உள்ளடக்கத்துக்குச் செல்

கிலுகாமிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கில்கமெஷ்
இடது கையில் சிங்கத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, வலது கையில் பாம்பை பிடித்துக் கொண்டிருக்கும் விலங்கினங்களின் அரசன் எனப்புகழப்படும் கில்கமெஷ், அசிரியர்களின் அரண்மனையின் தொல்பொருள், இலூவா அருங்காட்சியகம் [1]
இடம்பூமி
பெற்றோர்கள்லுகல்பண்டா மற்றும் நின்சுன்
குழந்தைகள்ஊர்-நுங்கல்

கில்கமெஷ் (Gilgamesh)[2] பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியமான உரூக் நகர மன்னர்களில் ஒருவர்.

கிமு மூவாயிரம் ஆண்டில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட பண்டைய சுமேரியக் காவியமான கில்கமெஷ் காப்பியத்தில் வீரமிக்க கதாநாயகனாக கில்கமெஷ் சித்தரிக்கரிப்படுகிறார்.

கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் உரூக் நகரத்தை ஆட்சி செய்த கில்கமெசின் வீரம், வெற்றி, புகழைப் போற்றி தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[3]மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது, கிமு 2,000ல் கில்கமெஷ் காப்பியம் படைத்தனர்.

கில்கமெஷ், கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் சுமேரியாவின் உரூக் நகரத்தை ஆண்ட மன்னர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4][5][6][7] [4][5]

உரூக் நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட கட்டிட செய்யுள் குறிப்புகளில், 11 - 15 வரிசை குறிப்புகளில் மன்னர் கில்கமெஷ் குறித்த செய்திகள் உள்ளது. [8]

கில்கமேஷின் சமகாலத்தில் வாழ்ந்த கிஷ் நகர இராச்சியத்தின் மன்னர் எம்மெபாராஜெசி என்பவர், கில்கமெசை ஒரு மன்னராக குறிப்பிடுகிறார். [9]

சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்கமேஷ் உரூக் நகர இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த மன்னர் கில்கமெஷை உரூக் நகரத்தின் ஆற்றின் கரையில் புதைப்பதற்காக, யூப்பிரடீஸ் ஆற்றின் நீர்ப்போக்கை மாற்றி அமைத்ததாக, தற்கால டெல் ஹத்தாத் (Tell Haddad]]) தொல்லியல் களத்தில் கிடைத்த ஒரு காப்பிய நூலின் துண்டுகளிலிருந்து செய்திகள் அறியப்படுகிறது. [9] [10][9] கில்கமெஷ் வீரதீர செயல்களை கூறும் கில்கமெஷ் காப்பியம் கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது.

கில்கமெஷ் காப்பியம்

[தொகு]
பழைய பாபிலோனிய இராச்சியத்தின் சுடுமண் பலகைகயின்,[11], மன்னர் கில்கமெஷ் எதிரியும், பின்னர் நண்பருமான என்கிடு [12]
பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுடுமட் சிற்பம் எண் 5-இல் (கிமு 2250 - 1900), கில்கமெஷ் சொர்க்கத்தின் காளையை வெட்டுதல், [13], கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு குறிப்பு [12][14]
களிமண் பலகை எண் 5-இல் கில்ககெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, சுலைமானிய அருங்காட்சியகம், ஈராக்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Delorme 1981, p. 55.
  2. George, Andrew R. (2010) [2003]. The Babylonian Gilgamesh Epic – Introduction, Critical Edition and Cuneiform Texts (in English and Akkadian). Vol. vol. 1 and 2 (reprint ed.). Oxford: Oxford University Press. p. 163. ISBN 978-0198149224. OCLC 819941336. {{cite book}}: |volume= has extra text (help)CS1 maint: unrecognized language (link).
  3. Gilgamesh
  4. 1 2 Black & Green 1992, p. 89.
  5. 1 2 Dalley 1989, p. 40.
  6. Kramer 1963, pp. 45–46.
  7. Powell 2012, p. 338.
  8. Kramer 1963, p. 46.
  9. 1 2 3 Mark 2018.
  10. "Gilgamesh tomb believed found". BBC News. 29 April 2003. Retrieved 12 October 2017.
  11. Black & Green 1992, p. 109.
  12. 1 2 Black & Green 1992, p. 90.
  13. Powell 2012, p. 342.
  14. Powell 2012, pp. 341–343.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர்
கிஷ் நகர மன்னர் ஆகா
சுமேரிய மன்னர்
கிமு 2600
பின்னர்
ஊர்- நுங்கல்
முன்னர்
துமுசித், மீனவர்
உரூக்
கிமு c. 2600
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலுகாமிசு&oldid=4578217" இலிருந்து மீள்விக்கப்பட்டது