உள்ளடக்கத்துக்குச் செல்

ஊரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊரி
யூரி
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பாரமுல்லா
ஏற்றம்
981 m (3,219 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,366
மொழிகள்
 • உள்ளூர்உருது (அலுவல்), (தோக்ரி மொழி)
கோசிரி மொழி[1]
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
ஜீலம் ஆற்றாங்கரையில் ஊரி நகரம்

ஊரி அல்லது யூரி (Uri) , இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜீலம் ஆற்றாங்கரையில் அமைந்த நகரம் ஆகும்..[2]

மக்கள் தொகையில்

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊரி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 9,366 ஆகும். அதில் ஆண்கள் 6674 ஆகவும்; பெண்கள் 2992 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 50211%, இந்துக்கள் 39.47%, கிறித்தவர்கள் 9.34%, பிறர் 0.30% ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்னிக்கை 879 ஆகவுள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 403 பெண்கள் என்ற அளவில் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 88.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 95,27% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 70.02% ஆகவும் உள்ளது. [3]

2016 ஊரி தாக்குதல்கள்

[தொகு]

18 செப்டம்பர் 2016 அதிகாலை 5.30 மணி அளவில் ஊரியின் இந்திய இராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில், முகாம்களில் இருந்த பதினெட்டும் மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ந்தனர். [4] இத்தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஸ் –இ- முகமது இயக்கத்தினரின் தொடர்பு இருக்கலாம் என இந்திய அரசு கருதுகிறது. மேலும் இத்தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்துள்ளது.[5]

எதிர் தாக்குதல்

[தொகு]

யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஆசாத் காஷ்மீரில் நுழைந்து, பயங்கரவாதிகளின் முகாம்களை, 28 செப்டம்பர் 2016 அன்று இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கி அழித்தது. [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-24. பார்க்கப்பட்ட நாள் 2016-09-21.
  2. "Uri Tehsil | Uri Tehsil map". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
  3. http://www.census2011.co.in/data/town/800007-uri-jammu-and-kashmir.html Uri Population Census 2011
  4. Soldiers killed in army base attack in Indian-administered Kashmir
  5. "ஊரி தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு". Archived from the original on 2021-09-22. பார்க்கப்பட்ட நாள் 2016-09-21.
  6. http://www.dinamalar.com/news_detail.asp?id=1617437

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரி&oldid=3593723" இலிருந்து மீள்விக்கப்பட்டது