இராச்சசுத்தான் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜஸ்தான் வங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இராச்சசுத்தான் வங்கி வரையறுக்கப்பட்டது
The BANK OF RAJATHAN Ltd.
வகைதனியார் நிறுவனம் (BSE),
நிறுவுகை1943
தலைமையகம்கிளாக் டவர்,
உதயப்பூர்,
இராச்சசுத்தான், இந்தியா
முக்கிய நபர்கள்ஜி. பத்மநாபன்
(மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயல் அதிகாரி)
தொழில்துறைவைப்பகத்தொழில்
கடன்கள்
முதலீட்டுச் சந்தைகள்
உற்பத்திகள்கடன்கள், வைப்புகள்
வருமானம்15073.344 மில்லியன்கள் (31 மார்ச் 2009)
நிகர வருமானம் 1177.119 மில்லியன்கள் (மார்ச் 2009)

இராச்சசுத்தான் வங்கி வரையறுக்கப்பட்டது (The Bank of Rajasthan Limited) (முபச/ (500019 ) என்பது இந்தியாவில் செயற்பட்டுவந்த தனியார் துறையைச் சார்ந்த ஒரு வைப்பகம் ஆகும். இது 2010ஆம் ஆண்டில் ஐ. சி. ஐ. சி. ஐ. வங்கியுடன் இணைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

இராச்சசுத்தான் வங்கி, 10 இலட்சம் உரூபாயை முதலீடாகக் கொண்டு 1943ஆம் ஆண்டில், இராச்சசுத்தானின் உதயப்பூர் நகரில் சேத் சிறீ கோவிந்த் ராம் சேக்சரியா என்பவரால் தொடங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் இது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் ஒன்றானது. இவ்வங்கியின் மைய அலுவலகமானது செய்ப்பூரில் இருந்தாலும், இதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகமானது உதயப்பூரில் இருந்தது. ஐ. சி. ஐ. சி. ஐ. வங்கியுடன் இணைவதற்கு முன்பாக இவ்வைப்பகத்திற்கு, இந்தியாவின் 24 மாநிலங்களில் 463 கிளைகள் செயற்பட்டுவந்தன.[1][2] இவற்றில் 294 கிளைகள் இராச்சசுத்தானில் செயற்பட்டுவந்தன.

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]