வீரநாராயணர் கோயில்
வீரநாராயணர் கோயில், பெலவாடி | |
---|---|
![]() | |
கர்நாடகாவில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கர்நாடகா |
மாவட்டம்: | சிக்மகளூரு மாவட்டம் |
ஆள்கூறுகள்: | 13°16′57″N 75°59′50″E / 13.282594°N 75.99726°Eஆள்கூறுகள்: 13°16′57″N 75°59′50″E / 13.282594°N 75.99726°E |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | நரசிம்ம ஜெயந்தி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | போசளர் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | +91 9035041518 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கிபி 1200 |
அமைத்தவர்: | இரண்டாம் வீர வல்லாளன் |
வீரநாராயணர் கோயில் (Veera Narayana temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.
போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோயில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள், வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.
சன்னதிகள்[தொகு]
வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.[1]
கட்டிடக்கலை[தொகு]
போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன், கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில், பச்சை நிற சோப்புக்கல் பாறைகளால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று கிருட்டிணன், நரசிம்மர் மற்றும் சன்னதிகள் உள்ளது. [2]
மூன்று சன்னதிகளும் கோபுரங்களுடன் கூடியது. பேளூரில் மற்றும் ஹளேபீடுவில் உள்ள கோயில்கள் நுண்ணிய அழகியச் சிற்பங்களுக்கும், வீரநாராயணர் கோயில் அழகியக் கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது. [3]
இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது. [4] இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது. இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன், பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது. [5]
இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.[6]
கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.
படக்காட்சிகள்[தொகு]
கோபுரம் விமானத்தின் காட்சி
போசளர் கட்டிடக்கலையில் அமைந்த கோயில்
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ I Sesunathan. "Belavadi exudes Hoysala's beauty". Spectrum, Deccan Herald, Tuesday, May 9, 2006. Decan Herald. 2007-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-26 அன்று பார்க்கப்பட்டது..
- ↑ Kamath (2001), p136. Quote:"The Western Chalukya carvings were done on green schist பாறைக பச்சை நிறங்கொண்ட (சோப்புக்கல் பாறைகள் Soapstone]]). This technique was adopted by the போசளப் பேரரசு Hoysalas", Takeo Kamiya. "Architecture of the Indian subcontinent, 20 September 1996". Gerard da Cunha-Architecture Autonomous, Bardez, Goa, India. 2015-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Foekema (1996), p53
- ↑ Quote:"A bay is a square or rectangular compartment in the hall", Foekema (1996), p93
- ↑ Quote:"This is a common feature of Western Chalukya-Hoysala temples", Kamath (2001), p117
- ↑ Quote:"The Kalasha is the water pot like structure at the peak of the tower", Foekema (2001), p27
மேற்கோள்கள்[தொகு]
- Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples, Abhinav, 1996 ISBN 81-7017-345-0
- Dr. Suryanath U. Kamath, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, 2001, MCC, Bangalore (Reprinted 2002)
- "Belavadi exudes Hoysala's beauty". Spectrum, Deccan Herald, May 9, 2006. 2007-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-26 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|work=
(உதவி) - "Architecture of the Indian Subcontinent". 2015-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-26 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Chikamagalur City Municipal Council பரணிடப்பட்டது 2006-11-06 at the வந்தவழி இயந்திரம்