உள்ளடக்கத்துக்குச் செல்

பத்கல்

ஆள்கூறுகள்: 13°58′01″N 74°34′01″E / 13.967°N 74.567°E / 13.967; 74.567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்கல்
பத்கல்
Location in Karnataka, India##Location in India
Location in Karnataka, India##Location in India
பத்கல்
Location in Karnataka, India##Location in India
Location in Karnataka, India##Location in India
பத்கல்
ஆள்கூறுகள்: 13°58′01″N 74°34′01″E / 13.967°N 74.567°E / 13.967; 74.567[1]
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வடகன்னட மாவட்டம்
அரசு
 • வகைபத்கல் நகரவை
 • நிர்வாகம்பத்கல் நகர மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்355.50 km2 (137.26 sq mi)
ஏற்றம்
3 m (10 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,61,576
 • அடர்த்தி450/km2 (1,200/sq mi)
இனங்கள்பத்கலி, பத்கலித்துகள்
மொழிகள்
 • அலுவல்நவயாத்தி
 • பிராந்தியம்நவயாத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
581320
தொலைபேசி இணைப்பு எண்+91-8385
வாகனப் பதிவுகேஏ-47

பத்கல் (Bhatkal) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மும்பை மற்றும் கன்னியாகுமரி இடையே இயங்கும் தேசிய நெடுஞ்சாலை 66 இல் பத்கல்லில் அமைந்துள்ளது. மேலும் மும்பை மற்றும் மங்களூர் இடையே இயங்கும் கொங்கண் இருப்புப்பாதையில் ஒரு பெரிய தொடருந்து நிலையம் உள்ளது .

வரலாறு

[தொகு]

ஆரம்ப நாட்களில், இங்கு முக்கியமாக சமண மற்றும் இந்து மதங்களைப் பின்பற்றுபவர்கள் அதிக அளவில் வசித்து வந்ததனர். ஆனால் படிப்படியாக பிற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு குடியேறத் தொடங்கினர். ஜோக் அருவியை நோக்கி மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஹத்வள்ளி கிராமத்தைச் சேர்ந்த, பத்தக்கலங்கன் என்ற சைனத் துறவியின் பெயரிலேயே பத்கல் என்று பெயரிடப்பட்டது. சராவதி ஆறு வடக்கே சில மைல்கள் பாயும் நிலையில், இந்த நகரம் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ளது. பத்கல் பல வம்சங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது விஜயநகரப் பேரரசின் கைகளில் விழுவதற்கு முன்பு 1291 முதல் 1343 வரை போசளப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. போசளர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஹத்வல்லியை தளமாகக் கொண்ட சாளுவ (சைனம்) ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

ஆரம்ப வரலாறு

[தொகு]

இங்கு, சாளுவர்களின் ஆட்சியில் ஏராளமான கோவில்கள் மற்றும் தளங்கள் கட்டப்பட்டன. இந்த காலத்தின் சான்றுகளை முட்பட்கலில் காணலாம், அங்கு ஒரு சில கோயில்கள் அந்த சகாப்தத்தின் மகத்துவத்திற்கு ஒரு சான்றாக இன்னும் நிற்கின்றன. ஈராக்கு, ஈரான், யெமன், ஜோர்தான், சவூதி அரேபியா, ஓமான், அல்ஜீரியா, எகிப்து, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து மசாலாப் பொருட்கள், தோல், நகைகள் மற்றும் அரேபியக் குதிரைகள் போன்றவற்றின் வர்த்தகர்களாக இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு நவயாத்துகள் வந்தனர். அவர்கள் அங்கு குடியேறி, இந்தியாவின் மற்றொரு வர்த்தக சமூகமான சமணர்களிடையே திருமண உறவுகளை மேற்கொண்டனர். அவர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இசுலாமிற்கு மாற்றப்பட்டனர். இது ஒரு புதிய சமூகத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

சோழர்கள்

[தொகு]

ஆதித்த சோழன், அவரது மகன் முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தக சோழன் எனப்படும் சுந்தர சோழன் ஆகியோரின் கீழ் சோழர்கள் ஆரம்பத்தில் கன்னட நாட்டில், மைசூர் பீடபூமியில் கங்கவாடிக்கும், சக்யாத்ரி கடற்கரையில் பத்கலுக்கும் இடையில், பொ.ச. 880 மற்றும் பொ.ச. 975 க்கு இடையில் படையெடுத்து கைப்பற்றினர். பின்னர் அவர்கள் இப்பகுதியில் வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் சோழீசுவரர் கோயில்களைக் கட்டினர்.

பிற்காலம்

[தொகு]

போர்த்துகீசியர்கள் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்கலில் தங்கள் இருப்பைக் குறித்தனர். விஜயநகர பேரரசின் பேரரசர் கிருஷ்ணதேவராயர் 1510 இல் நகரத்தில் ஒரு கோட்டை கட்ட அனுமதித்தார்.[2] கெலாடி ஆட்சியாளர்களிடமிருந்து, பத்கல் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தானிடம் சென்றது. ஹைதர் அலி தனது புதிதாக கட்டப்பட்ட கடற்படைக்கு கனரா கடற்கரையில் பத்கலை பிரதான தளமாக மாற்றினார். திப்பு சுல்தான் பத்கலை ஒரு முக்கியமான துறைமுகமாக மாற்றி ஒரு பள்ளி வாசலையும், தனது பெயர் ஒரு தெருவையும் கட்டினார். திப்புவின் மனைவிகளில் ஒருவர் பத்கலைச் சேர்ந்தவர். திப்பு ஆங்கிலேயருக்கு எதிரான போரில் இறந்த பின்னர் 1799 இல் பிரித்தானியர்களின் கைகளுக்கு வந்தது.

போக்குவரத்து

[தொகு]

பத்கல் இந்தியாவின் பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களுடன் சாலைகள் மற்றும் இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 66 இந்நகரத்தை கடக்கிறது. இது அதன் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொங்கண் இருப்புப்பாதையின் கீழ், பல தொடர் வண்டிகள் செல்கின்றன. மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம், கோவா சர்வதேச விமான நிலையம் ஆகிய இரண்டும் அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆகும்.

புள்ளிவிவரங்கள்

[தொகு]
பத்கலில் சமயம் (2011)[3]
சதவீதம்
முசுலிம்
64.59%
இந்து
33.17%
கிறிஸ்தவர்
2.05%
சைனம்
0.13%
Others†
0.01%
மதப் பரவல்
சீக்கியம் (0.02%), பௌத்தம் (0.01%) உட்பட.

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, பத்கலில் சுமார் 161,576 என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ளது. இவர்களில் 49.98% ஆண்களும் 50.02% பெண்களும் ஆவர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 74.04%, முறையே 78.72% ஆண்களில் கல்வியறிவும் பெண்களில் 69.36% கல்வியறிவும் பெற்றுள்ளனர். நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 11% 6 வயதுக்குட்பட்டவர்கள். மொத்த மக்கள்தொகையில் பட்டியல் சாதியினர் 8.87%, பட்டியல் பழங்குடியினர் 5.67%.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc – Bhatkal
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  3. "பத்கல் பிராந்திய தரவு 2011". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
  4. "Census of India – Population Enumeration Data (Final Population)". Census of India 2011. The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்கல்&oldid=3806406" இலிருந்து மீள்விக்கப்பட்டது