ஹபீஸ் முஹம்மது சயீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹஃபீஸ் முஹம்மது சயீத்
(உருது: حافظ محمد سعید)
Hafiz-mohd-saeed.jpg
பிறப்புமார்ச்சு 10, 1950 (1950-03-10) (அகவை 70)
சர்கோதா, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தான்பாக்கித்தான்
அமைப்பு(கள்)ஜமாத்-உத்-தாவா
சமயம்சுன்னி இசுலாம்

ஹஃபீஸ் முஹம்மது சயீத் (Hafiz Muhammad Saeed, உருது: حافظ محمد سعید; பிறப்பு 1950) ஜமாத்-உத்-தாவாவின் அமீர் (தலைவர்) ஆவார்.[1] இந்த அமைப்பு ஓர் ஈகை நிறுவனமாக இருப்பினும் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் இந்திய காவல்துறையால் மிகவும் தேவைப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.[2] ஐக்கிய நாடுகளின் தீர்மானம் எண் 1267இன்படி திசம்பர் 2008இல் ஜமாத்-உத்-தாவா ஓர் தீவிரவாத அமைப்பாகவும் ஹபீஸ் சயீத் ஓர் தீவிரவாதியாகவும் அறிவிக்கப்பட்டது.[3] ஹபீஸ் சயீத் தமக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.[4] [5] 2008 மும்பை தாக்குதல்களில் சாட்டுரைக்கப்பட்ட இவரை காட்டிக் கொடுப்பவர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா $10 மில்லியன் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது .[6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபீஸ்_முஹம்மது_சயீத்&oldid=2714509" இருந்து மீள்விக்கப்பட்டது