13 மே 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2008 மே 13 ஜெய்பூர் குண்டு வெடிப்பு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான, ஜெய்ப்பூர் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஆகும். இந்த குண்டுவெடிப்பில் 63 பேர் இறந்திருக்க கூடும் என்றும் 216 பேர் காயம் அடைந்திருப்பார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.

தீவிரவாதிகள் ஜெய்பூரை இதுவே முதல் தடவையாக தாக்கியதகும். இந்த ஒன்பது குண்டுகளில் ஒன்று, ஜெய்பூரின் ஹவாமகாலில் வெடித்துள்ளது. இந்த மஹால், ஒரு முக்கிய இடமாகும்.

இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, இந்திய "மீடியா" அலுவலகத்திற்கு, "இந்தியா முஜாஹிதின்" என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் உள்ள இந்து மதப்பற்றை அழிப்பதற்காக, குண்டு வைக்கப்பட்டது என்று "e-mail" அனுப்பியுள்ளர்கள். எனினும், இந்திய home ministry, வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்பு தன் காரணமாக இருக்ககூடும் என்று கூறுகிறது. இதை அடுத்து, ராஜஸ்தானில் தங்கிருக்கும், வங்களதேசத்தை சேர்ந்த, 50,000 அகதிகளை, இந்தியா வெளியேற்றும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.