் நபோபலசாரின் படைகள் கைப்பற்றியது.[6]
கிமு 609-இல் பிற்கால எகிப்திய மன்னரான இரண்டாம் நெக்கோவின் படைகள், அசிரியப் படைகளுக்கு உதவியது. கிமு 605-இல் நபோபலசார், மறைவிற்குப் பின்னர் பட்டத்து இளவரசன் இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனி அரியணை ஏறினார்.
நபோபலசார் மற்றும் அவரது மகன் இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் சிகூரட்டுகளை சீரமைத்தனர். மேலும் பாபிலோனியர்களின் மர்துக் கடவுள் கோயில்களையும் சீரமைத்தனர்.[7]
1921-இல் நபோபலசாரின் ஆப்பெழுத்துகளுடன் உருளை முத்திரையை தற்கால ஈராக் தலைநகரான பாக்தாத் நகரத்தில் கண்டுபிடித்தனர்[8]) இந்த உருளை முத்திரையில் தனது வெற்றிகளை குறித்தும், மர்துக் மற்றும் பிற கடவுள்கள் மீதான தனது பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.[9]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brendan Nagle, D. (2013-12-06). The Ancient World: A Social and Cultural History. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780205967506.
- ↑ Mieroop, Marc Van De (2015-06-25). A History of the Ancient Near East, ca. 3000-323 BC. p. 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118718179.
- ↑ Sack, Ronald Herbert (2004). Images of Nebuchadnezzar: The Emergence of a Legend. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575910796.
- ↑ Livius
- ↑ "Nabopolassar - Livius". www.livius.org. Archived from the original on 2015-04-23. பார்க்கப்பட்ட நாள் 2020-12-22.
- ↑ ""The fall of Nineveh, capital of the Assyrian Empire", The British Museum". Archived from the original on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ Lloyd, Seton H.F., "Mesopotamian art and architecture", Encyclopædia Britannica, July 17, 2014
- ↑ The Fifty Names of Marduk பரணிடப்பட்டது 2020-02-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Nabopolassar Cylinder". www.kchanson.com.
மேலும் படிக்க
[தொகு]- Da Riva, Rocío (2017). "The Figure of Nabopolassar in Late Achaemenid and Hellenistic Historiographic Tradition: BM 34793 and CUA 90". Journal of Near Eastern Studies 76 (1).
வெளி இணைப்புகள்
[தொகு]- ABC 2: Chronicle Concerning the Early Years of Nabopolassar
- ABC 3: Chronicle Concerning the Fall of Nineveh
- ABC 4: Chronicle Concerning the Late Years of Nabopolassar
- Nabopolassar Cylinder