2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்
நிகழ்விடம்பாட்னா, பிகார், இந்தியா
நாள்27 அக்டோபர் 2013 (ஒ.ச.நே + 05:30)
ஆயுதம்(ங்கள்)8 நாட்டு வெடிகுண்டுகள்[1]
இறப்பு(கள்)5[1]
காயமடைந்தவர்66[1]

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படிருந்த நரேந்திர மோதி, பிகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் 27 அக்டோபர் 2013 அன்று கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, பாட்னாவில் எட்டு இடங்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் பலியாயினர் மற்றும் 66 பேர் காயமுற்றனர்.[1][2][3] இந்த குண்டுவெடிப்புகளுக்கு எவரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை[4]இக்குண்டு வெடிப்புகளுக்க் இந்தியன் முஜாகிதீன் என்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பு காரணமாக இருந்தது.

பாட்னா தொடர்வண்டி நிலையம் குண்டுவெடிப்புக்கள்[தொகு]

27 அக்டோபர் அன்று பாட்னா தொடர்வண்டி நிலையத்தின் பத்தாவது நடைமேடையில் ஓர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டன[5].

காந்தி மைதான் குண்டு வெடிப்புகள்[தொகு]

காந்தி மைதானில் நடைபெற்ற நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் ஐந்து குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்[5] . இந்த மைதானத்திற்கு அருகே இருந்த திரையரங்கில் வெடித்த குண்டில் ஆறு பேர் காயமடைந்தனர்[6]. மோடி அவர்கள் பேசிய மேடையின் கீழ் வெடிக்காத குண்டு ஒன்று கைபெற்றபட்டது. மாலை ஐந்து மணி அளவில் மைதானத்தில் ஓர் குப்பை மேட்டின் கீழே மேலும் ஒரு குண்டு வெடித்தது. [1]

தொடர் வெடிகுண்டு வெடிப்புகள் வழக்கும் தீர்ப்பும்[தொகு]

பாட்னா தொடர்குண்டு வழக்கின் விசார்ணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டது. இந்த வழக்கில் 27 அக்டோபர் 2021 அன்று தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாட்னா தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த இந்தியன் முஜாகிதீன் எனும் இசுலாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, நோமன் அன்சாரி, முகமது முஜிபுல்லா அன்சாரி ஆகிய 4 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், அகமது உசைன், பெரோஸ் அஸ்லாம் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முகமது இப்திகார் ஆலத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]