மார்க்கண்டேய ஆறு

ஆள்கூறுகள்: 12°28′04″N 80°09′16″E / 12.46778°N 80.15444°E / 12.46778; 80.15444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கண்டேய ஆறு
Markandeya River
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபைலூர், பெல்காம் மாவட்டம், கருநாடகம், இந்தியா
 ⁃ ஏற்றம்651மீ
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காட்டபிரபா நதி, கோகக், கருநாடகம், இந்தியா
 ⁃ உயர ஏற்றம்
570மீ
நீளம்41.2 mi (66.3 km)

மார்க்கண்டேய ஆறு (Markandeya River-Western Ghats)தென்னிந்தியாவின் ஒரு ஆறு ஆகும். இது கர்நாடகா மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் உள்ள கானாபூர் வட்டத்தில் உள்ள பைலூரில் உதயமாகிறது. இந்த ஆறு பெலகாவி வட்டத்தின் தெற்குப் பகுதியில் நுழைந்து பெலகாவி நகரின் மேற்குப் பக்கம் பாய்ந்து 66 கிலோமீட்டர்கள் (41 mi) ஓடுகிறது. பெல்காம் மாவட்டத்தில் அழகிய கோதாச்சினமலகி அருவியினை (கோகாக் அருவிக்கு அருகில்) உருவாகி, பெல்காமில் இருந்து 60 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவில் உள்ள கோகாக்கில் கட்டபிரபா ஆற்றில் சங்கமமாகிறது.

தற்போதைய நிலை[தொகு]

தற்போது மார்க்கண்டேய ஆற்றின் கரையோரங்களில் வண்டல் மண் நிரம்பி புதர்கள் வளர்ந்துள்ளன. தவிர, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கோடைக்காலத்தில் தங்களின் விளைந்த பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக ஆற்றங்கரையில் கிணறுகளை அமைத்துள்ளனர். வண்டல் மண் படிவதால் நீர் சேமிப்பு திறன் குறைந்துள்ளது.[1] இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 70 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு ஆண்டு முழுவதும் ஓடும். ஆனால் இப்போது இது ஒரு ஓடையாக மாறிவிட்டது. கங்க்ராலியில், ஆறு சுமார் 30 அடி அகலமும் 8 அடி ஆழமும் கொண்டது. ராகசகோப் நீர்த்தேக்கத்திலிருந்து பெலகுண்டி, பிஜகர்னி, சுலகா மற்றும் உச்சகான் வழியாகச் செல்லும் 24 கி.மீ. பகுதி ஏற்கனவே புத்துயிர் பெறத் தொடங்கியது. இங்கு ஆற்றில் அதிகப்படியான நீர்க் கசிவு வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு என்பது முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகும்.[2]

அணை[தொகு]

ஹுக்கேரி அருகே ஷிரூரில் மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு பாசன அணையினைக் கட்டுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதி 432 சதுர கி.மீ. ஆகும். அணையின் மொத்த சேமிப்பு 3.7 டிஎம்சி. இந்த அணை கட்டுவதற்கு 898 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருந்தது. இதில் 142 ஹெக்டேர் வனப்பகுதியாகவும், 756 ஹெக்டேர் சாகுபடி நிலமாகவும் இருந்தது. மொத்தம் 9 கிராமங்கள் நீரில் மூழ்கியதால் 2258 பேர் தங்கள் நிலத்தை விட்டு வெளியேறினர்.[3]

பெல்லாரி நாலா[தொகு]

பெல்லாரி நாலா என்பது மார்க்கண்டேய ஆற்றின் துணை ஆறாகும். இது ஹுக்கேரி வட்டத்தில் கரகுப்பி அருகே சங்கமிக்கிறது. இது பெல்காம் மாவட்டத்தில் உள்ள பச்சாபூர் தொடருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவில் உள்ளது.[4][5][6]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கண்டேய_ஆறு&oldid=3819884" இலிருந்து மீள்விக்கப்பட்டது