கேதாரேஸ்வரர் கோயில்
தோற்றம்
கேதாரேஸ்வரர் கோயில், ஹளேபீடு | |
|---|---|
கேதாரேஸ்வரர் கோயில், பொ.ஊ. 1173–1219 | |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| மாவட்டம் | ஹசன் மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 573121 |

கேதாரேஸ்வரர் கோயில் (Kedareshwara Temple), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹசன் மாவட்டத்தில், ஹளேபீடு எனும் இடத்தில், போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது. கேதாரேஸ்வரர் கோயில் மிக அருகில் ஹோய்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. போசள மன்னர் இரண்டாம் வீர வல்லபனால் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளது.[1][2] இக்கோயில் மூன்று கோபுரங்களைக் கொண்டது. சிவன், விஷ்ணு ஆகியோர்க்குத் தனித்தனி கோபுரங்களும் சன்னதிகளும் கொண்டது. மேலும் பைரவர், கோவர்தனன், வரதராஜர் சிற்பங்கள் கொண்டது.[2]மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்புகளின் போது இக்கோயிலும் பாழடிக்கப்பட்டது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑
- "Alphabetical List of Monuments – Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. Retrieved 12 ஏப்ரல் 2013.
- 1 2 "Kedaresvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 2014-07-20. Retrieved 12 ஏப்ரல் 2013.
மேற்கோள்கள்
[தொகு]- Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples, Abhinav, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-345-0
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka: from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. OCLC 7796041.
- Adam Hardy, Indian Temple Architecture: Form and Transformation : the Karṇāṭa Drāviḍa Tradition, 7th to 13th Centuries, Abhinav, 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-312-4.
- "Alphabetical List of Monuments – Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. Retrieved 12 ஏப்ரல் 2013.
- "Kedaresvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 2014-07-20. Retrieved 12 ஏப்ரல் 2013.