2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்
இரண்டாம் குண்டு வெடித்த இடம்
இடம்தில்சுக்நகர்,
ஐதராபாத்து, இந்தியா
நாள்பெப்ரவரி 21, 2013
18:58 இலிருந்து 19:01க்குள் (இ.சீ.நே (UTC+5.30))
தாக்குதல்
வகை
தொடர் குண்டுவெடிப்பு
ஆயுதம்கைவினை வெடி குண்டுகள்[1]
இறப்பு(கள்)17[2]
காயமடைந்தோர்119[3]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இந்திய முஜாஹிதீன்[4][5]

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் பெப்ரவரி 21, 2013 அன்று மாலை இந்திய நேரப்படி 19:00 மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன. கூட்டம் மிகுந்த சுற்றுப்புறப் பகுதியான தில்சுக்நகரில்[6] 100 மீட்டர்களுக்குள்ளேயே இரண்டு குண்டுகளும் வெடித்துள்ளன.[7][8] முதல் குண்டுவெடிப்பு கோனரக் திரையரங்கின் எதிரிலிருந்த ஆனந்த் டிபன் சென்டர் என்ற உணவகத்தின் வெளியே சாலையோரத்தில் வெடித்தது. இரு நிமிடங்கள் கழித்து இரண்டாவது குண்டு வெங்கடாத்திரி திரையரங்கின் அண்மையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெடித்துள்ளது.[9][10] முன்னதாக 2012இல் புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களையொட்டி தில்லி சிறப்புக் காவல் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் என நம்பப்படும் கைதிகள் தாங்கள் ஐதராபாத்தின் கூட்டமானப் பகுதிகளை இந்நோக்கில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளனர்.[11]

சான்றுகோள்கள்[தொகு]

  1. "IED used in twin blasts in Hyderabad: DGP". DNA India. PTI. 21 February 2013. http://www.dnaindia.com/india/report_ied-used-in-twin-blasts-in-hyderabad-dgp_1802842. பார்த்த நாள்: 21 February 2013. 
  2. Reddy, B Dasarath (22 February 2013). "Hyderabad blasts: toll goes up to 17". Business Standard. http://www.business-standard.com/article/current-affairs/hyderabad-blasts-toll-goes-up-to-16-113022200155_1.html. பார்த்த நாள்: 22 February 2013. 
  3. "14 killed, 119 injured in Hyderabad blasts, probe team appointed says Sushilkumar Shinde". DNA India. IANS. 22 February 2013. http://www.dnaindia.com/india/report_sushilkumar-shinde-visits-blast-site-toll-climbs-to-14_1802972. பார்த்த நாள்: 22 February 2013. 
  4. "Indian Mujahideen hand becomes clearer in Hyderabad blasts". Times of India. TNN. 23 February 2013. http://timesofindia.indiatimes.com/india/Indian-Mujahideen-hand-becomes-clearer-in-Hyderabad-blasts/articleshow/18635772.cms. பார்த்த நாள்: 23 February 2013. 
  5. "Blasts at the behest of IM's Pak-based gurus". DNA India. DNA. 23 February 2013. http://www.dnaindia.com/india/report_blasts-at-the-behest-of-im-s-pak-based-gurus_1803330. பார்த்த நாள்: 23 February 2013. 
  6. "Hyderabad blasts: Dilsukhnagar has been on Indian Mujahideen radar since 1999". Times of India. TNN. 22 February 2013. http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-blasts-Dilsukhnagar-has-been-on-Indian-Mujahideen-radar-since-1999/articleshow/18618850.cms. பார்த்த நாள்: 22 February 2013. 
  7. "12 dead, 50 injured in blasts in Hyderabad". DNA India. IANS. 21 February 2013. http://www.dnaindia.com/india/report_11-dead-50-injured-in-blasts-in-hyderabad_1802679. பார்த்த நாள்: 21 February 2013. 
  8. "12 dead, 84 injured in blasts in Hyderabad". DNA India. PTI. 21 February 2013. http://www.dnaindia.com/india/report_12-dead-84-injured-in-blasts-in-hyderabad_1802679. பார்த்த நாள்: 21 February 2013. 
  9. "Two blasts in Dilsukh Nagar area in Hyderabad". Zee News. 21 February 2013. http://zeenews.india.com/news/andhra-pradesh/blast-in-dilsukh-nagar-in-hyderabad_830663.html. பார்த்த நாள்: 21 February 2013. 
  10. "13 die in Hyderabad blasts aimed at teeming clusters". The Telegraph, India. 22 February 2013. http://www.telegraphindia.com/1130222/jsp/frontpage/story_16592045.jsp#.USkExvLJK2o. பார்த்த நாள்: 23 February 2013. 
  11. "Delhi Police warned off possible attack in Hyderabad: Official". jagran Post. பார்க்கப்பட்ட நாள் 23 February 2013.