கான்வா நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்வா நீர்த்தேக்கம்
Kanva Reservoir
Kanva dam.jpg
கான்வா நீர்த்தேக்கம் & அணை
கான்வா நீர்த்தேக்கம் Kanva Reservoir is located in கருநாடகம்
கான்வா நீர்த்தேக்கம் Kanva Reservoir
கான்வா நீர்த்தேக்கம்
Kanva Reservoir
அமைவிடம்சென்னபட்டணம், ராமநகரம் மாவட்டம், கருநாடகம்
ஆள்கூறுகள்12°43′45.36″N 77°11′53.45″E / 12.7292667°N 77.1981806°E / 12.7292667; 77.1981806ஆள்கூறுகள்: 12°43′45.36″N 77°11′53.45″E / 12.7292667°N 77.1981806°E / 12.7292667; 77.1981806
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துகான்வா
முதன்மை வெளியேற்றம்கான்வா
வடிநில நாடுகள்இந்தியா

கான்வா நீர்த்தேக்கம் (Kanva Reservoir) என்பது ஓர் செயற்கை ஏரி மற்றும் சுற்றுலாத் தலமாகும். இது இந்தியாவின் பெங்களூரிலிருந்து 69 கிலோமீட்டர்கள் (43 mi) , தொலைவில் கான்வா ஆற்றினைத் தேக்கி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கான்வா அணைக்கு அருகில் மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இது உள்ளூர் வாசிகளுக்கு மீன் வளர்ப்பில் பயிற்சியளிப்பதற்காக நிறுவப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார ரீதியாக சுயமாக முன்னேற முடியும்.[1]

இந்த நீர்த்தேக்கம் மரங்கள் நிறைந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது.[2]பறவைக் நோக்கலுக்குச் சிறந்த இடமாக உள்ளது.[1]

புருசோத்தம தீர்த்த காவியின் குகைக் கோயில் 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) தொலைவில் உள்ளது. இது கன்னட மாதவ பிராமணர்களுக்கான புனித யாத்திரை மையமாக உள்ளது. இந்தக் குகையினுள் அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.[1]

கான்வா அணை[தொகு]

கான்வா அணை 1946ஆம் ஆண்டில் கான்வா ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசனத்திற்காக இந்த அணைக் கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) நீளப்பகுதியிலுள்ள 776 எக்டேர்கள் (1,920 ஏக்கர்கள்) நிலம் நீர்ப்பாசனம் பெறுகின்றது.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "It is an unlikely paradise". Deccan Herald. January 29, 2004. Archived from the original on September 20, 2008. https://web.archive.org/web/20080920045636/http://www.deccanherald.com/Archives/jan292004/metro16.asp. 
  2. "Kanva Reservoir". Bengalooru Tourism. 2020-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-29 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]