சித்ராபூர் மடம்
ஸ்ரீ சித்ராபூர் மடம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | வடகன்னட மாவட்டம் |
அமைவு: | சிராலி |
ஆள்கூறுகள்: | 14°01′52″N 74°32′06″E / 14.031071°N 74.534871°E |
கோயில் தகவல்கள் |
ஸ்ரீ சித்ராபூர் மடம் (Shri Chitrapur Math) என்பது சித்ராபூர் சரஸ்வத் பிராமணப் பிரிவின் மைய மடமாகும் (சமுதாயக் கோயில்). இந்த மடமானது கர்நாடகாவின் வட கன்னட மாவட்டத்திலுள்ள பத்கல் வட்டத்தில் உள்ள சிராலியில் அமைந்துள்ளது. மேலும் பொ.ஊ. 1757 முதல் அங்கு உள்ளது. இந்த சமூகத்தின் மற்ற மடங்கள் கோகர்ணம், கர்லா, மங்களூர், மல்லாபூர் ஆகிய இடங்களில் உள்ளன. எல்லா மடங்களும் கீழே காட்டப்பட்டுள்ளபடி குங்குமப்பூ வண்ணத்தில் கொடியின் அடையாளத்தைக் கொண்டுள்ளன.
இந்த மடத்தில் வழிபடும் பிரதான தெய்வம் ஸ்ரீ பவானிசங்கர் (கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது) இவர் சிவ பெருமானின் வடிவம். கோயிலில் புவனேசுவரி தேவி, மகாகநபதி, ஆதி சங்கராச்சாரியார் சன்னதி உட்பட 6 கருவறைகள் உள்ளனர். மேலும், முந்தைய குருமார்களின் சமாதிகளும் இங்குள்ளது. பவானிசங்கர் சன்னதியிலும், பிற குருமார்களின் சன்னதியிலும் தினசரி பூசை மேற்கொள்ளப்படுகிறது. மடத்தின் மைதானத்தில் சிவகங்கை ஏரி, தியான மண்டபம், சாப்பாட்டுக் கூடம், பசுக்கூடம் ஆகியவையும் உள்ளன.
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி ஸ்ரீ சத்யோஜத் சங்கராசிரமம் சுவாமிஜி இந்த வம்சத்தின் பதினொன்றாவது குருவாவார்.
சித்ராபூர் சரஸ்வத் பிராமணர்கள்
[தொகு]இப்பகுதியில் சரஸ்வத் பிராமணர்கள் கொங்கணி மொழி பேசும் ஒரு சிறிய இனக்குழுவாக இருக்கின்றனர்.[1] சித்ராபூர் மடம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மடத்தை பின்பற்றுபவர்களென இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.[2] இந்தச் சமூகம் சாரஸ்வத் பிராமணர்கள், சரஸ்வதாக்கள் மற்றும் பனபாரு என்றும் அழைக்கப்படுகிறது.
சித்ராபூர் தேர் விழா
[தொகு]இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணிமயில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இதில் மடத்தின் குரு இங்குள்ள தெய்வங்களுக்கு பல்வேறு சடங்குகளை நிகழ்த்துகிறார். சில அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணங்களுக்காக, இத் திருவிழா நிறுத்தப்பட்டது. பின்னர் மறுதொடக்கம் செய்யப்பட்டு இன்றும் தடையின்றி தொடர்கிறது.[3]
சமூக சேவை
[தொகு]இந்த மடம் ஆன்மீகத்துடன் சமூகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
மடத்தில் சிராலி, மல்லாபூர், மங்களூர், கோடேகர், கர்லா மற்றும் விரார் போன்ற பகுதிகளில் பள்ளிகளை நடத்துகின்றன.[4][5] பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக சுய உதவி குழுக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'சம்வித் சுதா' என்ற ஒரு தையல் பயிற்சி மையமும், கை காகித தொழிற்சாலையும் அமைத்துள்ளனர். மேலும், கழிப்பறை கட்டுமானம் மற்றும் நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூரில் இலவச சுகாதார மையத்தையும் அமைத்துள்ளனர்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.angelfire.com/sc/saraswat/bhanaps.html
- ↑ https://talageri.blogspot.com/2016/05/the-chitrapur-saraswat-community.html
- ↑ ಸಂತೋಷಕುಮಾರ್ ಗುಲ್ವಾಡಿ, ಶ್ರೀ ಚಿತ್ರಾಪುರ ರಥೋತ್ಸವ, ಮಹೇಶ್ ಪಬ್ಲಿಕೇಷನ್, ಮುಂಬೈ
- ↑ http://www.parijnanfoundation.in/Parimochan.aspx
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
- ↑ http://www.parijnanfoundation.in/HMPP.aspx
இந்த புத்தகங்கள் அனைத்தும் சித்ராபூர் மடத்தில் கிடைக்கின்றன
- Kanara Saraswat
- Guru-Parampara - The Book
- 50 Years of Bliss, Gopal S Hattiangdi, Bombay, 1965. via https://web.archive.org/web/20191118100127/http://www.chitrapurebooks.com/
- Interview with Chitrapur Math Managers and Staff