2011 டெல்லி குண்டு வெடிப்புகள்
2011 டெல்லி குண்டு வெடிப்புகள் | |
---|---|
இடம் | ஷேர் ஷா சாலை, புதுதில்லி, தில்லி, இந்தியா |
ஆள்கூறுகள் | 28°22′N 77°08′E / 28.36°N 77.14°E |
நாள் | 7 செப்டம்பர் 2011 10:14 இசீநே (ஒசநே+05:30) |
தாக்குதல் வகை | குண்டுவெடிப்பு |
இறப்பு(கள்) | 14[1] |
காயமடைந்தோர் | 76[2] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஹூஜி |
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2011 செப்டெம்பர் 7 அன்று காலை 10.15 மணிக்கு டெல்லி உயர் நீதிமன்ற 5 வது நுழைவாயிலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது[3]. இது டெல்லியில் நிகழ்ந்த 30 ஆவது வெடிகுண்டாகும். இதேப் போன்று 2011 மே 25 அன்றும் டெல்லி உயர் நீதிமன்ற 7 வது நுழைவாயிலில் குறைந்த அடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இத்தாக்குதல் பிரதமர் மன்மோகன் சிங் வங்க தேசத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாகச் சென்ற போது நடந்துள்ளது.
காலக்கோடு
[தொகு]இந்தக் குண்டு வெடிப்பு கிட்டத்தட்ட காலை 10.15 இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் நீதிமன்ற வழக்குகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் உயர் நீதிமன்ற வரவேற்பறையில் சூழ்கின்ற வேளையில் அங்கு ஒரு பெட்டியில் வெடி பொருட்கள் வைக்கப்பட்டது .[4] இதனை உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் கூற்றுப்படி, ஒரு சிறிய அளவு கூட பயன்படுத்தப்படும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் அமோனியம் நைட்ரேட் மற்றும் PETN உடன் கூடிய இரண்டு கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.[5]
புலனாய்வுகள்
[தொகு]கோரிக்கை
[தொகு]இந்தக் குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி(ஹியூஜி) தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது[6]. அவ்வியக்கம், டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
புலனாய்வுகள்
[தொகு]தில்லி உயர் நீதிமன்றம் வெளியே குண்டு நடுவதற்கு இரண்டு நபர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படும் தில்லி காவலர்கள் ஒரு வரைபடத்தைத் வெளியிட்டுள்ளது. அந்தப் படம் ஒரு சாட்சிகள் கொடுத்த விவரத்தை அடிப்படையாக கொண்டது என்று தில்லி காவல் தெரிவித்தது. ஓவியம் ஒருவருக்கு 50 வயது போலும், மற்றொருவருக்கு 20 வயதுக்கு மத்தியில் இருப்பதாக காட்டுகிறது.[7] தேசியப் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் ஹியூஜி இயக்கத்திடம் இருந்து மிரட்டல் மின்னஞ்சல் வந்தது ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஸ்ட்வார் என்னும் பகுதியில் அமைந்த ஒரு இணையதள மையத்தில் இருந்து தான் என்று தெரியவந்துள்ளது. அதையடுத்து தேசியப் புலனாய்வு பிரிவினர் அந்த இணையதள மைய உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.[8]
விளைவுகள்
[தொகு]உள்நாடு
[தொகு]- ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் குண்டு வெடிப்பைக் கண்டித்தும் சம்பவத்தில் பலியான உயிர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.[9]
- பிரதமர் மன்மோகன் சிங் இத்தாக்குதல் கோழைத்தனமானது என்றும், தீவிரவாதத்திற்கு ஒரு போதும் இந்தியா அடிபணியாது என்றும் வங்காள தேசத்தில் இருந்து செய்தியாளர்களிடம் கூறினார்.[9]
- காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி செப்டம்பர் 8 அன்று குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்தார் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி செய்தியாளர்களிடம் கூறினார்.[10]
வெளிநாடு
[தொகு]- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் அதன் தலைவர் பான் கி மூன், தில்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.[11]
- பிற சர்வதேச சமூகம், ஆஸ்திரேலியா, வங்காளம், ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு போன்ற நாடுகளின் அரசியல் தலைவர்கள் அனைவரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "Delhi High Court blast: death toll rises to 14". 15 September 2011. http://ibnlive.in.com/news/delhi-high-court-blast-death-toll-rises-to-14/184197-3.html.[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Black Wednesday: Blast at Delhi high court kills 11, injures 76". Times of India. 7 September 2011. http://timesofindia.indiatimes.com/india/Black-Wednesday-Blast-at-Delhi-high-court-kills-11-injures-76/articleshow/9899248.cms. பார்த்த நாள்: 7 September 2011.
- ↑ http://www.koodal.com/news/india.asp?id=67374§ion=tamil&title=blast-outside-delhi-high-court-9-dead-many-injured[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Black-Wednesday-Blast-at-Delhi-high-court-kills-11-injures-76/articleshow/9899248.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-08.
- ↑ http://tamil.webdunia.com/newsworld/news/national/1109/07/1110907033_1.htm
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Police-release-sketches-of-two-Delhi-high-court-blast-suspects/articleshow/9898156.cms
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=309706
- ↑ 9.0 9.1 http://www.dnaindia.com/india/report_president-prime-minister-condemn-delhi-blast_1584360
- ↑ http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D&artid=473737&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-08.
- ↑ http://www.thehindu.com/news/national/article2432949.ece
- ↑ http://www.dnaindia.com/india/report_world-leaders-condemn-delhi-terror-attack_1584388