உள்ளடக்கத்துக்குச் செல்

அரசிகெரே

ஆள்கூறுகள்: 13°18′50″N 76°14′13″E / 13.3139°N 76.2369°E / 13.3139; 76.2369
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சிகெரே
அரசிகெரே
நகரம்
அரசிகெரே மலை
அரசிகெரே மலை
அர்சிகெரே is located in கருநாடகம்
அர்சிகெரே
அர்சிகெரே
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 13°18′50″N 76°14′13″E / 13.3139°N 76.2369°E / 13.3139; 76.2369
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசன் மாவட்டம்
தோற்றுவித்தவர்போசளப் பேரரசின் அரசி ராணி
அரசு
 • நிர்வாகம்கர்நாடக அரசு
 • சட்ட மன்ற உறுப்பினர்கே. எம். சிவலிங்க கௌடா
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
ஏற்றம்
806 m (2,644 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்53,216
 • அடர்த்தி6,700/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
PIN
573,103
தொலைபேசி குறியீடு573103
வாகனப் பதிவுகேஏ-13
இணையதளம்www.arasikeretown.gov.inwww.arasikere.in
மாலேகல்லு கோயில்
தொடர்வண்டி நிலையம்

அரசிகெரே (Arsikere) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் வட்டமுமாகும். இந்த பகுதி அதன் தேங்காய் உற்பத்தி மற்றும் கர்நாடகாவின் இரண்டாவது பெரிய தேங்காய் சந்தையான திப்தூருக்குப் பிறகு மாலேகல்லு திருப்பதி மலையுடன் அறியப்படுகிறது. தென்மேற்கு தொடருந்து மண்டலத்திலுள்ள ஒரு முக்கிய இரயில் சந்திப்பான இது மங்களூர் மற்றும் மைசூரை வட கர்நாடகாவுடன் இணைக்கிறது. மேலும், பேளூர், ஹளேபீடு மற்றும் சரவணபெலகுளா போன்ற இரயில் வசதி இல்லாத அருகிலுள்ள இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான மைய இடமாக திகழ்கிறது.

வரலாறு

[தொகு]

அரசிகெரே என்ற பெயர் போசள வம்சத்தின் இளவரசி ஒருவரிடமிருந்து உருவானது. அவர் ஊருக்கு அருகில் ஒரு ஏரியை (கன்னடத்தில் கெரே ) கட்டினார். அரசி என்றால் கன்னடத்தில் ராணி என்று பொருள். எனவே, இது 'அராசியா + கெரே' அதாவது "இராணியின் குளம்" என்றானது.[1] இந்த ஊர் 'உத்பவ சர்வஜன விஜயம்' மற்றும் 'பல்லாலபுரம்' என்றும் அழைக்கப்பட்டது.

விஜயநகர ஆட்சியாளர்களின் கீழ், இது சென்னப்பட்ணா ஜகதேவராயரின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் தரிகெரேவின் திம்மப்ப நாயகரின் கீழ் வந்தது. இது இறுதியாக இக்கேரியின் சிவப்ப நாயக்கரின் ஆட்சியில் இருந்தது. 1690 இல் மைசூர் உடையார்களால் இக்கேரி ஆட்சியாளர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.

மைசூர் உடையார்களின் ஆட்சியின் கீழ், இப்பகுதி மராட்டியர்களின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது. பின்னர் போரின் இழப்பீடாக உடையார்களால் மராட்டியர்களுக்கு மாற்றப்பட்டது.

நிலவியல்

[தொகு]

அரசிகெரே 13 ° 18′52 ″ வடக்கிலும், 76 ° 15′25 ″கிழக்கிலும் அமைந்துள்ளது.[2] இதன் சராசரி உயரம் 807 மீட்டர்கள் (2,648 அடிகள்) ஆகும்.

ஹாசனில் இருந்து சுமார் 44 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவிலும், பெங்களூரு-மிராஜ் இரயில் பாதையில் பெங்களூரிலிருந்து 166 கிலோமீட்டர் (103 மைல்) தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 206 பெங்களூரு-ஹொன்னவாரா சாலை வழியாக இந்த ஊர் இருக்கிறது.

காலநிலை

[தொகு]

குளிர்கால வெப்பநிலை சராசரியாக 14 °C (57 °F) க்கு இடையில் இருக்கும் மற்றும் 26 °C (79 °F) . கோடை வெப்பநிலை சராசரி 19 °C (66 °F) க்கு இடையில் மற்றும் 35 °C (95 °F) இருக்கும்.[3]

போக்குவரத்து

[தொகு]

அரசிகெரே இரயில் சந்திப்பு மைசூர் பிரிவுக்கு சொந்தமானது. மேலும், பெங்களூரு மற்றும் ஹூப்ளி, பெங்களூரு மற்றும் சிவமோகா, மைசூரு மற்றும் சிவோகா, மற்றும் மங்களூர் மற்றும் ஹூப்ளி ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு முக்கிய இரயில் சந்திப்பாகும். இரயில்கள் பொதுவாக ஹாசன், பெங்களூர், ஹூப்ளி, மைசூரு மற்றும் மங்களூர் செல்லும் முன் இங்கு நிற்கின்றன.

ஏறக்குறைய 87 ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. மேலும் இது மாநிலத் தலைநகரான பெங்களூரிலிருந்து 166 கி.மீ தூரத்தில் உள்ளன. இங்கிருந்து பெங்களூரு, மைசூரு மற்றும் ஹப்பள்ளி ஆகிய மூன்று இரயில்கள் தொடங்குகின்றன. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 30,000 பேர் பயணம் செய்கிறார்கள்.

படத் தொகுப்பு

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Home | ಅರಸೀಕೆರೆ ಪುರಸಭೆ பரணிடப்பட்டது 14 மார்ச்சு 2013 at the வந்தவழி இயந்திரம். Arasikeretown.gov.in (10 May 2013).
  2. "Arsikere, India Page". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
  3. "Archived copy". Archived from the original on 14 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arsikere
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசிகெரே&oldid=3806269" இலிருந்து மீள்விக்கப்பட்டது