2001 கிஷ்துவார் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2001 கிஷ்துவார் படுகொலை
இடம்கிஷ்துவார், கிஷ்துவார் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
நாள்3 ஆகஸ்டு 2001
இறப்பு(கள்)17
காயமடைந்தோர்5

2001 கிஷ்துவார் படுகொலை (2001 Kishtwar massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்துவார் மாவட்டத்தின் தலைமையிடமான கிஷ்துவார் நகரத்தை ஒட்டி ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இந்து விவசாயிகள் மீது 10 பாகிஸ்தானிய இசுலாமிய பயங்கரவாத லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர் 3 ஆகஸ்டு 2001 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.[1][2]இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அரசை விமர்சனம் செய்தனர். குறைகூறினர்.[3]

மூன்று நாட்கள் கழித்து பாதுகாப்புப் படைகளால் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி முஜிபுர் இரக்மான் சுட்டுக்கொல்லப்பட்டார்.[4] இப்படுகொலைக்கு எதிராக ஜம்மு, உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் இந்துக்கள் பாகிஸ்தான் தேசியக் கொடி மற்றும் அதிபர் முஷரப் கான் உருவப் பொம்மையை எரித்தனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2001_கிஷ்துவார்_படுகொலை&oldid=3392100" இருந்து மீள்விக்கப்பட்டது