2003 புல்வாமா படுகொலைகள்
2003 புல்வாமா படுகொலைகள் (2003 Nadimarg massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்திலுள்ள் நதிமார்க் கிராமத்தில் நுழைந்து, 23 மார்ச் 2003 அன்று லஷ்கர்-ஏ-தொய்பா எனும் இசுலாமிய பயங்கரவாதிகள் 24 இந்துக்களை சுட்டுக் கொன்றனர்.[1][2][3]
பின்னணி[தொகு]
1990-ஆம் ஆண்டுகளில் இசுலாமிய பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஜம்மு காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களான 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையிலான இந்து சமய காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி இந்தியால் உள்நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டனர். [4]
தாக்குதல்[தொகு]
லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இராணுவத்தினர் போன்று உடை அணிந்து[5] 23 மார்ச் 2003 அன்று இரவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் நந்திமார்க் எனும் கிராமத்தில் நள்ளிரவில் நுழைந்து அங்கு வாழ்ந்த இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களை வீடுகளிலிருந்து இழுத்து வெளியேற்றி துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர்.[6]பயங்ரகரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள், 11 பெண்கள் உட்பட மொத்தம் 24 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.[7][8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kashmir killing stokes tension பரணிடப்பட்டது 25 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம், Dawn, 25 March 2003
- ↑ Kashmir Massacre Shakes Village’s Sense of Fraternity பரணிடப்பட்டது 28 செப்டம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், Los Angeles Times, 30 March 2003
- ↑ 24 Hindus Are Shot Dead in Kashmiri Village பரணிடப்பட்டது 11 பெப்ரவரி 2017 at the வந்தவழி இயந்திரம், The New York Times, 24 March 2003
- ↑ Casimir, Michael J.; Lancaster, William; Rao, Aparna (1997-06-01). "Editorial". Nomadic Peoples 1 (1): 3–4. doi:10.3167/082279497782384668. பன்னாட்டுத் தர தொடர் எண்:0822-7942.
- ↑ Grief, Again பரணிடப்பட்டது 20 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம், Time, 31 March 2003
- ↑ 24 Hindus killed in Indian Kashmir பரணிடப்பட்டது 9 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம், Agence France-Presse, 24 March 2003
- ↑ Appendix A – Chronology of Significant International Terrorist Incidents, 2003 (Revised 6/22/04) , United States Department of State
- ↑ 24 Pandits killed in Kashmirபரணிடப்பட்டது 7 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம், Rediff.com, 24 March 2003