ஜெய்ஸ்-இ-முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெய்ஸ்-இ-முகமது
جيش محمد
Jaishi-e-Mohammed.svg
ஜெய்ஸ்-இ-முகமது கொடி
தலைவர்கள்மெளலானா மசூத் அசார்
செயல்பாட்டுக் காலம்2000 – தற்போது வரை
சித்தாந்தம்இசுலாமிய அடிப்படைவாதம்
தலைமையகம்பகவல்பூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
ஆத்திரேலியா, கனடா, இந்தியா, இரசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐநா மற்றும் பிரிக்ஸ்

ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed, உருது: جيش محمد‎) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் போராளிக் குழு ஆகும்.[1] ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் உருதுச் சொல்லுக்கு முகம்மதின் படை என்று பெயர். இது ஒரு ஜிகாதியப் போர்க்குழுவாகும். காஷ்மீரில் இயங்கும் போராளிக் குழுக்களுள் மிகவும் கடுமையான குழு இது ஆகும்.[1][2]

குறிக்கோள்[தொகு]

இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் காஷ்மீரைத் தனி நாடாக்குவதாகும். இதன் பொருட்டு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.[3][4]

தடை[தொகு]

இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்ட போதும், அதன் செயல்பாடுகள் பாகிஸ்தானில் தொடர்கின்றன.[5] இப்போராளிக் குழுவை இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.[1]

வரலாறு[தொகு]

2000 ஆம் ஆண்டு மௌலானா மசூத் அசார் இக்குழுவைத் தொடங்கினார். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவர்.[1][2][6] விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தார். ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவரது ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தில் இணைந்தனர்.[2] 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை குத்தாம் உல்-இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.[1]

2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமா எனும் இடத்தில் தீவிரவாத தாக்குதல்நடந்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான தாக்குதலான இது, இந்த இயக்கத்தால் நடத்தப்பட்டதாக இந்திய அரசு தகவல்கள் வெளியிட்டது.

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Cronin, Audrey Kurth; Huda Aden, Adam Frost, and Benjamin Jones (2004-02-06). "Foreign Terrorist Organizations". CRS Report for Congress (Washington, D.C.: Congressional Research Service): 40–43. http://www.fas.org/irp/crs/RL32223.pdf. பார்த்த நாள்: 2009-12-02. 
  2. 2.0 2.1 2.2 Raman, B. (2001). JAISH-E-MOHAMMED (JEM) ---A BACKGROUNDER. South Asia Analysis Group. http://www.southasiaanalysis.org/%5Cpapers4%5Cpaper332.html. பார்த்த நாள்: 2013-12-29. 
  3. 3.0 3.1 "Jaish-e-Mohammad: A profile", BBC News, 2002-02-06, 2009-12-02 அன்று பார்க்கப்பட்டது
  4. Attack May Spoil Kashmir Summit
  5. 5.0 5.1 "Terror group builds big base under Pakistani officials' noses, Saeed Shah, McClatchy Newspapers, 13 Sep 2009". மூல முகவரியிலிருந்து 30 September 2009 அன்று பரணிடப்பட்டது.
  6. "JeM top commander killed in encounter in Kashmir".
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2009-05-23 அன்று பரணிடப்பட்டது.
  8. "Synagogue targeted in NY plot, four charged". Reuters. 2009-05-21. http://www.reuters.com/article/latestCrisis/idUSN20523965. 
  9. http://english.aljazeera.net/news/americas/2009/05/200952144536467973.html
  10. "Pulwama terror attack: Jaish-e-Mohammed claims responsibility with video of suicide bomber Adil Dar". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-kashmir-jaish-e-mohammad-adil-ahmad-dar-1456169-2019-02-14. பார்த்த நாள்: 14 February 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஸ்-இ-முகமது&oldid=3246806" இருந்து மீள்விக்கப்பட்டது