2010 தந்தேவாடா பேருந்து குண்டுவெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2010 தந்தேவாடா பேருந்து குண்டுவெடிப்பு
இடம்தந்தேவாடா மாவட்டம், இந்தியா
ஆள்கூறுகள்18.88953,81.349831
நாள்17 மே 2010 (ஓ.ச.நே+5:30)
தாக்குதல்
வகை
வெடிகுண்டு
ஆயுதம்கைவினை வெடி குண்டு (ஐ.ஈ.டி.) அல்லது தெருவோர குண்டு
இறப்பு(கள்)31-44
காயமடைந்தோர்15[1]

2010 தந்தேவாடா பேருந்து குண்டுவெடிப்பு, மே 17, 2010 அன்று சத்தீசுகர்மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் தந்தேவாடாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஓர் பேருந்து கண்ணிவெடி தாக்குதலுக்கு உண்டான நிகழ்வைக் குறிப்பதாகும். சிறப்பு காவல் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட, இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 31-இல்[2] இருந்து 44-க்குள்[3] இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.[4][5]

பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தைத் குறிவைத்துத் தாக்கிய முதல் நக்ஸல் தாக்குதல் இதுவெனக் கருதப்படுகிறது.[6] இச்சம்பவம் 2001 தந்தேவாடா மாவோயிஸ்டு தாக்குதலில் 76 மத்திய சேமக் காவல் படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நிகழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 18°53′22″N 81°20′59″E / 18.88953°N 81.349831°E / 18.88953; 81.349831