உள்ளடக்கத்துக்குச் செல்

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி (அரபு: حركة الجهاد الإسلامي) அல்லது ஹூஜி, தமிழ் மொழிப்பெயர்ப்பு இஸ்லாமிய புனித போர் இயக்கம் தெற்காசியாவில் ஒரு சுணி இஸ்லாமிய போராட்டக் குழுமம் ஆகும். 1984இல் தொடங்கிய இக்குழுமம் 2005இல் வங்காளதேசத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. 1990களில் அமெரிக்கா இக்குழுமத்தை தீவிரவாதக் குழுமம் என்று குறிப்பிட்டது.

டாலிபான் போல் அடிப்படைவாதி இஸ்லாமிய சமூகத்தை தொடக்கவேண்டும் என்பது இந்த அமைப்பின் ஒரு நோக்கம். காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானை இணைக்கவேண்டும் என்று இந்த அமைப்பின் நோக்கம்.

இந்தியாவில் 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள் நிகழ்வை இந்த அமைப்பு செய்துள்ளது. மேலும் 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் வேறு சில வன்முறை நிகழ்வுகளில் உட்படுத்து இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.