ஹுக்கேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹுக்கேரி (Hukeri), என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். [1]

நிலவியல்[தொகு]

ஹுக்கேரியின் அமைவிடம்: 16°14′N 74°36′E / 16.23°N 74.6°E / 16.23; 74.6. [2]

ஹுக்கேரி ஒரு நகராட்சியாகவும், கர்நாடக மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டமாகவும் உள்ளது. இது பெல்காமிலிருந்து 50கி.மீ வடக்கு திசையில் அமைந்துள்ளது. ஹுக்கேரி வட்டம் அதன் எல்லைகளை வடக்கே சிக்கோடி, கிழக்கில் கோகக், தெற்கில் பெல்காம் வட்டம் மற்றும் மேற்கில் மகாராட்டிரா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்கிறது. ஹுக்கேரி வட்டத்தின் பரப்பளவு 992 கிமீ² மற்றும் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,57,127 ஆகும்.

போக்குவரத்து[தொகு]

ஹுக்கேரி பரந்த அளவிலான சாலை வழி அமைப்பைக் கொண்டுள்ளது. அருகிலுள்ள நகரங்களை மாநில நெடுஞ்சாலைகள் வழியாக அடையலாம். மேலும், கிராமங்களுக்கு செல்ல சரியான சாலை வழிகள் உள்ளன. ஒரு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.4) பெல்காம் நகரத்துடன் இணைகிறது.

அருகிலுள்ள விமான நிலையம்[தொகு]

பெல்காம் (சாம்ப்ரா) - 50   கி.மீ தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள இரயில் நிலையங்கள்[தொகு]

ஹுக்கேரியிலிருந்து, பெல்காம் - 50   கி.மீ மற்றும் கட்டப்பிரபா - 18   கி.மீ. தொலைவில் இரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

முக்கிய நதிகள்[தொகு]

கட்டபிரபா நதி, ஹிரண்யகேசி நதி மற்றும் மார்க்கண்டேய நதி போன்றவை ஹுக்கேரியிலுள்ள முக்கிய நதிகளாகும்.

தொழிற்சாலைகள்[தொகு]

ஹிரா சர்க்கரை தொழிற்சாலை (சங்கேஸ்வர்), சங்கம் சர்க்கரை தொழிற்சாலை (ஓசூர்), விஸ்வநாத் சர்க்கரை தொழிற்சாலை (பெல்லடா பாகேவாடி)

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

கோகக் அருவி: இது, நயாகரா அருவியை ஒத்த மணற்கல் குன்றின் மீது 52 மீட்டர் / 171 அடி உயரத்தில் இருந்து விழும் கட்டப்பிரபா நதியால் உருவாக்கப்பட்ட அருவியாகும். ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கும் பாலம் உள்ளது. இது சுமார் 201 மீட்டர் (659 அடி) நீளமாக உள்ளது. பாறை படுக்கைக்கு மேலே அதன் உயரம் 14 மீட்டர் (46 அடி)ஆகும். இங்கு, ஒரு பழைய மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. மேலும், 1887 இல் முதல் முறையாக இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

கிட்கல் அணை - பெலகாவி மற்றும் பாகல்கோட் மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன நன்மைகளை வழங்கும் கட்டபிரபா நதியில் அமைந்துள்ள நீர் தேக்கமாகும். குடச்சனா மலாக்கி அருவி அல்லது கோடச்சின்மல்கி அருவி என்பது மார்க்கண்டேய நதியில் அமைந்துள்ள அருவியாகும்.

நகரத்தின் வரலாறு[தொகு]

கன்னட மொழியில் 'ஹூவினா' + 'கெரே' என்ற இரண்டு சொற்களிலிருந்து பெறப்பட்ட ஒரு பெயர் ஹுக்கேரி ஆகும். இதன் பொருள் ஏரிகளில் ஏராளமான பூக்கள் வளர்க்கப்பட்டு பிஜப்பூரின் ஆதில் ஷாவுக்கு வழங்கப்பட்ட இடம் என்று சொல்லப்படுகிறது. ஊரில் அமைந்துள்ள ஒரு கோல்கும்பாஸில் பிஜப்பூருக்கு செல்லும் ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹுக்கேரி நகரின் நடுவில் 3 கோல் கும்பாஸ்கள் (கல்லறைகள்) உள்ளன. ஒன்று பொதுப்பணித்துறை அலுவலகமாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்ற 2 இடங்கள் எஞ்சியுள்ளன. இந்த வட்டத்தில் விவசாயமே முக்கிய தொழில் ஆகும். பயிரிடப்பட்ட முக்கிய பயிர்கள் பருத்தி, நிலக்கடலை, கரும்பு, சோயாபீன் மற்றும் மக்காச்சோளம் போன்றவை ஆகும். .

மகாத்மா காந்தியின் வருகை[தொகு]

மகாத்மா காந்தி 1916, நவம்பர் 7 அன்று ஹுக்கேரிக்கு விஜயம் செய்துள்ளார். அவர் கர்நாடகாவிலுள்ள நிப்பானி, சிக்கோடி மற்றும் சங்கேசுவர் பகுதிகளுக்கு வருகை தந்த போது, ஹுக்கேரிக்கு வந்தார் எனவும், பெல்காம் என்ற இடத்தில் தங்கினார் எனவும் குறிப்புகள் உள்ளன. [3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுக்கேரி&oldid=2886788" இருந்து மீள்விக்கப்பட்டது