நீலகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar:منطقة نيلجريس
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ca:Districte de Nilgiris
வரிசை 29: வரிசை 29:


[[ar:منطقة نيلجريس]]
[[ar:منطقة نيلجريس]]
[[ca:Districte de Nilgiris]]
[[de:Nilgiris (Distrikt)]]
[[de:Nilgiris (Distrikt)]]
[[en:Nilgiris district]]
[[en:Nilgiris district]]

11:26, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

நீலகிரி மாவட்ட வரைபடம்

நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.

மக்கள்

2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 7,62,141. கல்வியறிவு 81.44%. இது தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டங்களுள் ஒன்று.

இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். தோடர் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர பணியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரும் உள்ளனர். கோத்தகிரிப் பகுதிகளில் கோத்தர் எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர்.இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள்.

உள் கட்டமைப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு நல்ல சாலை வசதி உள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடர்வண்டிப் பாதையும் உள்ளது. பற்சக்கர முறையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக நீலகிரி மலை இரயில் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாட்டத்தில் எட்டு இடங்களில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

  1. குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்
  2. பைக்காரா ஆகியன இவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

சட்டமன்றத் தொகுதிகள்

16வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
உதகமண்டலம்புத்தி சந்திரன் அதிமுக
கூடலூர்எஸ். செல்வராஜ் தேமுதிக
குன்னூர்கா. ராமச்சந்திரன் திமுக


வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_மாவட்டம்&oldid=1193906" இலிருந்து மீள்விக்கப்பட்டது