பனம்பூர் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனம்பூர் கடற்கரை
கடற்கரை
பனம்பூர் கடற்கரையில் கடல் மீது மேகங்கள்
பனம்பூர் கடற்கரையில் கடல் மீது மேகங்கள்
இருப்பிட தகவல்பனம்பூர்
நகரம்மங்களூர்
நாடுஇந்தியாஇந்தியா
பாதுகாப்பு வீரர்கள் இருக்கிறார்கள்Yes
முக்கிய நிகழ்வுகள்
செயல்பாடுகள்
அரசு
 • Bodyமங்களூர் நகராட்சி நிர்வாகம்
இணையதளம்http://www.panamburbeach.com/

பனம்பூர் கடற்கரை (Panambur Beach) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் மங்களூர் நகரில் உள்ள ஒரு கடற்கரையாகும்.

இந்த கடற்கரை அரபிக் கடலின் கரையில் உள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் சிறப்பாகப் பராமரிக்கப்படும் கடற்கரைகளில் ஒன்றாகும். [1] இது கருநாடகாவின் மிகவும் பிரபலமான, நன்கு இணைக்கப்பட்ட மற்றும் அதிகம் பார்வையிடப்பட்ட கடற்கரையாகும் . [2]

சிட்டி சென்டருக்கு வடக்கே 10 கி.மீ தூரத்தில் பனம்பூர் என்ற இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. [3] இது மங்களூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

தற்போது வரை இந்த கடற்கரையை பனம்பூர் கடற்கரை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனம் பராமரிக்கிறது. ஜெட் ஸ்கை சவாரிகள், படகுச் சவாரி, டால்பின் பார்வை, உணவுக் கடைகள் ஆகியவை இங்கு இருக்கிறது. மேலும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்கரையில் மிகவும் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களும் இருக்கின்றனர்.

இந்த கடற்கரை அதன் சூரியன் மறைவு, துறைமுக பகுதி போன்றவை சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஒரு சுற்றுலா இடமாக பிரபலமாக உள்ளது நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால் பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்க்கிறது. துறைமுகத்தில் பெர்த்திற்காக காத்திருக்கும் கடலில் நங்கூரமிட்ட கப்பல்களை கடற்கரையிலிருந்து காணலாம். [4]

தி பிரேக்வாட்டர்[தொகு]

இந்தக் கடற்கரை புதிய மங்களூர் கடல் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது. இந்த பாறை சுவர் உண்மையில் வடக்கு பாறை சுவர் அல்லது கடல் துறைமுக நுழைவாயிலின் வடக்கு உடைப்பு நீர் எனப்படுகிறது. பாறைகளில் நடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.[5] துறைமுகம் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இங்கு மக்கள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.[6]

இந்த கடற்கரையில் ஜெட் சறுக்கு, படகுச் சவாரி, தேர்ச் சவாரி போன்ற பல கேளிக்கை நடவடிக்கைகள் உள்ளன. நீண்டதூர ஒட்டகச் சவாரி, குதிரைச் சவாரி ஆகியன இங்கு நடக்கிறது. இங்கு நிறைய உணவுக் கடைகளும் உள்ளன. எண்ணிக்கையில் ஏராளமான கேளிக்கை நடவடிக்கைகளால் குழந்தைகளை மகிழ்விக்க முடியும். திருவிழாக்களின் போது கடற்கரை வெப்பமடைகிறது. வாகனம் நிறுத்தும் வசதியை பார்வையாளர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதன் மூலம் பயன்படுத்தலாம். [5]

நிகழ்வுகள்[தொகு]

பனம்பூர் கடற்கரையில் சூரியன் மறையும் ஒரு காட்சி

கடற்கரை திருவிழாக்கள், பட்டத் திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகள் அவ்வப்போது இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விழாவில் படகுப் பந்தயங்கள், வானவேடிக்கைகள், மணல் சிற்பப் போட்டிகளும் அடங்கும்.

பட்டத் திருவிழா[தொகு]

பனம்பூர் கடற்கரையில் பட்டம் விடப்படுகிறது

சர்வதேச கடற்கரை திருவிழா இந்த கடற்கரையின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள அணிகள் மற்றும் பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, குவைத், தாய்லாந்து, ஆத்திரேலியா, சிங்கப்பூர் , துருக்கி போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கடந்த காலங்களில் தீவிரமாக பங்கேற்றன. "அணி மங்களூர்" என்ற பெயரில் பட்டம் விடும் ஆர்வலர்கள் எப்போதும் இந்த கடற்கரையில் பட்டம் விடும் திருவிழாக்களை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவோடு நடத்துகிறார்கள். [7]

கடற்கரைத் திருவிழா[தொகு]

கடற்கரை திருவிழா என அழைக்கப்படும் புகழ்பெற்ற "கரவாலி உத்சவம்" என்பதின் ஒரு பகுதியாக தெற்கு கன்னட மாவட்ட நிர்வாகம் கடற்கரை விழாவை ஏற்பாடு செய்கிறது. இவ்விழாவில் சுமார் 2.5 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பொதுமக்களுக்காக பல கடைகள் ஏற்படுத்தப்படும். மூன்று நாட்களிலும் பொழுதுபோக்கும் மேடை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதில் நடனம் மற்றும் பாட்டுப் போட்டிகளும் இடம்பெறும்.

அணுகல்[தொகு]

கடற்கரைக்கு மேல் மேகங்கள்

பனம்பூர் கடற்கரை பொது போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மங்களூர் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல நகர பேருந்துகள் உள்ளன.

காலநிலை[தொகு]

மங்களூர் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் அரபிக் கடல் கிளையின் நேரடி செல்வாக்கின் கீழ் உள்ளது.

புகைப்படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Panambur Beach
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனம்பூர்_கடற்கரை&oldid=3093659" இருந்து மீள்விக்கப்பட்டது