உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கினி (Lankini) என்பவள் இந்து புராணங்களில் வரும் ஒரு சக்திவாய்ந்த இராட்சசி ஆவாள். இவளது பெயரின் அர்த்தம் இலங்கையின் கடவுள் என்பதாகும். இவளைப் பார்க்கும் எல்லோரும் இலங்கையே பெண்ணாக உருமாறி இருக்கிறது என போற்றுவார்கள். அவளே இலங்கையின் வாசல்களை காக்கும் காவல் தெய்வம் என்றும் கூறுவார்கள்.[1]

பிரம்மாவின் சாபம்

[தொகு]

இந்தியாவின் பழங்கால கதைகளின்படி இலங்கினி பிரம்மாவின் பாதுகாவலர் ஆவார். பிரபஞ்சத்தை உருவாக்கும் பிரம்ம லோகத்தை பாதுகாத்தவள் ஆவாள். பிரம்ம லோகத்தைப் பாதுகாத்தபோது அவளின் பெயர் சத்யங்கினி ஆகும். இதனால் அவள் கர்வமும், பிடிவாதமும் கொண்டவளாக மாறினாள். இதனால், அவள் கோட்டையில் உள்ள மற்றவர்களை ஏளனமாகவும் அவ மரியாதையுடனும் நடத்தினாள். இது பிரம்மாவிற்கு தெரியவந்தது. பிரம்மா இதனால் மிகுந்த கோபம் கொண்டார். அதன் விளைவாக சத்யங்கினிக்கு சாபம் ஒன்றினை வழங்கினார். பிரம்மா சத்யங்கினி தன் வாழ்நாள் முழுவதும் இராட்சசர்களின் நகரை காவல் காத்திருக்க வேண்டும் என்று சாபமிட்டார். சத்யங்கினி மிகுந்த மனவருத்தம் அடைந்தாள். தன் தவற்றினை உணர்ந்தாள். அவள் பிரம்மாவிடம் மன்னிப்புக் கோரி மன்றாடினாள். ஆனால் பிரம்மா அவளின் மன்னிப்பை ஏற்கவில்லை. அவள் தனக்கு சாப விமோசனம் அளிக்குமாறு கெஞ்சினாள். அதற்கு அவர் அவளுக்கு ஒரு வரம் அளித்தார். அது என்னவென்றால், எப்பொழுது ஒரு குரங்கானது அவளைப் போரிட்டு வெற்றி அடைகிறதோ அப்பொழுதே அவள் சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாள் என்பதாகும். இலங்கையைக் காக்கும் பொறுப்பை ஏற்ற சத்யங்கினியின் பெயர் இலங்கினியாகியது. அனுமன் சீதையைத் தேடிச் சென்ற தனது பயணத்தில் முதலில் சுரசையைச் சந்தித்தான். பின்னர் இலங்கினியைச் சந்தித்தான். இலங்கினி அனுமனால் சாப விமோசனம் பெற்ற பின்னர் மீண்டும் பிரம்ம லோகத்திற்குத் திரும்புவதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.[1][2]

அனுமனுடன் யுத்தம்

[தொகு]

இராமாயண புராணத்தில் சீதை எங்கிருக்கிறார் என்பதைக் கண்டு வர இராமரால் அனுமன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, இலங்கையின் வாசலில் இலங்கினி நின்றுகொண்டிருந்தாள். அவள் அனுமனை வானரமே நீ யார்? இந்த இலங்கைக் கோட்டைக்குள் நுழைவது உன்னால் ஆகாது. நான் இராவணனின் ஆணையின் பேரில் இந்தக் கோட்டையினைக் காத்து வருகிறேன். நீ இங்கு வந்த நோக்கம் என்ன? என வினவினாள். தனது உண்மையான அடையாளத்தைக் கூறினால், தாம் பிடிபட்டு விடுவோம் என்பதற்காக அனுமன் பின்வரும் பதிலைக் கூறினார். அனுமன் தான் இலங்கையின் அழகைப்பற்றி கேலி செய்து விட்டதாகவும், தான் கூறியது சரிதானா? இல்லை அந்நகரம் உண்மையிலேயே மிகவும் அழகு வாய்ந்ததா? என்பதை அறிந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளதாகவும் கூறினார். ஆனால், உண்மையை அறிந்த இலங்கினி அனுமனை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், அவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு பெண்ணென அறிந்த அனுமன் ஒரு பெண்ணிடத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவளை இழுத்து இலேசாக தள்ளினார். அப்பொழுது காயமடைந்த இலங்கினி மயக்கமுற்று, சிறிது இரத்தத்துடன் கீழே விழுந்தாள். அப்பொழுது அவள் அனுமன் பிரம்மன் கூறிய வரத்தை அளிக்க வந்த குரங்கு என்பதை உணர்ந்து கொண்டாள். அனுமனை வணங்கி மன்னிப்பு வேண்டினாள். அனுமன் அவளுக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அவளை அங்கு விட்டு விட்டு செல்கிறார். சாப விமோசனம் பெற்ற இலங்கினி பின் மனமகிழ்ச்சியுடன் வாழ்கிறாள்.[3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kishore, B.R. (1995). Ramayana:. Diamond Pocket Books. ISBN 9789350837467. Retrieved 2017-01-08.
  2. Yedavalli, S.K. (2015). Ramayan. Lulu.com. ISBN 9781304901002. Retrieved 2017-01-08.
  3. "Ramayan: India's Classic Story of Divine Love: P. R. Mitchell: 9780595507634: Amazon.com: Books". web.archive.org. Archived from the original on 2021-07-24. Retrieved 2017-01-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. https://www.amazon.com/dp/0143065289
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கினி&oldid=3801684" இலிருந்து மீள்விக்கப்பட்டது