செனாப் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனாப் பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்கு
இராம்பனில் பாயும் செனாப் ஆறு
ஜம்மு காஷ்மீரில் செனாப் பள்ளத்தாக்கின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீரில் செனாப் பள்ளத்தாக்கின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
பரப்பளவு
 • நிலம்17,978 km2 (6,941 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்924,345
மொழிகள்
 • பேச்சு மொழி
 1. காஷ்மீரி
 2. உருது
 3. கோஜ்ரி மொழி
 4. கிஷ்த்துவாரி மொழி
மாவட்டங்கள்

செனாப் பள்ளத்தாக்கு அல்லது செனாப் நிலப்பகுதி (Chenab Valley or Chenab Region), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாயும் செனாப் ஆற்றின் பெயரால் வழங்கப்படும் ஒரு பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. செனாப் ஆறு பாயும் தோடா மாவட்டம், கிஷ்துவார் மாவட்டம் மற்றும் இராம்பன் மாவட்டங்களிலுள்ள நிலப்பகுதியையும் குறிக்கிறது.[a][2][3][4]

புவியியல்[தொகு]

Map செனாப் பள்ளத்தாக்கு இமயமலைத் தொடருக்கும் ஜம்மு நடுவில் அமைந்துள்ள சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரில் செனாப் ஆறு பாய்கிறது. செனாப் பள்ளத்தாக்கில் தோடா மாவட்டம், கிஷ்துவார் மாவட்டம் மற்றும் இராம்பன் மாவட்டங்கள் அமைந்துள்ளது.[1][2] செனாப் பள்ளத்தாக்கில் செனாப் ஆறு பாய்கிறது. செனாப் பள்ளத்தாக்கின் வடக்கில் அனந்தநாக் மாவட்டம், தெற்கில் கதுவா மாவட்டம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம், தென்மேற்கில் உதம்பூர் மாவட்டம், மேற்கில் ரியாசி கோட்டம் அமைந்துள்ளது. செனாப் பள்ளத்தாக்கின் நடுவில் தோடா மாவட்டம் உள்ளது. செனாப் பள்ளத்தாக்கில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.[5] செனாப் பள்ளத்தாக்கு சிவாலிக் மலைகளால் சூழ்ந்தது. மேலு இது நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளது.[6]

மக்கள்[தொகு]

செனாப் பள்ளத்தாக்கின் காஷ்மீர மக்களில் குஜ்ஜர்கள், பகாரிகள் மற்றும் பாதர்வாகி மக்கள் பெரும்பாலாக வாழ்கின்றனர். 1990களில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதப் போக்கு அதிகரித்த போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு அடுத்து செனாப் பள்ளத்தாக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றது. செனாப் பள்ளத்தாக்கு மக்களின் முக்கியத் தொழில் தோட்டப்பயிர், ஆடு, மாடுகள் வளர்த்தல் மற்றும் மேய்த்தல் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

சமயம்[தொகு]
செனாப் பள்ளத்தாக்கில் சமயம் (2011)[7]

  பிறர் (0.80%)
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பாலின விகிதம்[7]
(1000 ஆண்களுக்கு பெண்கள் விகிதம்)
சமயம் மற்றும் மக்கள் தொகை பாலின விகிதம்
இசுலாம் (மக்கள்தொகை 5,54,355)
  
932
இந்துக்கள் (மக்கள்தொகை 3,62,578)
  
884
பிறர் (மக்கள்தொகை 7,412)
  
722
மொத்தம் (மக்கள் தொகை 9,24,345)
  
913

செனாப் பள்ளத்தாக்கில் இசுலாமியர்களின் மக்கள்தொகை 60% விழுக்காடாகவுள்ளது. இந்து மக்கள் தொகை 40% விழுக்காடாக உள்ளது.

மொழிகள்[தொகு]

இந்தப் பள்ளத்தாக்கில் பல இனக்குழக்கள் உள்ளன. உருதும் ஆங்கிலமும் அலுவல் மொழிகள். இங்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் காஷ்மீரி மொழியுடன் கோஜ்ரி, கிஷ்த்துவாரி, பதர்வாஹி, சராசி, டோக்ரி, ரம்பானி, போகலி, பஹாரி, பலேசி, பாதரி போன்ற மொழிகளும் வழக்கிலுள்ளன.

Languages of Chenab Valley (2011)[8]

  கோஜ்ஜரி மொழி (10.17%)
  பதர்வாஹி மொழி (9.90%)
  சராசி மொழி (8.28%)
  தோக்கிரி மொழி (5.03%)
  கிஷ்துவாரி மொழி (4.18%)
  பஹாரி மொழி (4.03%)
  இந்தி (3.02%)
  பாதரி வழக்கு (1.86%)
  பிற மொழிகள் (6.51%)

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Anzer Ayoob (17 July 2021). "J&K: Chenab Valley Seeks Separate Divisional Status as well as Council". NewsClick.in. https://www.newsclick.in/Jammu-kashmir-chenab-valley-separate-divisional-status-council. 
 2. 2.0 2.1 Tahir Nadeem (9 February 2021). "'Earthquakes, cloudbursts can damage Chenab Valley dams'". Greater Kashmir. https://www.greaterkashmir.com/editorial/earthquakes-cloudbursts-can-damage-chenab-valley-dams. 
 3. "Geelani vows to resist settlement of retired soldiers in Kashmir". Archived from the original on 3 October 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
 4. "THROUGH THE PIR PANJAL". தி இந்து. 7 July 2001. பார்க்கப்பட்ட நாள் 21 October 2021.
 5. "Ghulam Nabi Azad promises to develop Chenab Valley as 'Model region'". Economic Times. 4 November 2014. https://m.economictimes.com/news/politics-and-nation/ghulam-nabi-azad-promises-to-develop-chenab-valley-as-model-region/articleshow/45033174.cms. 
 6. "Chenab valley quakes not due to hydro projects: Scientists"
 7. 7.0 7.1 C-1 Population By Religious Community – Jammu & Kashmir (Report). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
 8. C-16 Population By Mother Tongue – Jammu & Kashmir (Report). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. The Doda district was divided into the present-day districts of Doda, Kishtwar and Ramban in Jammu and Kashmir.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனாப்_பள்ளத்தாக்கு&oldid=3501452" இலிருந்து மீள்விக்கப்பட்டது