அமர்நாத் தாக்குதல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமர்நாத் பயணம்

அமர்நாத் தாக்குதல், 2017 என்பது புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த இந்து மதப் பயணிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலாகும். 10 ஜூலை 2017 அன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் இத்தாக்குதல் நடைபெற்றது. இத்தீவிரவாதத் தாக்குதலில் ஏழு மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர்களாவார். கொல்லப்பட்டவர்களில் அறுவர் பெண்களாவார். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.[1][2] இத்தாக்குதல் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.[3][4][5][6]

பின்புலம்[தொகு]

48 நாட்கள் வருடாந்திரப் புனித யாத்திரை 6,00,000 மக்களால் 130 அடி பனி லிங்கத்தைத் தரிசிக்க 12,756 அடி உயர இமயமலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த புனித யாத்திரையினால் வசூலிக்கப்படும் வரியானது மாநில அரசிற்கு வருவாயை ஈட்டுவதாக இருந்தது. இதைச் சீர்குலைக்கும் விதமாய் காஷ்மீரிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பல முறை பயணிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாய் இந்த வருடத் தாக்குதலும் நடத்தப்பட்டது.[7][8][9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 7 Dead in the Biggest Terror Attack on Amarnath Yatra in Years., Quint, 11 July 2017.
 2. "Why Amarnath Yatra terror attack signals crossing of a red line in Kashmir".
 3. Basset, Donna (2012). Peter Chalk. ed. Encyclopedia of Terrorism. ABC-CLIO. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0313308956. 
 4. Jayshree Bajoria (14 January 2010). "Profile: Lashkar-e-Taiba (Army of the Pure) (a.k.a. Lashkar e-Tayyiba, Lashkar e-Toiba; Lashkar-i-Taiba)". Council on Foreign Relations. மூல முகவரியிலிருந்து 5 June 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 May 2010.
 5. Kurth Cronin, Audrey; Huda Aden; Adam Frost; Benjamin Jones (6 February 2004) (PDF). Foreign Terrorist Organizations. Congressional Research Service. https://fas.org/irp/crs/RL32223.pdf. பார்த்த நாள்: 4 March 2009. 
 6. "Mumbai Terror Attacks Fast Facts". CNN.
 7. Carl W. Ernst, 2016, Refractions of Islam in India: Situating Sufism and Yoga, SAGE Publications, ISBN 9351509648.
 8. Muslim group asks for reviving Amarnath Yatra, Times of India, 17 July 2016.
 9. Expert Speak on Kashmir: No algorithm for Azadi, Observer Research Foundation, August 2016.
 10. "Rediff On The NeT: Harkatul Mujaheedin 'bans' Amarnath Yatra". Rediff.com (9 July 1998). பார்த்த நாள் 2013-04-15.
 11. [1] பரணிடப்பட்டது 10 மே 2015 at the வந்தவழி இயந்திரம்