அமர்யா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமர்யா நதி (Amarja river) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கலாபுராகி மாவட்டத்தில் பாய்கின்ற ஒரு நதியாகும். கொரால்லி கிராமத்தில் பிறக்கும் இந்நதி 50 – 60 கிலோமீட்டர்கள் பாய்ந்து பின்னர் குல்பர்கா மாவட்டம், கனகாபுரா கிராமத்தில் உள்ள சங்கம சேத்ராவில் பீமா நதியுடன் இணைகிறது. பீமா நதியும் அமர்யா நதியும் சங்கமமாகின்ற புள்ளி சங்கம சேத்ரா என்றழைக்கப்படுகிறது. இவ்விரு நதிகளும் சங்கமித்து சேருமிடத்தில் உள்ள தண்ணீர் மிகவும் அரிய புனிதநீராக கருதப்படுகிறது. இச்சங்கமத்தில் நிராடுபவர்களின் பாவங்கள் யாவும் தொலைந்து அவர்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இச்சங்கமத்தில் உள்ள கோவிலில் நரசிம்ம சரசுவதி சுவாமி ( தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரம்) தினந்தோறும் நீராடுவதாகவும் நம்பப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vasundhara Bire, Avdhoot Aadkar (March 2015). "भीमा-अमरजा संगमातीरी गुरूदत्त गाणगापुरी" (in Marathi). Akkalkot Swamidarshan (Solapur: Satish Kulkarni and Swamikrupa Printing press). 
  2. Om Sadguru Pratisthan (February 1984) (in Gujarati). ઓમ સદગુરુ પ્રતિષ્ઠાન નિત્ય ઉપાસના. Borivali, Mumbai: Pallavi Prakashan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்யா_நதி&oldid=2039742" இருந்து மீள்விக்கப்பட்டது