2016 பதான்கோட் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 பதான்கோட் தாக்குதல்
இடம்பதான்கோட் வான் படை நிலையம், பதான்கோட், பஞ்சாப், இந்தியா
ஆள்கூறுகள்32°14′01″N 75°38′04″E / 32.23361°N 75.63444°E / 32.23361; 75.63444ஆள்கூறுகள்: 32°14′01″N 75°38′04″E / 32.23361°N 75.63444°E / 32.23361; 75.63444
நாள்2 ஜனவரி 2016 to 4 ஜனவரி 2016
அதிகாலை 3.30 மணி (இசீநே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இந்திய வான்படை
தாக்குதல்
வகை
தீவிரவாதத் தாக்குதல்
ஆயுதம்AK-47, கையெறி குண்டுகள், IED
இறப்பு(கள்)6 தீவிரவாதிகள்[1]
பொதுமக்கள் ஒருவர்
7 பாதுகாப்புப் படை வீரர்கள்
காயமடைந்தோர்20 (8 இந்திய வான்படை & 12 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள்)[2]
தாக்கியோர்ஐக்கிய சிகாத் மன்றம் (United Jihad Council)[3]
தாக்கியோர்6 தீவிரவாதிகள்
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
ஜெய்ஸ்-இ-முகமது[4]
எதிர்த்தோர்
நோக்கம்Destroy parked helicopters and aircraft
2016 பதான்கோட் தாக்குதல் is located in பஞ்சாப்
பதான்கோட் வான் படை நிலையம்
பதான்கோட் வான் படை நிலையம்
சண்டிகர்
சண்டிகர்

2016 பதான்கோட் தாக்குதல் என்பது 2 சனவரி 2016 அன்று இந்திய மாநிலம் பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் வான் படை நிலையத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் குறிக்கும்.[6][7] இத்தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் 7 பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐக்கிய சிகாத் மன்றம் (United Jihad Council) பொறுப்பேற்றுள்ளது[8] தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையணிந்து இருந்தார்கள். அவர்கள் செய்சு இ மொகமது ( Jaish-e-Mohammed) இசுலாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.[9] தாக்குதலுக்கு முதல் நாள் பஞ்சாப் காவல்துறை காண்காணிப்பாளரின் மகிழுந்து கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட மகிழுந்தே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது.[4] இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்குமிடையே புதிதாக உருவாகியுள்ள நல்லெண்ணெத்தைக் குலைக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.[10][11][12]

முதலில் இரு தீவிரவாதிகளும் மூன்று பாதுகாப்பு படை வீரர்களும் இறந்தனர். காயம் பட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த மூன்று வீரர்கள் இறந்ததை அடுத்து இறந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை ஆறு ஆகியது. சனவரி 3 அன்று கைவினை வெடி குண்டு வெடித்ததில் மேலும் ஒரு வீரர் இறந்தார். சனவரி 4 அன்றும் வான்படை தளத்தை மீட்கும் நடவடிக்கை நடந்தது.

இறந்த நான்கு தீவிரவாதிகளின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் இரண்டு தீவிரவாதிகள் இருந்த கட்டடம் பாதுகாப்பு படையால் வெடிக்கப்பட்டதால் தடவியல் சோதனை முடிந்த பின்பே எத்தனை தீவிரவாதிகள் என்று உறுதியாக கூறமுடியும் என தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.[13]

பின்னணி[தொகு]

டிசம்பர் 30-31 அன்று ஆறு தீவிரவாதிகள் காத்துவா-குர்தாசுபூர் எல்லை வழியாக உள்நுழைந்தனர். பின் ஒன்றில் நான்கு பேரும் மற்றொன்றில் இருவரும் என இரண்டு குழுக்களாக பிரிந்தனர். டிசம்பர் 31 இரவு இகாகார் சிங்கின் ஐனோவா வாடகை காரை எடுத்து கதியோர் பாலம் அருகே இகாகார் சிங்கை கொன்றனர். 11.30 மணியளவில் வண்டி ஓடாமல் நின்றதால் [14] காவல் கண்காணிப்பாளர் சல்வின்தர் சிங்கின் காரை அவருடைய சமையல்காரர் மதன் கோபால் & நகை வியாபாரி ராசேசு குமார் வர்மா ஆகியோரை காருடன் கடத்தினர். சனவரி 1 அதிகாலை சல்வின்தர் சிங்கையும் அவருடைய சமையல்காரரையும் கொல்லாமல் வெளியே கட்டி காட்டில் வீசிவிட்டனர். சல்வின்டர் சிங்கை இராணுவ அதிரடி வீரர் என்று தீவிரவாதிகள் நினைத்திருந்தனர். ராசேசு மூலம் அவர் காவல் அதிகாரி என்று தெரிந்துகொண்டனர். ராசேசு குமார் வர்மாவின் தொண்டையை வெட்டிய போதிலும் அவர் தப்பித்துக்கொண்டார்.

கட்டிலிருந்து தப்பித்த சல்வின்தர் சிங்கும் அவரின் சமையல்காரர் மதன் கோபாலும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தாங்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதைப் பற்றி சொன்னதை காவலர்கள் முதலில் நம்ப மறுத்துவிட்டனர். இதைக்கூறிய மோகன்லால் காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பின்பே காவலர்கள் அவர்கள் கூறியதை மேலதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

தாக்குதல்[தொகு]

சனவரி 2, 2016 அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதலை தொடுத்தனர். அவர்கள் 1ந்தேதி இரவே வான்படை தளத்துக்கு வந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Five terrorists who attacked Pathankot air base killed, combing operations still on". India Today. 4 ஜனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Govt denies lapses in Pathankot op; unsure of number of terrorists involved". 3 ஜனவரி 2016.
 3. Ashiq, Peerzada. "United Jihad Council claims responsibility for Pathankot attack". The Hindu. 4 ஜனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 "LIVE: Terrorists launch attack on IAF base in Pathankot, fierce gunbattle on". http://www.dnaindia.com/india/live-terrorists-launch-attack-on-iaf-base-in-pathankot-fierce-gunbattle-on-2161442. 
 5. "LIVE: Terror attack at Pathankot Air Force base; 2 terrorist killed". http://indianexpress.com/article/india/india-news-india/live-terror-attack-at-pathankot-air-force-base-2-terrorist-killed/. 
 6. "Terrorists storm air force base, first challenge to Modi's Pak outreach". The Hindu. 2 ஜனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Pathankot attack: First terrorist was killed while he was climbing 10 meter high wall". The Indian Express. 2 ஜனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Pathankot: Kashmir-based militant coalition claims attack". பிபிசி. 4 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Pathankot attack: First terrorist was killed while he was climbing 10 meter high wall". The Indian Express. 4 ஜனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Terrorist Attack on Pathankot, India: Very Bad, But, U.S. Will Promote Peace Talks by Modi Anyway". Forbes (Forbes). http://www.forbes.com/sites/charlestiefer/2016/01/03/terrorist-attack-on-pathankot-india-very-bad-but-u-s-will-promote-peace-talks-by-modi-anyway/. பார்த்த நாள்: 3 ஜனவரி 2016. 
 11. "Anti-peace forces behind Pathankot terror attack, says Harsimrat". http://www.hindustantimes.com/ (hindustantimes). http://www.hindustantimes.com/punjab/anti-peace-forces-behind-pathankot-terror-attack-says-harsimrat/story-zZPXNqt4OKC7sHehZ8l1aJ.html. பார்த்த நாள்: 3 ஜனவரி 2016. 
 12. "Pathankot terror attack shouldn't deter peace talks with Pakistan, say some opposition leaders – Times of India". The Times of India (Times of India). http://timesofindia.indiatimes.com/india/Pathankot-terror-attack-shouldnt-deter-peace-talks-with-Pakistan-say-some-opposition-leaders/articleshow/50414995.cms. பார்த்த நாள்: 3 ஜனவரி 2016. 
 13. "NIA establishes how ultras entered airbase, but still not sure of number". The Times of India (The Hindu). http://www.thehindu.com/news/national/nia-establishes-how-ultras-entered-airbase-but-still-not-sure-of-number/article8082865.ece?homepage=true. பார்த்த நாள்: 8 ஜனவரி 2016. 
 14. "Everything You Need to Know About Pathankot Terror Attack – Timeline, Facts And Lessons". thelogicalindian. 9 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]