உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னப்பட்ணா பொம்மைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னபட்ணா பொம்மைகள்

சென்னபட்ணா பொம்மைகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்ணா என்ற நகரில் தயாரிக்கப்படும் மர பொம்மைகள் ஆகும். இப்பொம்மைகளின் தனித்துவமிக்க குறிப்பிட்ட வடிவங்களுக்காக மிகவும் புகழ்பெற்றவை. இந்த பாரம்பரிய மிக்க கைவினைக் கலையானது கர்நாடக அரசால் நிர்வகிக்கப்படும் உலக வர்த்தக அமைப்பின் கீழ் புவியியல் அடையாளமாகப் (ஜிஐ) பாதுகாக்கப்படுகிறது. இந்த பொம்மைகளின் புகழ் காரணமாக இந்த சென்னப்பட்ணா நகரம் 'பொம்பேகல ஊுரு அதாவது ‘பொம்மைகளின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக, ரைட்டியா டின்க்டோரியா எனப்படும் வெப்பாலை மரத்தினைக் கொண்டு பொம்மைகள் செய்து அதற்கு அரக்குப்பூச்சு பூசுவது இப்பொம்மைகளின் தனிப்பட்ட சிறப்பாகும். [1] இம்மரம் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்தம்-மரம்) என்று அழைக்கப்படுகிறது.

சென்னபட்டணா பொம்மைகள் கொண்டு செய்த சாவிக்கொத்துகள்

திப்பு சுல்தான் தனது ஆட்சி காலத்தில் மர பொம்மைகளை தயாரிப்பதில் உள்ளூர் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பெர்சியாவிலிருந்து கைவினைஞர்களை வரவழைத்தார். இவரது ஆட்சியில்தான் இந்த பொம்மைகள் உருப்பெற்றதாகக் கருதப்படுகிறது. பாவாஸ் மியான் என்பவர் இந்த சென்னபட்ணா பொம்மைகளின் தந்தை எனப்படுகிறார். சென்னப்பட்ணா பொம்மைகளுக்காகத் தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் அவர். பொம்மைகளைத் தயாரிப்பதற்காக சப்பானிய தொழில்நுட்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு அவர்களின் கலையை மேம்படுத்த உதவினார். [2] ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக, இந்த பொம்மைகளைத் தயாரிப்பதில் வெப்பாலை மரமே முதன்மை மரமாக இருந்தது, இருப்பினும் ரோஸ்வுட் மற்றும் சந்தனம் மரங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன

தயாரிப்பு

[தொகு]

இக்கைவினைக் கலை காலப்போக்கில் பன்முகப்படுத்தப்பட்டே வந்துள்ளது; பாரம்பரிய வெப்பாலை மரத்தோடு கூடுதலாக, இரப்பர், சைக்காமோர், சிடார், பைன் மற்றும் தேக்கு உள்ளிட்ட பிற மரங்களும் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. [3] உற்பத்தி நிலைகளில் முதலாவது, பொம்மைகளுக்கான மரக்கட்டைகள் கொள்முதல் செய்தல், பின்னர் மரத்தைக் காயப்போடுதல், விரும்பிய வடிவங்களில் வெட்டுதல், பொம்மைகளைக் கத்தரித்துச் செதுக்குதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இறுதியாக முடிக்கப்பட்ட பொருளை மெருகூட்டுதல் ஆகியவை அடங்கும். சென்னப்பட்டணா பொம்மைகளைக் குழந்தைகள் பயன்படுத்துவர் என்பதால் பொம்மைகள் மற்றும் மரப்பொருள்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த வண்ணமயமாக்கல் செயல்பாட்டில் காய்கறிச் சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அக்டோபர் 2006 நிலவரப்படி, சென்னபட்ணாவில் 254 வீடுகளிலும் 50 சிறு தொழிற்சாலைகளிலும் 6,000 க்கும் மேற்பட்டோர் இந்த பொம்மைகளை தயாரிப்பதில் ஈடுபட்டனர். கர்நாடக கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் (கே.எச்.டி.சி) இப்பொம்மைகளைச் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குகிறது. மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற உற்பத்தி பிரிவு பாரத் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் அமைப்பு இதில் புதுமையான தயாரிப்புகளை உருவாக்க உதவுகின்றன.

வளர்ச்சி

[தொகு]

சரியான காப்புப்பிரதி அல்லது சந்தைப்படுத்தல் இல்லாத நிலையில், சென்னபட்ணா பொம்மைத் தொழில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும் இது கிட்டத்தட்ட அழிந்துபோகும் விளிம்பில் இருந்தது. [3] எனினும், KHDC உதவியுடன், இக்கைவினைக் கலை மீண்டும் தலை தூக்கியுள்ளது. இத்துறையில் தற்போதைய சூழ்நிலைப் போக்குகளைக் கருத்தில் வைத்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலத்திற்கேற்ப மாற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இக்கலையில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட முன்மாதிரிகள் உள்ளூர் கைவினைஞர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன, அவை நன்கு வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் உருவாகப் பயன்படுகின்றன. 32 திருப்பு கடைசல் இயந்திரங்களுடன் உற்பத்தி மையத்தைக் கொண்ட அரக்குப்பூச்சுக் கைவினை வளாகத்தை நிர்மாணிப்பதன் மூலமும் கர்நாடக அரசு உதவி வழங்கியுள்ளது. கைவினைஞர்களுக்கு நிதி உதவி, டச்சு அரசு மற்றும் கர்நாடக அரசாங்கத்தின் விஸ்வா திட்டத்தின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது.

பல புதிய நிறுவனங்களும் சமூக நிறுவனங்களும் நவீன விருப்பங்களுக்கு ஏற்ப சென்னபட்ணா கைவினைக்குப் புத்துயிர் அளித்து வருகின்றன. [4] iFolk Channapatna பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருள்கள், பாரத் கலை மற்றும் கைவினை அமைப்பின் மூலம் ’ஐபோல்க் சென்னப்பட்ணா’என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுத்தப்படுகிறார்கள். மேலும் மர ஆபரணத்தயாரிப்பு கைவினைஞர்கள் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் நவீனமயமாக்கல் தயாரிப்புகளைச் செய்ய இவ்வமைப்பு ஆதரவளிக்கிறது. [3]

குறிப்புகள்

[தொகு]
  1. "Chapter 3: Case Study 2 – LAC-Turnery and the Lacquerware Industry".
  2. A brief history of Channapatna toys is provided by Govind D. Belgaumkar and Anil Kumar Sastry (2006-10-27). "Unique symbols of Karnataka". Online Edition of The Hindu, dated 2006-10-27 (Chennai, India: 2006, The Hindu) இம் மூலத்தில் இருந்து 2007-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070210153012/http://www.hindu.com/2006/10/27/stories/2006102714680200.htm. பார்த்த நாள்: 2007-04-22. 
  3. 3.0 3.1 3.2 A detailed summary of Channapatna toys is provided by Azmathulla Shariff. "Toy town changes with new trends". Online Edition of The Deccan Herald, dated 2005-03-29. 2005, The Printers (Mysore) Private Ltd. Archived from the original on 2007-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22.
  4. Pavitra Jayaraman. "Channapatna, Karnataka – Back in the game". livemint.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னப்பட்ணா_பொம்மைகள்&oldid=3856539" இலிருந்து மீள்விக்கப்பட்டது