தண்டவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்டவதி (Dandavati) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தில் ஒரு வட்டமான சோராப் வழியாக பாயும் ஒரு ஆறாகும். இது கட்டினக்கரேவில் உள்ள ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து உருவாகிறது. கட்டினக்கரே நீர்த்தேக்கத்தின் வழிதல் கால்வாய் தண்டவதி நதியாக மாறும் வழியில் ஒரு சிற்றோடையாக உருவாகி பலமான ஆறாக மாறுகிறது. இந்த ஆறு குப்பே வழியாக பாய்ந்து அனாவட்டிக்கு அருகிலுள்ள பங்கசனா என்ற இடத்தில் வரதா நதியில் இணைகிறது. வரதா, துங்கபத்திரை ஆறு மற்றும் பின்னர் கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது. இது இறுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இணைகிறது. இங்கு இரங்கநாதருக்கு தண்டவதி ஆற்றின் கரையில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

தொன்மம்[தொகு]

இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் வனவாசம் மேற்கொண்டபோது, அவர்கள் சோராப் வழியாக பயணம் செய்ததாக பழைய கதை கூறுகிறது. சீதைக்கு தாகம் ஏற்பட்டதாகவும், இராமன் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்காக தரையில் இருந்து ஒரு துளையிட்டதாகவும், அதுவே இப்போது ஆறாக ஓடுகிறது.

தண்டவதி நீர்த்தேக்க திட்டம்[தொகு]

சோராப் கிராமத்திற்கு அருகில் சிலானூர் கிராமத்திற்கு அருகில் தண்டவதி ஆற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 50,500 ஏக்கர் விவசாய மற்றும் வன நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது. திட்டத்திலிருந்து இடப்பெயர்ச்சிக்கு அஞ்சிய விவசாயிகள் போராட்டங்களை நடத்தியதால், இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றதாகியது. ஆனால் அரசியல் லாபங்களுக்காக என்று சிலர் கூறியுள்ளனர்.

பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலிலும் அரசியல்வாதிகள் இந்த சர்ச்சையைப் பயன்படுத்தினர். கிருஷ்ணா பள்ளத்தாக்கின் கீழ் வரும் ஆற்றின் நீர்மட்டத்தை கிருஷ்ணா நீர் தகராறு தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்களின்படி பயன்படுத்த வேண்டும் என்று நீர்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன, தண்டவதி திட்டத்தை செயல்படுத்துவதில் சட்டரீதியான தடைகள் இருக்கின்றன.

இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த தண்டவதி விரோதி ஹோராட்டா சமிதி அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறுகிறது. வளமான விவசாய நிலங்களையும் மழைக்காடுகளையும் மூழ்கடித்து வறண்ட நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதன் பின்னணியில் உள்ள பகுத்தறிவை இது கேள்விக்குள்ளாக்குகிறது. வட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதில் அரசாங்கம் அவ்வளவு அக்கறை கொண்டிருந்தால், எழுபதுகளில் திட்டமிடப்பட்ட பைதானாலா பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டவதி&oldid=3047515" இலிருந்து மீள்விக்கப்பட்டது