கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசுவரன் கோவில் ( Ishvara Temple ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின்ஹாசன் மாவட்டத்திலுள்ளஅரசிகெரே நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது பொ.ச. 1220இல் போசளர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. வரலாற்று நகரமான மைசூருக்கு வடக்கே 140 கி.மீ தூரத்திலும், ஹாசன் நகரிலிருந்து கிழக்கே 41 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. [1] இக்கோயில் இந்து மதக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிற்பங்களின் அளவு மிதமானதாக இருந்தாலும், அதன் தரைத் திட்டத்தின் காரணமாக எஞ்சியிருக்கும் போசளர் கட்டிடக்கலை]]களுக்கு ஒரு சிறப்பான எடுத்துகாட்டாகும். ஒரு மேடை மீது அமைந்துள்ள மண்டபத்தை கொண்டுள்ளது. மேலும், 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளன. மேலுள்ள விமானமும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன. 16 முனைகளைக் கொண்டிருப்பதால் இது வட்டமான வடிவம் கொண்டதுபோல் தெரிகிறது. [2]
இந்த கோயில் அனைத்து போசள கட்டுமானங்களைப் போலவே கிழக்கு நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. [3] மேலும் இது இரண்டு மண்டபங்களால் இணைக்கப்பட்டுள்ளது. [4] இரண்டு அலகுகளும் ஒரு ஒற்றுமையை உருவாக்க இணைக்கப்பட்டுள்ளன. [5] கருவறைகளில், சிவனைக் குறிக்கும் எளிமையான இலிங்க வடிவங்கள் உள்ளன. [6][7] பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் நுழைவாயில் இரண்டு மண்டபங்களுக்கு இடையில் ஒரு பாதையாக [8] உள்ளது.
அரசிகெரேவிலுள்ள ஈஸ்வரர் கோயில்
கோயொல் மண்டபம்
கோவிலிலுள்ள சன்னதியின் வெளிப்புற சுவர் சிற்பங்களின் வேலைப்பாடு
↑Quote:"In staggered square halls, the wall forms many projections and recesses, each projection bearing a complete architectural articulation with many decorations", (Foekema 1996, p. 21)
↑Quote:"A square compartment of a hall", (Foekema 1996, p. 93)
Gowda, Aswathanarayana (2006). Blazing trail of Golden Era-Tourism guide of Hassan district. Hassan: District Tourism Council, Government of Karnataka.
Settar S. "Hoysala heritage". history and craftsmanship of Belur and Halebid temples. Frontline. Archived from the original on 2006-07-01. பார்க்கப்பட்ட நாள் 2006-11-13.
Hardy, Adam (1995). Indian Temple Architecture: Form and Transformation-The Karnata Dravida Tradition 7th to 13th Centuries. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7017-312-4.
Kamath, Suryanath U. (2001). A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. இணையக் கணினி நூலக மையம்:7796041.