சாம்பவி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ச் மாதம் ஒன்றில் பாலிமார் அணைக்கு அருகில் சாம்பவி ஆறு

சாம்பவி ஆறு (Shambhavi River) இந்தியாவின் கருநாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள குதுரேமுகத்தில் உருவாகிறது. இது அரபிக்கடலில் கலப்பதற்கு முன்பு கர்நாடகாவின் முல்கியில் நந்தினி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் அருகே உள்ள பல கிராமங்களுக்குச் சாம்பவி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.[1]

சாம்பவி ஆறு பருவமழை தவிர ஆண்டு முழுவதும் நீர்வரத்து குறைந்து காணப்படும்.

ஆற்றோட்டம்[தொகு]

சாம்பவி ஆறு 60 கி.மீ. நீளமுடைய ஒரு சிறிய நதி ஆகும். இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. இது நிட்டே அருகே உள்ள பார்ப்பப்பாடி அருவியின் வழியாகப் பாய்கிறது. பார்ப்பப்பாடி வீழ்ச்சிக்குப் பிறகு அது சுமார் 50 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இதன் பயண தூரத்தில் பல சிறிய அணைகளைப் பயன்படுத்தி ஆற்றின் நீர்மட்டம் சரிபார்க்கப்படுகிறது. பலிமார் அணை ஆற்றின் மேற்கு பகுதியில் கட்டப்பட்ட கடைசி அணையாகும்.

நீர் விளையாட்டு[தொகு]

சாம்பவி ஆறு இந்தியாவில் நீர் விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. பல வகையான நீர் விளையாட்டுப் போட்டிகள் சாகசங்கள் சாம்பவி ஆற்றில் நடக்கின்றன.

பலிமார் அணைக்கட்டு அருகே ஓய்வெடுக்கும் உல்லாசப் பயணிகள்

பனிக்கடற் படகு பயணம்[தொகு]

சமீபத்தில் நீண்ட தூரப் பொழுதுபோக்கு பனிக்கடற் படகு பயண நிகழ்வுகள்[2] சாம்பவி ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களின் அருகிலுள்ள நகரங்களிலிருந்து மக்கள் முல்கிக்கு பனிக்கடற் படகு சவாரி செய்ய வருகிறார்கள். பனிக்கடற் படகு பயண நிகழ்வு பொதுவாக இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள் சுமார் 30-40 வரை பயணம் செய்கிறார்கள்.[3]

மணல் அகழ்வு[தொகு]

சில உள்ளூர் மீனவர்களும் மணல் மாபியாக்கள் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் சில பகுதிகளில் பார உந்து கனரக கருவிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. சுரங்கத் தொழிலால் நீர் மாசுபடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை வடிகட்டவும், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் ஆற்றில் மணல் முக்கியமானது.

விவசாயம் மற்றும் மீன்பிடித்தல்[தொகு]

இந்த ஆற்றின் கரையில் குடியேறிய மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகும். பருவமழைக் காலங்களில் விவசாயத்திற்கு இந்த ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஆற்றில் நீர் வளம் நிறைந்தது. ஆற்றின் அருகே குடியேறிய மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இது பல குடும்பங்களுக்கு உணவு வழங்குகிறது. கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய மணலையும் மக்கள் வியாபாரம் செய்கின்றனர். இந்த மணல், ஆற்றின் படுகையிலிருந்து எடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shambhavi River in Dakshina Kannada, Karnataka". www.bangaloreorbit.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28. {{cite web}}: Text "BangaloreOrbit.com" ignored (help)
  2. Scroll Staff. "Ever wondered what it's like to take a kayak down an Indian river? This breathtaking video shows you" (in en-US). Scroll.in. https://video.scroll.in/832315/ever-wondered-what-its-like-to-take-a-kayak-down-an-indian-river-this-breathatking-video-shows-you. 
  3. "Learn Kayaking & Explore River Shambhavi in Karnataka" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பவி_ஆறு&oldid=3726262" இலிருந்து மீள்விக்கப்பட்டது