2002 கலுசாக் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2002 கலுசாக் படுகொலைகள்
நிகழ்விடம்கலுசாக், ஜம்மு. ஜம்மு காஷ்மீர், இந்தியா
நாள்14 மே 2002 (இந்திய சீர் நேரம், UTC+05:30)
இலக்குசுற்றுலாப் பேருந்து, இராணுவப் பாசறை
தாக்குதல் வகைதுப்பாக்கிச் சூடு
இறப்பு(கள்)31[1]
காயமடைந்தவர்47[1]
Perpetrator(s)லஷ்கர்-ஏ-தொய்பா

2002 கலுசாக் படுகொலைகள் (2002 Kaluchak Massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் ஜம்மு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜம்முவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கலுசாக் பகுதியில், 14 மே 2002 அன்று, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள், எல்லை தாண்டி வந்து, இந்திய இராணுவத்தினரின் சீருடை அணிந்து கொண்டு வந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சுற்றுலாப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரைக் கொன்றனர்.[2][3] பின்னர் அருகில் இருந்த ஒரு இராணுவக் குடியிருப்பில் நுழைந்து மறைந்திருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், கையெறி குண்டு வீச்சிலும் 3 இராணுவ வீரர்கள், 18 இராணுவத்தினர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காயமுற்ற 47 பேரில் 12 இராணுவத்தினர், 20 இராணுவ குடும்பத்தினர் மற்றும் 15 பொதுமக்கள் அடங்குவர்.[4][5]இந்த தாக்குதலின் முடிவில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 லஷ்கர்-ஏ-தொய்பா இசுலாமிய பயங்கரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த கோழைத்தன தாக்குதலுக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக கண்டனங்கள் தொடுத்ததை முன்னிட்டு, வேறு வழியின்றி, பாகிஸ்தான் அரசு, கலுசாக் படுகொலைக்கு முளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவன் ஹபீஸ் முஹம்மது சயீத் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது.[1][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2002_கலுசாக்_படுகொலைகள்&oldid=3484512" இருந்து மீள்விக்கப்பட்டது