எப்பி நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்பி நீர்வீழ்ச்சிHebbe Falls
Hebbe Falls.JPG
அமைவிடம்கர்நாடகா, சிக்மகளூர் மாவட்டம், கெம்மங்குண்டி மலை
வகைஈரடுக்கு
மொத்த உயரம்551 அடி
எப்பி நீர்வீழ்ச்சி

எப்பி நீர்வீழ்ச்சி (Hebbe Falls) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கெம்மங்குண்டி என்ற மலைக்கு அருகேயுள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். 13°32′29″வடக்கு 75°43′30″கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் இம்மலைக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் இது இருக்கிறது. ஒரு காப்பித் தோட்ட்த்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு நான்கு சக்கர வாகனம் அல்லது நடை பயணமாக சென்றடையலாம். எப்பி நீர்வீழ்ச்சி 551 அடி [1] உயரத்திலிருந்து பெரிய நீர்வீழ்ச்சி என்ற பொருள் கொண்ட தோத்தா எப்பி என்றும் சிறிய நீர்வீழ்ச்சி என்ற பொருள் கொண்ட சிக்கா எப்பி என்றும் இரண்டு கட்டங்களாக கீழ்நோக்கி விழுகிறது.

ஆகத்து 2016 நிலவரப்படி மலையேற்றத்தில் விருப்பம் கொண்டவர்களுக்கு இங்கு அதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த இடத்தில் குறிப்பாக மழைக்காலத்தில் அட்டைப்பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. தனியார் தோட்டங்களில் புகுந்து செல்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு வனத்துறை வாகனங்களை தேர்வு செய்து அதில் பயணம் செய்வது சிறந்த பயணத்திட்டம் ஆகும். இந்த நீர்வீழ்ச்சியை அடைவதற்கான கடைசி கிலோமீட்டர் தொலைவை மலையேற்றம் மூலமே கடந்து செல்ல வேண்டும்.

அடையும் வழிகள்[தொகு]

சாலை வழி: காதுரு தாலுக்காவிலுள்ள பிரூர் நகரத்திலிருந்து ஏராளாமான பேருந்துகளுக்கான இணைப்பு கிடைக்கிறது. பெங்களூர் – சிக்மகளூரு, பெங்களூர் – சிமோகா பாதையில் செல்லும் பேருந்துகள் இவ்விணைப்பில் கிடைக்கும். சுய வாகனத்தில் சென்றால் தேசிய நெடுஞ்சாலை 206 இல் பயணம் செய்து இவ்விடத்தை அடையாலாம். பிரூரிலிருந்து வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் உண்டு.

இரயில் வழி: பெங்களூர்-சிமோகா, பெங்களூர்-தாவண்கரே இடையிலான தொடருந்து பாதையில் பிரூர் சந்திப்பு இரயில் நிலையம் அமைந்துள்ளது. பிரூரிலிருந்து உள்ளூர் வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்து சேவைகள் உண்டு.

விமான வழி: பெங்களூர் மற்றும் மங்களூர் நகரங்களின் விமான நிலையங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களாகும். இங்கிருந்து 5 மணி நேர சாலைப் பயண வழியில் பிரூரை அடைந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.

அருகிலுள்ள தங்குமிடங்கள்[தொகு]

காதுர் நகரில் குறிப்பாக கே.எம் சாலையில் ஏராளமான நல்ல சாதாரண மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் தங்கும் விடுதிகள் உள்ளன. சிக்மகளூர் நகரும் ஓர் அற்புதமான வசதிகள் கொண்ட மற்றுமொரு நகரம் சார்ந்த வாய்ப்பாகும், காபி தோட்டக் காட்சிகளும் அருகில் ஏராளமான சுற்றுலா இடங்களும் இங்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Waterfall Details". 2019-05-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-30 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்பி_நீர்வீழ்ச்சி&oldid=3545746" இருந்து மீள்விக்கப்பட்டது