உள்ளடக்கத்துக்குச் செல்

பதேபோரா

ஆள்கூறுகள்: 33°39′22″N 75°09′37″E / 33.656027°N 75.160375°E / 33.656027; 75.160375
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதேபோரா
நகரம்
பதேபோராவில் சூரியன் மறைவு
பதேபோராவில் சூரியன் மறைவு
பதேபோரா is located in ஜம்மு காஷ்மீர்
பதேபோரா
பதேபோரா
அனந்தநாக்கில் பதேபோராவின் அமைவிடம்
பதேபோரா is located in இந்தியா
பதேபோரா
பதேபோரா
பதேபோரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°39′22″N 75°09′37″E / 33.656027°N 75.160375°E / 33.656027; 75.160375
நாடு இந்தியா
ஒன்றியப் பிரதேசம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்அனந்தநாக்
Settledகி.மு.5000
ஏற்றம்
1,600 m (5,200 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்6,737
மொழிகள்
 • அலுவல்காஷ்மீரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி இணைப்பு எண்91-1932
வாகனப் பதிவுஜேகே03
பாலின விகிதம்912 /
கல்வியறிவு60.00%
இணையதளம்anantnag.nic.in

பதேபோரா (Fatehpora) பதேபுரா என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப்பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பொருளாதார மையப் பகுதியாகும். இது 33.65 °வடக்கிலும் 75.16 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் (5478 அடி) உயரத்தில் உள்ளது. [2]

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2011 இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [3] இதன் மக்கள் தொகை 6,737 என்ற அளவில் இருந்தது. இதில் 51% ஆண்களும் 49% பெண்களும் இருந்தனர். நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 60% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 67% , பெண்களின் கல்வியறிவு 53% என உள்ளது. நகரில், 17% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள். இங்கு வசிக்கும் அனைத்து நபர்களும் சுன்னி இசுலாமியர்கள் .

நிலவியல்

[தொகு]

பதேபுரா, சிறீநகரிலிருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொஅலைவில் அமைந்துள்ளது. பாபடர், கான் போரா, கபாமார்க், குந்த் பதேபோரா மற்றும் குச்சிபோரா போன்ற முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. இதன் அருகில் பிரிங்கி நதி ,சாண்ட்ரான் போன்ற ஆறுகள் உள்ளது. இதன் விளைவாக வரும் நதிக்கு வெத் அல்லது ஜீலம் என்று பெயரிடப்பட்டது.

போக்குவரத்து

[தொகு]

தொடர் வண்டி

[தொகு]

சாதுரா தொடர் வண்டி நிலையம் மற்றும் அனந்த்நாக் தொடர் வண்டி நிலையம் ஆகியவை பதேபோராவிற்கு மிக அருகில் உள்ள தொடர் வண்டி நிலையங்களாகும். இருப்பினும், எப்போதும் ஜம்மு தொடர் வண்டி நிலையம் முக்கிய ரயில் நிலையமாகும். இது பதேபுராவுக்கு 243 கி. மீ. தொலைவிலுள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fatehpora Population - Anantnag, Jammu and Kashmir". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதேபோரா&oldid=3561833" இலிருந்து மீள்விக்கப்பட்டது