கசவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கசவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இம்மக்கள் தடித்த உதடும் சுருண்ட மயிரும், கருத்த நிறமும் கொண்டவர்கள். இவர்கள் தாம் வாழும் குடிசையைச் சேரி என்று அழைப்பர். இக்குடிசைகள் மூங்கில், கம்பு ஆகியவற்றைக் கொண்டு புல்லால் வேயப்பட்டு இருக்கும். இவர்தம் மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது.

திருமணம் பெரும்பாலும் பெரியவர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. மணமுறிவு, மறுமணம் ஆகியன வழக்கில் உள்ளன.

உசாத்துணை[தொகு]

  • முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசவர்&oldid=2987560" இருந்து மீள்விக்கப்பட்டது