அரக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
(அரக்கு (பெண் அரக்குப் பூச்சிகள் தன்னைச் சுற்றிலும் அரக்கைச் சுரந்துள்ளன).)

அரக்கு என்பது ஒருவகை இயற்கைப் பிசின் ஆகும். அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒரு திரவம் காற்றில் உலர்ந்து அரக்காகிறது.அரக்கு நீரிலும் எண்ணெயிலும் கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும் தன்மையும் கொண்டது. அதிக அளவில் அரக்கு விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

அரக்குப் பூச்சிகள்[தொகு]

அரக்குப் பூச்சிகள் மூட்டைப் பூச்சி இனத்தைச் சார்ந்தவை. இவை ஒரே இடத்தில் இலட்சக்கணக்கில் வாழும். எனவே இலட்சம் எனும் பொருள் தரும் 'லாக்'(LAC) என்ற பெயரில் இப்பூச்சி அழைக்கப்படுகிறது. மரங்களின் தன்மை பொருத்தே அரக்குப் பூச்சிகள் அரக்கு திரவத்தைச் சுரக்கின்றன. அரக்கு திரவத்தை இப்பூச்சிகள் தற்காப்புப் பொருளாகவே பயன்படுத்துகின்றன.

வாழ்க்கை முறை[தொகு]

அரக்குப் பூச்சிகள் இயற்கையாக மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவற்றில் வாழும். இவை எல்லா வகை மரங்களிலும் வாழ்வதில்லை. பூவரசு, இலந்தை, பலாசு, காசுக்கட்டி போன்ற மரங்களிலேயே அதிகம் வாழ்கின்றன. இவை மரச் சாற்றை உண்டு வாழ்கின்றன. அரக்குப் பூச்சி உள்ள குச்சிகளை உடைத்து வேண்டிய மரக்கிளைகளில் கட்டி, அப்புதிய மரத்திலும் அரக்குப் பூச்சிகளைக் குடியேறச் செய்வர்.

அரக்கின் வகைகள்[தொகு]

பெண் பூச்சிகளின் உடலிலிருந்து பிசின் போன்ற திரவம் சுரந்து மரக் கிளைகளில் படிகிறது. இது ஒரு செ. மீ. கனத்துக்குப் படியும். இக்கிளையை வெட்டியெடுத்து அவற்றில் உள்ள அரக்கைச் சுரண்டி எடுப்பார்கள் இதுவே 'கொம்பரக்கு' எனப்படும். பின் அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவார்கள். இவ்வாறு சுத்தம் செய்த அரக்கு 'மணியரக்கு' எனப்படுகிறது. மணியரக்கை மேலும் தூய்மைப்படுத்தி தகடு வடிவில் தயாரிப்பார்கள். இது 'தகடரக்கு' என்று அழைக்கப்படுகிறது.

அரக்கின் பயன்கள்[தொகு]

அரக்கிலிருந்து பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்தியாவில் அழிந்து வரும் அரியவகை அரக்குப் பூச்சிகள், சேலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய அரசின் இயற்கை பிசின் மற்றும் கோந்து ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகள் மோகனசுந்தரம், வைபவ்டி.லோகட் ஆகியோர் அழிந்து வரும் அரிய உயிரினமான அரக்கு பூச்சி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களது ஆய்வில் தமிழகத்தில் இவ்வகை பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழகம் வந்த இருவரும் கோவை, மேட்டுபாளையம், ஈரோடு, சத்தியமங்கலம், சேலம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்களை ஆய்வு செய்தனர். தனது உடலில் சுரக்கும் திரவத்தை தனக்கே அரணாக்கி கொண்டு, அதற்குள் வாழ்வது தான் அரக்கு பூச்சியின் சிறப்பு. இந்த அரக்கு திரவம், உணவுப் பொருட்களை பதப்படுத்தி வைப்பதற்கும், மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. ஆபரணங்களின் பளபளப்பு மங்காமல் இருப்பதற்கும் பயன்படுகிறது. ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள், இதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். 1930ம் ஆண்டு வாக்கில் சேலம், ஓசூர் பகுதிகளிலும் இந்த தொழில் நடந்துள்ளது.

ஆதாரம்[தொகு]

இளையர் அறிவியல் களஞ்சியம். மணவை முஸ்தபா. -மணவை பப்ளிகேஷன் வெளியீடு-1995

மேலும் காண்க[தொகு]

http://www.insectimages.org/browse/detail.cfm?imgnum=5385250
http://www.banglapedia.org/httpdocs/HT/L_0005.HTM
http://www.classical-bicycles.com/Tips.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கு&oldid=1735324" இருந்து மீள்விக்கப்பட்டது