தேவாரகுந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரகுந்தி (Devaragundi) என்பது 'கடவுளின் குளம்' என்று பொருள்படும், இது இந்தியாவின் கர்நாடகவில் மங்களூருக்கு அருகில் அமைந்துள்ளது. இது தோடிக்கானாவில் உள்ள மலை ஓடைகளில் ஒன்றால் உருவாக்கப்பட்டுள்ளது. சிறீமல்லிகார்ச்சுனர் கோயிலிலிருந்து பட்டி மலைகள் நோக்கி சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் சென்றால் இதை அடையலாம். [1] இந்த அற்புதமான அருவியைக் காண ஒருவர் இரண்டு நீரோடைகளைக் கடந்து, மேல்நோக்கி ஏறி, ஒரு தனியார் பாக்குப் பண்ணை வழியாக நடந்து செல்ல வேண்டும். அருவியைச் சுற்றியுள்ள நீரில் யாரும் அடியெடுத்து வைக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதன் ஆழம் தெரியவில்லை.

அதன் புனிதத்தன்மை காரணமாக, அது மனித நடவடிக்கைகளிலிருந்து விலகி உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாரகுந்தி&oldid=3710934" இலிருந்து மீள்விக்கப்பட்டது