உன்னாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னாவ்
நகரம்
Iitjhostels.JPG
Nawabganj Bird Sanctuary, Unnao 03.JPG
Unnaocityhospital.jpg
Unnaogate.jpg
கடிகாரச் சுற்றுப்படி; மேலிருந்து:கான்பூர் மேலாண்மை படிப்பு நிறுவனம், உன்னாவ் மருத்துவமனை, உன்னாவ் வெளி வட்டச்சாலையின் நுழைவாயில், நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம்
அடைபெயர்(கள்): ஏரிகளின் நகரம்[1] Land of Pen and Sword
உன்னாவ் is located in உத்தரப் பிரதேசம்
உன்னாவ்
உன்னாவ்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°33′N 80°29′E / 26.55°N 80.49°E / 26.55; 80.49ஆள்கூறுகள்: 26°33′N 80°29′E / 26.55°N 80.49°E / 26.55; 80.49
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
கோட்டம்லக்னோ
மாவட்டம்உன்னாவ்
தோற்றுவித்தவர்உன்வந்த் ராய் சிங் (उनवंत राय सिंह)
பெயர்ச்சூட்டுஉன்வந்த் ராய்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்உன்னாவ் நகராட்சி
 • தலைவர்உஷா கத்தியார் [2]
பரப்பளவு
 • மொத்தம்60 km2 (20 sq mi)
ஏற்றம்123 m (404 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்177,658
 • அடர்த்தி3,000/km2 (7,700/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி, உருது
 • எழுத்தறிவு75%
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்209801
தொலைபேசி குறியீடு எண்91-515
வாகனப் பதிவுUP-35
இணையதளம்unnao.nic.in

உன்னாவ் (Unnao), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் நடுவில் உள்ள் உன்னாவ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது லக்னோ மற்றும் கான்பூர் நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது லக்னோவிலிருந்து 65.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; கான்பூரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

உன்னாவ் நகரம் தோல் பதனிடுதல் தொழிற்சாலை, கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் சித்திரத்தையல் எனும் சர்தோசி வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 29 வார்டுகளும், 33,273 வீடுகளும் கொண்ட உன்னாவ் நகரத்தின் மக்கள் தொகை 177,658 ஆகும். அதில் ஆண்கள் 93,021 மற்றும் பெண்கள் 84,637 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 910 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19,980 (11%)ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 24,263 மற்றும் 172 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 73.55%, இசுலாமியர் 25.75, சீக்கியர்கள் 0.29% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

உன்னாவ் இரயில் நிலையம்

உன்னாவ் தொடருந்து நிலையம் [4]லக்னோ-கான்பூர் இருப்புப் பாதை வழித்தடத்தில் உள்ளது. உன்னாவ் இரயில் நிலையம் கோரக்பூர், லக்னோ, கான்பூர், அகமதாபாத், போபால், நாக்பூர், சென்னை, பாலக்காடு, புவனேஸ்வர், மும்பை, பாட்னா, சூரத் உஜ்ஜைன் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைப்போக்குரவரத்து[தொகு]

உன்னாவ் சுற்று வட்டச்சாலை

தேசிய நெடுஞ்சாலை 25 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 78 உன்னாவ் நகரம் வழியாகச் செல்கிறது.

வானூர்தி நிலையம்[தொகு]

இதன் அருகமைந்த வானூர்தி நிலையம் கான்பூர் வானூர்தி நிலையம் 25 கிலோ மீட்டர் தொலைவிலும்; லக்னோ வானூர்தி நிலையம் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், உன்னாவ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
32
(90)
40
(104)
44
(111)
46
(115)
48
(118)
41
(106)
38
(100)
38
(100)
36
(97)
32
(90)
28
(82)
48
(118)
உயர் சராசரி °C (°F) 18
(64)
24
(75)
29
(84)
35
(95)
40
(104)
41
(106)
35
(95)
34
(93)
32
(90)
30
(86)
25
(77)
20
(68)
33
(91)
தாழ் சராசரி °C (°F) 6
(43)
12
(54)
14
(57)
20
(68)
22
(72)
25
(77)
26
(79)
23
(73)
22
(72)
16
(61)
12
(54)
7
(45)
15
(59)
பதியப்பட்ட தாழ் °C (°F) -3
(27)
6
(43)
7
(45)
15
(59)
17
(63)
20
(68)
21
(70)
18
(64)
19
(66)
15
(59)
9
(48)
0
(32)
−3
(27)
பொழிவு mm (inches) 23
(0.91)
16
(0.63)
9
(0.35)
5
(0.2)
6
(0.24)
68
(2.68)
208
(8.19)
286
(11.26)
202
(7.95)
43
(1.69)
7
(0.28)
8
(0.31)
881
(34.69)
ஆதாரம்: [5]

மேற்கோள்கள்[தொகு]

1.https://m.timesofindia.com/city/lucknow/up-now-home-to-8-ramsar-wetlands/amp_articleshow/79253169.cms

  1. "तालाबी भूमि में अतिक्रमण पर डीएम से मांगी रिपोर्ट - Jagran Yahoo! India". In.jagran.yahoo.com. 2012-11-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "PressReader.com - Digital Newspaper & Magazine Subscriptions".
  3. Unnao Population, Religion, Caste, Working Data Unnao, Uttar Pradesh - Census 2011
  4. Unnao Junction railway station
  5. "Unnao". 25 March 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னாவ்&oldid=3593672" இருந்து மீள்விக்கப்பட்டது