தர்மசாலா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தர்மசாலா கோயில்
தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலின் நுழைவு வாயில்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Karnataka" does not exist.
பெயர்
தேவநாகரி:क्षेत्र धर्मस्थल
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு:Kṣētra Dharmasthala
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா
மாவட்டம்:தெற்கு கன்னடம் மாவட்டம்
அமைவு:தர்மஸ்தலா
ஆள்கூறுகள்:12°57′36″N 75°22′42″E / 12.96012°N 75.37836°E / 12.96012; 75.37836ஆள்கூற்று: 12°57′36″N 75°22′42″E / 12.96012°N 75.37836°E / 12.96012; 75.37836
கோயில் தகவல்கள்
மூலவர்:மஞ்சுநாதர் (சிவன்) & சந்திரபிரபா
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, இலட்ச தீப உற்சவம்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி பி 1200
அமைத்தவர்:வீரமன்னா பெர்கடே
இணையதளம்:www.shridharmasthala.org

தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் (Dharmasthala Temple) (கன்னடம்/துளு:ಶ್ರೀ ಕ್ಷೇತ್ರ ಧರ್ಮಸ್ಥಳ) (சமக்கிருதம்: क्षेत्र धर्मस्थल, 800 ஆண்டு பழமையான[1] மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது.

இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர். [2]

தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர். ஆனால் கோயில் பூசைகளை மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைண அந்தணர்கள் கோயில் பூசைகள் செய்கின்றனர்.

வரலாறு[தொகு]

800 ஆண்டுகளுக்கு முன்னர் குடுமா கிராமத்தில் (தற்கால தர்மஸ்தலா) வாழ்ந்த சமணரான வீரமன்னா பெர்கடே என்பவரின் கனவில் தோன்றிய தர்மதேவதை, இத்தலத்தில் மஞ்சுநாதர், சந்திரபிரபா, குமாரசுவாமி மற்றும் கன்னியாகுமரி தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுவி வழிபடச் சொன்னார். அதன் படியே வீரமன்னா பெர்கடேயும் நான்கு தெய்வங்களுக்கும் சன்னதிகள் எழுப்பி வழிபட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. David, Stephen. "Heavenly Post". India Today. பார்த்த நாள் 17 June 2002.
  2. 2.0 2.1 Long, Roger D; Wolpert, Stanley A. (2004). Charisma and Commitment in South Asian History. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-2641-9. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மசாலா_கோயில்&oldid=2432154" இருந்து மீள்விக்கப்பட்டது