2006 அகமதாபாத் தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு
2006 அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம் குண்டுவெடிப்பு | |
---|---|
இடம் | அகமதாபாது, குசராத்து, இந்தியா |
நாள் | 19 பிப்ரவரி 2006 01:43[1] (IST) |
தாக்குதல் வகை | குண்டு வெடிப்பு |
காயமடைந்தோர் | 10[2]-25[3] |
தாக்கியோர் | இலசுகர் இ தொய்பா[2] |
2006 அகமதாபாத் தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு (2006 Ahmedabad railway station) இந்தியாவின் அகமதாபாத்து நகரிலுள்ள கலுபூர் தொடருந்து நிலையத்தின் நடைமேடை எண் 2/3 இல் குண்டு வெடித்தது.[1][4] 10-25 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.[2][3] குண்டுவெடிப்பு நேரத்தில் தொடருந்து எதுவும் நடைமேடையில் இல்லை. குண்டு வெடிப்பதற்கு முன் இரண்டு தொடருந்துகள் கடந்து சென்று விட்டன. கட்ச் விரைவுவண்டி சற்று நேரத்தில் நடைமேடைக்கு வரவிருந்தது. ஒருவேளை ஏதேனும் தொடருந்து நடைமேடையில் நின்றிருந்தால் வெடிப்பின் விளைவுகள் கடுமையாக இருந்திருக்கும்.
அதிகாலை 1:43 மணியளவில் தொடருந்து நிலைய நடைமேடைகளில் நிறுவப்பட்டிருந்த பொதுத் தொலைபேசி அழைப்பு சாவடிகளில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.[5]
விசாரணைகள்
[தொகு]ஒரு கைப்பெட்டியில் 1.5 கிலோ ஆர்டிஎக்சு வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வெடிபொருட்கள் மும்பையிலிருந்து அகமதாபாத் தொடருந்து நிலையத்திற்கு கர்னாவதி விரைவு வண்டியின் சொகுசு நாற்காலி பெட்டியில் வந்திருந்தன.[6]
குசராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை குற்றம் சாட்டப்பட்ட முகமது அமீர் சக்கீல் அகமது சேக், மகமது இலியாசு அப்துல் மேமன், சையத் ஆகிப், மகமது அசுலாம் காசுமீரி மற்றும் அபு இயுண்டால் ஆகியோரைக் கைது செய்தது.[7]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ 2.0 2.1 2.2 "Ahmedabad railway station blast accused chargesheeted". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-03-18. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
- ↑ 3.0 3.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Gujarat ATS arrests man in connection with 2006 Ahmedabad blast case". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
- ↑ "2006 Kalupur Railway Station blast case: ATS arrests Bengal man who 'helped' accused flee to Pak". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "2006 Kalupur Railway Station blast case: ATS arrests Bengal man who 'helped' accused flee to Pak". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.