உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் தீவிரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய, இந்து, சீக்கிய, கிறித்தவ மற்றும் நக்சலைட் புரட்சி இயக்கங்கள் இந்தியாவில் தீவிரவாதத்தின் (Terrorism in India) மூலக்காரணிகளாக இருக்கின்றன.[சான்று தேவை]

இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதிகளின் நீண்டகால நடவடிக்கைகள் உள்ள பிராந்தியங்களாக சம்மு காசுமீர், மும்பை, மத்திய இந்தியா (நக்சலிசம்) மற்றும் ஏழு சகோதரி மாநிலங்கள் (சார்பற்ற தன்னாட்சிச் செயல்பாடுகளைக் கொண்டது) ஆகியவை கருதப்படுகின்றன. முற்காலத்தில் இந்திய மாநிலமான பஞ்சாப் மற்றும் தலைநகரமான டெல்லியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடக்கமாக பஞ்சாப் கிளர்ச்சி அமைந்தது.

2006 ஆம் ஆண்டு வரை நாட்டின் 608 மாவட்டங்களில் குறைந்தபட்சமாக 232 பேர் தீவிரவாத நடவடிக்கைகளால் அல்லல்பட்டனர். மேலும் இவர்கள் தீவிரவாத இயக்கங்களின் வெவ்வேறு விதமான தாக்குதலுக்கும் ஆளாகினர்.[1] 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனன் கூறுகையில், 800 க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்கள் நாட்டில் உள்ளன என்றார்.[2]

மேற்கு இந்தியா[தொகு]

மும்பை[தொகு]

தீவிரவாத இயக்கங்களின் முக்கிய இலக்காக மும்பை உள்ளது. அடிப்படையாக காசுமீரிலிருந்து வரும் பிரிவினை வாத இயக்கங்கள் இந்த நகரத்தை இலக்காக கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தவை: ஜூலை 2006 ஆம் ஆண்டில் உள்ளூர் இரயில்கள் கடுமையான வெடித்தாக்குதல்களுக்கு உட்பட்டதும், மிக அண்மையில் தெற்கு மும்பையில் இதுவரை இல்லாத தாக்குதலாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இரண்டு முக்கிய விடுதிகளும், இன்னொரு கட்டடமும் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டதும் உள்ளிட்ட தாக்குதல்கள் மும்பையில் நிகழ்ந்துள்ளன.

மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்:*

  • 12 மார்ச் 1993 - 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
  • 6 டிசம்பர் 2002 - காட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
  • 27 ஜனவரி 2003 - வைல் பரில் எனும் இடத்தில் மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்
  • 14 மார்ச் 2003 - முலன்ட் எனும் இடத்தில் இரயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகினர்
  • 28 ஜூலை 2003 - காட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்
  • 25 அகஸ்ட் 2003 - இந்தியாவின் நுழைவாயிலுக்கு அருகிலும், சவேரி பசாரிலும் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 50 பேர் பலியாகினர்
  • 11 ஜூலை 2006 - ஏழு வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக இரயிலில் கடுமையாக வெடித்ததில் 209 பேர் பலியாகினர்
  • 26 நவம்பர் 2008லிருந்து 29 நவம்பர் 2008 வரை - ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில் குறைந்தது 172 பேர் பலியாகினர்.

சம்மு காசுமீர்[தொகு]

வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா[தொகு]

பீகார்[தொகு]

இந்த மாநிலத்தில் தீவிரவாதம் ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதப்படவில்லை. இருந்தபோதிலும் இங்கேயே இருக்கும் குழுக்களான பொதுவுடைமைக் கட்சி (மார்க்ஃசிய இலெனின்) (CPI-ML) , பீபில்சு வார், MCC,ரன்வீர் சேனா மற்றும் பல்பீர் மிலிட்டியசு போன்றவை முக்கியமாக அடிக்கடி காவலர்களையும் அரசியல்வாதிகளையும் தாக்கி வருவது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது.

பீகாரில் உள்ள கட்டுப்பாடு குன்றிய ஆளுகையும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளும், போராட்டக்குழுக்கள் அதிகமாக உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளன. ரன்வீர் சேனா போராட்டக்குழுவானது முற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த நில உரிமையாளர்களுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்த நக்சலைட்ஸ் குழுவாக இந்த பகுதியில் உள்ளது.

இந்த மாநிலத்தில் சாதி அமைப்புகள் நடத்தும் பல படுகொலைகளுக்கும் மற்ற அமைப்புகள் அதற்கு பழிவாங்கும் நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. எல்லா போராட்டக் குழுக்களும் ஏதாவது ஒரு சாதி அமைப்புகளின் கருத்திற்கு ஆதரவான பிரதிநிதியாக செயல்படுகின்றன.

இந்தப் போராட்டக்குழுக்களின் வன்முறைகளால் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் (பெண்கள், வயதானர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட) சாதிப்படுகொலை செய்யப்படும் ஆதரவற்ற மக்களே ஆவர். இந்த மாநில காவல்துறை பயன்படுத்தும் வின்ட்டேச் 303 வகை குழல் துப்பாக்கிகள், போராட்டக்குழுக்கள் பயன்படுத்தும் ஏ.கே-47, ஏ.கே-56 வகை துப்பாக்கிகளை ஒப்பிடுகையில் ஆற்றல் குறைந்ததாக உள்ளன. போராளிகள் காவலர்களை மறைந்திருந்து கொல்ல நிலக்கண்ணி வெடிகளையும் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு சாதி அமைப்புகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய பொருளாதார, குமுக ஏற்றத்தாழ்வானது போராட்டக்குழுக்களின் நடவடிக்கைகளுக்கு அடிப்படைக் காரணம் ஆகும். சுதந்திரத்திற்குப் பிறகு நிலம் சீரமைத்துக் கொடுக்கப்படுவதாக இருந்தது. அதன் படி ஆதிக்கசாதி மக்களிடமே இருந்த நிலங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கு பங்கு வழங்கப்படுவதாக இருந்தது.

எனினும் பிரிவினை அரசியலின் காரணமாக இந்த மாநிலத்தில் நிலங்கள் சீரமைத்துக் கொடுக்கப்படவில்லை. இது பிற்படுத்த சாதிகளுக்கு இடையே ஒடுக்கப்பட்ட உணர்வை வளர்த்தது.

கம்யூனிச அமைப்புகளான சி.பி.ஐ (எம்.எல்) (CPI-ML), எம்.சி.சி. (MCC) மற்றும் மக்கள் போர்க் குழு போன்ற அமைப்புகள் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை ஆதிக்கசாதி மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தூண்டிவிட்டனர். இது செல்வந்தர்களின் கையிலுள்ள ஆயுதமாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஆதிக்கசாதி மக்களைக் கொன்று அவர்களிடமிருந்து நிர்ப்பந்தப்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

ஆதிக்கசாதி மக்கள், ரன்வீர் சேனா போன்ற நக்சலைட்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்களாகவே இராணுவப் படையை உருவாக்கிக்கொண்டனர். சாதிக்குழுக்கள் நடத்திய படுகொலைகளின் மூலம் அவர்களது மேலாதிக்கத்தை நிறுவ நினைத்தனர். இரத்த ஆறு ஓடிய அந்த நாட்களையும் இந்த மாநிலம் கண்டிருக்கிறது. காவல்துறையும் அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் அமைதி காத்தது.

எனினும் ரன்வீர் சேனாவின் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதால் இப்பொழுது இந்த அமைப்பு வலுவிழந்துவிட்டது. எனினும் மற்ற அமைப்புகள் இன்னும் இயக்கத்திலுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில வருடங்களாக குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினரால் இவர்கள் கைதுசெய்யப்படுவது, தீவிரவாதிகள் இந்த மாநிலம் முழுவதும் இவர்களது வலையமைப்பைப் பரப்பி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதிலிருந்து பீகார், நேபாளத்திலிருந்து சிறு துப்பாக்கிகள், கள்ள நோட்டு மற்றும் போதை மருந்து டீலர்களும், தீவிரவாதிகள் நேபாள மற்றும் வங்காளதேசம் வழியாக ஊடுருவுவதற்கும் ஒரு வழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

எனினும் இந்த சில வருடங்களில் அரசாங்கத்தின் நல்ல வழிநடத்தலால் சாதி அமைப்புகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளன.

பஞ்சாப்[தொகு]

1970களின் போது இந்தியப் பசுமைப் புரட்சியானது பஞ்சாபில் உள்ள சீக்கிய சமுதாய மக்களுக்கு பொருளாதாரச் செழிப்பைப் பெற்றுத்தந்தது. இந்த முன்னேற்றப் போக்கு சீக்கிய சமுதாயத்தினருக்கு அவர்களை இந்து மதத்திற்குள் இழுக்கப்படுவார்களோ என்ற ஒரு பயத்தை ஏற்படுத்தியது. இந்த பயம் சீக்கிய போராட்டக்குழு உருவாவதற்கு காரணமாக அமைந்தது. [சான்று தேவை]

1980களில் இங்கே போராட்டக்குழுக்கள் வன்முறையை கையில் எடுத்து இந்திய ஒன்றியத்திடம் இருந்து காலிஸ்தானுக்கு விடுதலை வேண்டும் என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்த போது இந்த கிளர்ச்சி அதிகமானது. ஜர்நெயில் சிங் பிந்தரன்வாலே என்பவர் இந்த போராட்டக்குழுவை முன்னின்று நடத்தினார். காலிஸ்தான் உருவாவதை இவர் விரும்பவும் இல்லை அதற்கு எதிராகவும் இல்லை. மேலும் இயக்கத்தின் தேவைகளை வலியுறுத்திக் காண்பிக்க தாக்குதல் நடவடிக்கைகளைப் பயன்படுத்தினார். விரைவில் பஞ்சாப் இரத்தக்களமாக மாறியது. இந்த அமைப்பினருக்கு அண்டை நாடான பாகிஸ்தான் உதவுகிறது என இந்தியா குறை கூறியது. 1983-84 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சீக்கிய போராளிகளிடையே பரவலான ஆதரவைப் பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் தூண்டலில் நடைபெறும் செயல்கள் என இவற்றை அகாலி தளத் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால் கண்டித்தார்.அரசியல்ரீதியாக அகாலி தளம் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவை ஊக்குவித்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி என்றும் சொல்லப்படுவதுண்டு.[3]

1984 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இந்த இயக்கத்திற்கு எதிராக ஆபரேஷன் புளு ஸ்டாரை நிகழ்த்தியது. சன்ட் பிந்தரன்வலே என்பவர் பொற்கோவிலில் பாதுகாப்பாக இருந்து கொண்டு அவரது போர்க்குழுவை தாயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார். அவர்களின் மீது திடீர் தாக்குதலை நடத்தியது இந்த ஆபரேஷன். அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி கோவிலில் இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு கட்டளையிட்டார். இதன் விளைவாக பீரங்கிகளை உபயோகித்து தாக்குதலை நிகழ்த்தியது இந்திய இராணுவம்.

எழுபத்தி நான்கு மணிநேர துப்பாக்கித் தாக்குதலுக்குப்பிறகு இராணுவம் கோவிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த தாக்குதலில் சீக்கிய குறிப்புதவி நூலகமான அகல் தக்கின் சில பகுதிகள் சேதமாகின மற்றும் பொற்கோவிலின் உள்ளேயும் சில பகுதிகள் சேதமாகின. இந்திய அரசாங்கத்தின் ஆதாரங்களின் படி இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பிலிருந்து எண்பத்து மூன்று இராணுவ வீரர்கள் இறந்தனர். மேலும் 249 பேர் காயமடைந்தனர். போராளிகளின் தரப்பில் இருந்து 493 பேர் கொல்லப்பட்டனர் மேலும் எண்பத்தாறு பேர் காயமடைந்தனர்.

அதே ஆண்டு பொற்கோவிலில் நடந்த இந்த தாக்குதலுக்காக இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதனால் சீக்கியர்கள் வன்முறைக்கு ஆளாகினர். குறிப்பாக புது டெல்லியில் இவர்கள் பரவலாக தாக்கப்பட்டனர். 1988 ஆம் ஆண்டின் ஆபரேஷன் பிளாக் தண்டரைத் தொடர்ந்து பஞ்சாப் காவல்துறை முதலில் ஜூலியோ ரிபிரோ தலைமையிலும் அதன் பிறகு KPS கில்லின் தலைமையிலும் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு இயக்கங்களின் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

1985 ஆம் ஆண்டு சீக்கிய தீவிரவாதிகள் கனடாவில் இருந்து இந்தியா வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைத்ததில் ஏர் இந்தியா விமானம் 182 இல் இருந்த 329 பயணிகள் உயிரிழந்தனர். இது கனடாவின் வரலாற்றில் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாகும்.

அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பஞ்சாப் போராட்டக்குழு சம்மந்தப்பட்ட அவர்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் நன்னடத்தை நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது சீக்கிய போராட்டங்கள் மற்றும் காலிஸ்தான் விவகாரங்களை முடிவுக்கு கொண்டுவருவது துரிதப்படுத்தப்பட்டது. இந்திய அரசு அந்த ஆதாரங்களை பயன்படுத்தி தாக்குதலுக்கு காரணமாக இருந்த நபர்களையும் போராட்ட இயக்கங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

1993 ஆம் ஆண்டு வெளிப்படையாக இயங்கிய சீக்கிய போராட்டக் குழுக்களை இல்லாமல் செய்ததால் அந்த ஆண்டுகள் அதன் பிறகான ஆண்டுகளில் அப்போது இயங்கிக்கொண்டிருந்த அரை டஜன் சீக்கிய போராட்டக் குழுக்கள் பொறுப்பேற்று நிகழ்த்திய தீவிரவாத நடவடிக்கைகளைப் (அதாவது 1995 ஆம் ஆண்டு, பஞ்சாப் முதலமைச்சர், பீந் சிங் படுகொலை செய்யப்பட்டார்) பார்க்கும்போது ஒப்பீட்டில் அமைதி நிலவிய காலமாகத் தோன்றியது. பாபர் கல்சா இண்டெர்நேஷனல், காலிஸ்தான் அதிரடிப்படை, காலிஸ்தான் விடுதலைப்படை மற்றும் கலிஸ்தான் ஜிந்தாபாத் படை ஆகியவை இந்த இயக்கங்களில் அடங்கும்.

இன்றும் பரவலாக கனடா மற்றும் யுனெட்டட் கிங்டத்திலுள்ள சீக்கிய இயக்கங்கள் காலிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கின்றன.

புது டெல்லி[தொகு]

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று இந்திய தலைநகரமான புது டெல்லியில் நடந்த மூன்று வெடிகுண்டு தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகஅதிகமாக இருந்ததால் இது 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த அதிக இறப்புகள் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலாகப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து 13 செப்டம்பர் 2008 அன்று 5 வெடிகுண்டுகள் வெடித்தன.

டெல்லி பாதுகாப்பு உச்சி மாநாடு[தொகு]

பிப்ரவரி 14 2007 அன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் டெல்லி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இவர்கள் தீவிரவாதம், போதை மருந்து, ஐக்கிய நாடுகளின் சீரமைப்பு பற்றியும் மேலும் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் வட கொரிய நாடுகளின் பாதுகாப்பு நிலைகள் குறித்தும் கலந்துரையாற்றினர்.[4][5]

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்[தொகு]

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று இந்திய நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இங்கு நடந்த 45-நிமிட துப்பாக்கிச்சூட்டில் 9 காவலர்களும் மேலும் நாடளுமன்ற பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஐந்து தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டது. இந்த தாக்குதல் இந்திய நேரப்படி காலை 11:40க்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட நேரத்தில் நடந்தது.

சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் அதிரடிப்படையினரின் உடையில் மிக முக்கிய நபர்களுக்கான கதவின் வழியாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வந்த வாகனத்தில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாவர் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நாடாளுமன்ற கட்டடத்தினுள் நுழைந்தனர்.

தாக்குதலுக்காக தீவிரவாதிகள் பெருமளவு வெடிப்பொருள்களையும் மேலும் ஏகே-47 ரக துப்பாக்கிகள், வெடிப்பொருள்கள் மற்றும் கையெறி குண்டுகளையும் பயன்படுத்தினர். இந்த தாக்குதல் நடந்த போது மூத்த அமைச்சர்களும் 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இருந்தனர். அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் வளாகம் முழுவதும் மூடி அவர்களை காத்ததில் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம்[தொகு]

அயோத்தியா விவகாரம்[தொகு]

அயோத்தியில் உள்ள 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான பாபர் மசூதி இந்து (சிவசேனா, vhp) இயக்கங்களால் 1992இல் இடிக்கப்பட்டது. இது 2005 இல் தாக்கப்பட்டதையடுத்து நெடுநாட்களாக கொதித்துக்கொண்டிருந்த அயோத்தி விவகாரம் உச்சமடைந்தது. தீவிரவாதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே நடந்த இரண்டு மணி நேர துப்பாக்கிச்சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். (BBC) இந்த தீவிரவாத தாக்குதலுக்காக எதிர்க் கட்சிகள், நாட்டின் தலைர்களுடன் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தததை மேற்கொண்டது.

வாரணாசி குண்டுவெடிப்புகள்[தொகு]

இந்துக்களின் புனித நகரமான வாரணாசியில் 7 மார்ச், 2006 அன்று தொடர்குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் பிற 101 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் வாரணாசியில் 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புக்கு அவர்களே காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.

ஏப்ரல் 5, 2006 அன்று இந்திய காவல்துறை ஆறு இஸ்லாமிய தீவிரவாதிகளையும், குண்டுவெடிப்புத்திட்டத்திற்கு அவர்களுக்கு துணையாக இருந்த மதகுரு ஒருவரையும் கைது செய்தது. இந்த மதகுரு வங்காளதேசத்தின் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான கர்கத்துல் ஜிகாத்-அல் இஸ்லாமியின் படைத்தலைவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் இவர் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இண்டர்-சர்வீசஸ் இண்ட்டெலிஜன்ஸுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என நம்பப்பட்டது.[6]

வடகிழக்கு இந்தியா[தொகு]

வடகிழக்கு இந்தியா 7 மாநிலங்களை கொண்டது (ஏழு சகோதிரிகள் எனவும் அழைக்கப்படுகிறது), அவை: அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மற்றும் நாகாலாந்து. எப்போதும் இந்த மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது. மேலும் இங்கு மாநிலங்களையே சொந்தமாக கொண்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களுக்கும் இடையேயும் பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது.

அந்த மாநிலங்கள் தங்களது பிரச்சனைகளின் மேல் மத்திய அரசு அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை என குற்றம் சாட்டுகின்றன. இந்த உணர்வே இந்த மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு சொந்த-ஆளுகைக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுப்பதற்குக் காரணமாயிற்று. மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையே ஆட்சிப்பரப்புச் சார்ந்த பிரச்சனைகளும் உள்ளன.

வடகிழக்கு பகுதிகளில் திடீரெனத் தாக்கும் நடவடிக்கைகளும் மற்றும் வட்டார இயக்கங்களும் உருவாகி வருகின்றன. குறிப்பாக அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த இயக்கங்கள் உருவாகின்றன. இந்த இயக்கங்களில் பெரும்பாலானவை தனி மாநிலம் பெறுவதையே கொள்கையாக கொண்டுள்ளது அல்லது வட்டார சுயாட்சி மற்றும் அரசுரிமையை அதிகப்படுத்தக் கோருகிறார்கள்.

வடகிழக்கு வட்டாரத்தின் நெருக்கடி நிலையை எளிதாக்கி சீர்படுத்தும் விதமாக இந்திய மற்றும் மாநில அரசுகள் இந்த வட்டாரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொண்டுள்ளதால் இந்நிலை சிறிது தணிந்துள்ளது. எனினும் இந்த வட்டாரங்களில் வெளிசக்திகளின் ஆதரவுடன் போராட்டக்குழுக்கள் இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.

நாகாலாந்து[தொகு]

நாகாலாந்தில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்கமானது 1950களின் தொடக்கத்திலிருந்து அங்கு இயங்கியது. இறுதியாக 1980களில் அடக்குமுறை மற்றும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றின் மூலம் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது வரை அது இயங்கியது. தேசிய சமதர்மவாத கவுன்சிலான நாகாலாந்து-இசாக்-முவாக் (NSCN-IM), நாகாலாந்தை சுயேச்சையான பிராந்தியமாக அறிவிக்க போராடியது. மேலும் இந்திய இராணுவத்தின் மேல் இந்த வட்டாரத்தில் பல தாக்குதல்களை நடத்தியது. அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் படி 1992 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்கு இடையே 599 பொதுமக்கள், 235 பாதுகாப்பு படை வீரர்கள் மேலும் 862 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று இந்திய அரசுக்கும் NSCN-IMக்கும் இடையே சீஸ்-பயர் எனப்படும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது நாகாலாந்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆதரிக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு ஒருங்கிணைந்து செயல்பட்ட இயக்கங்களான ஒருங்கிணைந்த நாகா தேசிய கவுன்சில் (NNC-F) மேலும் தேசிய கவுன்சிலான நாகாலாந்து-கப்லங்கும் (NSCN-K) இந்த முன்னேற்றத்தை வரவேற்றன.

மணிப்பூர் போன்ற அண்டை மாநிலங்கள் இந்தப் போர்நிறுத்தம் குறித்து கவலை கொண்டன. அவை NSCNயின் தீவிரவாத நடவடிக்கைகள் இந்த மாநிலங்களில் தொடரக்கூடும் என பயப்பட்டன. மேலும் அவை மத்திய அரசை போர்நிறுத்த ஒப்பந்ததை நீக்குமாறும், புதிதாக மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை தொடங்குமாறும் கேட்டுக்கொண்டன. போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதும் NSCNயின் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன[மேற்கோள் தேவை].

அஸ்ஸாம்[தொகு]

நாகாலாந்துக்கு அடுத்தபடியாக அஸ்ஸாம் இந்த வட்டாரத்தில் மிகவும் பதட்டம் நிறைந்த மாநிலமாக உள்ளது. 1979ஆம் ஆண்டில் தொடங்கி, அஸ்ஸாமின் உள்ளூர் மக்கள் வங்காளதேசத்தில் இருந்து அஸ்ஸாமுக்கு சட்டவிரோதமாக குடிபுகுந்தவர்களை கண்டுபிடித்து நாடுகடத்துமாறு கோரினர். அஸ்ஸாமின் அனைத்து மாணவர்கள் ஒன்றியம் இந்த இயக்கத்தை வழி நடத்தியது. இவர்கள் வன்முறையில்லாத அடிப்படையில், புறிக்கணிப்பு, மறியல் மற்றும் சிறைநிரப்பு போராட்டங்களை மேற்கொண்டனர்.

அடிக்கடி இந்த எதிர்ப்பாளர்களின் மேல் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. 1983 ஆம் ஆண்டு இந்த இயக்கங்களின் தலைவர்களின் எதிர்ப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத்தேர்தல் இங்கு பரவலான வன்முறைக்கு வழிவகுத்தது. 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்த இயக்கங்கள் மத்திய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்த இயக்கங்களின் செயல்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது (இந்த ஒப்பந்தம் அஸ்ஸாம் ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது).

இந்த அக்கார்டு ஒப்பந்தத்தின் கூற்றுகளின் அடிப்படையில் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதங்களுக்கு இடையில் மாநிலத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கேயே தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுடைய அனைத்து குடி உரிமைகளும் பத்து வருடங்களுக்கு மறுக்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறு நுழைந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் 1961 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அஸ்ஸாமிற்குள் நுழைந்த குடியுரிமை இல்லாதவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு வாக்குரிமை தவிர அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட்டன.

புது டெல்லியும் இந்த மாநிலத்தில் உள்ள போடோக்களுக்கு சிறப்பு சுயாட்சி நிர்வாக உரிமையை வழங்கியது. இருந்தபோதும் போடோக்கள் தனியாக போடோலாந்து வேண்டும் என போராடினர். இது பெங்காலிகளுக்கும் போடோக்களுக்கும் மோதலை உண்டாக்கியது. இதனால் இந்திய இராணுவத்திற்கும் போடோக்களுக்கும் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இங்குள்ள பல்வேறு இயக்கங்கள் அஸ்ஸாமின் விடுதலைக்கு ஆதரவாக உள்ளன. இதில் முக்கியமான அமைப்பாக உல்பா (அஸ்ஸாமின் ஐக்கிய முன்னணி விடுதலை அமைப்பு) உள்ளது. 1971 ஆம் ஆண்டு இந்த இயக்கம் உருவானது. உல்பா இயக்கத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்கள், அஸ்ஸாமின் விடுதலை மற்றும் சமதர்ம அரசை உருவாக்குவது ஆகியவையாகும்.

உல்பா இயக்கம் இந்த வட்டாரத்தில் உள்ள இந்திய இராணுவத்தின் மீதும் போராட்டதில் ஈடுபடாத பொதுமக்களின் மீதும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தியது. இந்த இயக்கம், அவர்களின் அரசியல் எதிரிகளை படுகொலை செய்தது. மேலும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களையும் தாக்கியது. மேலும் மற்ற உள்கட்டமைப்பு கட்டடங்களையும் தாக்கியது. நாகாலாந்தின் தேசிய சமதர்ம கவுன்சிலிடமும்(NSCN), மாவோயிய மற்றும் நக்சலைட்களிடமும் உல்பா அமைப்பு வலுவான தொடர்பு வைத்திருக்கலாமென நம்பப்படுகிறது.

இவர்களுடைய பெரும்பாலான நடவடிக்கைகள் பூட்டான் பேரரசிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது என நம்பப்படுகிறது. உல்பாவின் வெளிப்படையான தன்மை அதிகரித்ததால் இந்திய அரசு இந்த இயக்கத்தை 1986ல் சட்டத்திற்குப் புரம்பானதாக அறிவித்தது. மேலும் அஸ்ஸாமை ஒரு பதற்றமான பகுதியாக அறிவித்தது. புது டெல்லியின் கட்டாயத்தினால் பூட்டான் அதன் பகுதியில் இருந்து உல்பா தீவிரவாதிகளை வெளியேற்ற பெரிய நடவடிக்கை எடுத்தது.

இந்திய இராணுவத்தின் உதவியுடன் திம்பு நகரம் தாக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அவர்களது நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் காயம் மற்றும் உயிர்ப்பலியில் பாதிக்கப்பட்டவர்கள் 120 பேர் மட்டுமே. இந்திய இராணுவம், உல்பா தீவிரவாதிகளின் பல்வேறு எதிர்கால நடவடிக்கைகளை முறியடிக்க பல வெற்றிகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் உல்பா இயக்கத்தின் செயல்பாடுகள் இந்த வட்டாரத்தில் தொடர்ந்தவாறே உள்ளன. 2004 ஆம் ஆண்டு உல்பா அஸ்ஸாமில் உள்ள ஒரு அரசுப் பள்ளியைத் தாக்கியதில் 19 குழந்தைகளும் மற்றும் 5 வயது வந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமில் மட்டும் இன்னும் தீவிரவாதம் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்திய இராணுவம், வெற்றிகரமாக அனைத்து தீவிரவாத ஆதரவுக் குழுக்களையும் வீழ்த்தியது. ஆனால் இராணுவம் தீவிரவாதிகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக மனித உரிமை அமைப்புகளால் குறை கூறப்பட்டது.

செப்டம்பர் 18, 2005 அன்று மணிப்பூர்-அஸ்ஸாம் எல்லைக்கு அருகில் மணிப்பூரில் உள்ள ஜிரிபம் எனும் இடத்தில் உல்பா தீவிரவாதிகளால் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

திரிபுரா[தொகு]

1990 ஆம் ஆண்டு திரிபுராவில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன. தீவிரவாதத்தில் ஈடுபடுவர்களுக்கு பங்களாதேஷ் தனது எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கிறது என மத்திய அரசு குறைகூறியது. திரிபுரா பழங்குடித் துறை தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பகுதிகள் புது டெல்லி, திரிபுரா மாநில அரசு, மற்றும் கவுன்சிலுக்கும் இடையே ஏற்பட்ட முத்தரப்பு உடன்படிக்கையால் அதிகரிக்கப்பட்டன. அரசு அப்போதிலிருந்து இயக்கத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தாலும் சில கலக இயக்கங்கள் இன்னும் இருந்துவருகின்றன.

மணிப்பூர்[தொகு]

மணிப்பூரில் மக்கள் விடுதலைப்படை எனும் அமைப்பை போராளிகள் ஏற்படுத்தினர். பர்மாவில் உள்ள மிட்டி பழங்குடியினரை இணைப்பதும் மற்றும் மணிப்பூரை தனிமாநிலமாக உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். எனினும் 1990 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய பாதுகாப்பு படையினருடனான கடுமையான மோதலுக்குப் பின்னர் இந்த அமைப்பு ஒடுக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று சுரசந்த்பூர் மாவட்டத்தில் ஜீமி புரட்சிப்படைக்கும் முன்னணி ஜூமி புரட்சியாளர்களுக்கும் நடந்த சண்டையில் ஆறு பிரிவினை வாதப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தலைநகரமான இம்பாலுக்கு 22 மைல் தொலைவில் உள்ள கிராமமான நரியங்கில் 14 இந்திய வீரர்கள் கங்லே யாவ்ல் கண்ணா லுப் (KYKL) எனும் இயக்கத்தை சேர்ந்த 20 பயங்கரவாதிகள் AK-56 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களின் மூலம் பதுங்கியிருந்து தாக்கியதில் கொல்லப்பட்டனர். "அடையாளம் காணப்படாத பயங்கரவாதிகள் தானியங்கு ஆயுதங்களை பயன்படுத்தி சாலை ரோந்துப் பணியில் இருந்த கோர்கா ரைபிள் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களை பதுங்கியிருந்து தாக்கியதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்," என இந்திய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

மிசோரம்[தொகு]

மிசோ தேசிய முன்னணி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்திடம்]] விடுதலைக்காக போராடியது. அண்டை மாநிலங்களைப் போலவே இந்த இயக்கமும் இராணுவத்தால் ஒடுக்கப்பட்டது.

தென்னிந்தியா[தொகு]

கர்நாடகா[தொகு]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நகரமான பெங்களூருவும் இருப்பினும் கர்நாடகா தீவிரவாதத்தினால் மிகவும் குறைவாக பாதிக்கப்படும் மாநிலமாக உள்ளது. இருந்தபோதும் இங்கே சமீப காலமாக நக்சலைட்களின் நடவடிக்கைள் மேற்கு மலையிடை வழிகளில் அதிகரித்து வருகிறது. சில தாக்குதல்களும் இங்கு நடந்துள்ளன. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று IISc மீதான தாக்குதலும் 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பும் முக்கிய தாக்குதல்களாகும்.

ஆந்திரப் பிரதேசம்[தொகு]

தீவிரவாதத்தினால் பாதிக்கப்படும் சில தென் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும். எனினும் பாதிப்பின் அளவுகள் மற்ற மாநிலங்களை விட மிகவும் வேறுபட்ட விதத்திலும் குறைந்த அளவிலும் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் தீவிரவாதமானது மக்கள் போர்க் குழு (People's War Group) அல்லது PWG, என்று பிரபலமாக கூறப்படும் நக்சலைட்களினால் மேற்கொள்ளப்படுகிறது.

மக்கள் போர்க் குழு இந்தியாவில் இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் பெரும்பாலான நடவடிக்கைகள் ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா வட்டாரத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஒரிசா மற்றும் பீகாரிலும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. காஷ்மீர் பயங்கரவாதிகள் மற்றும் உல்பா இயக்கங்களைப் போல் அல்லாமல் மக்கள் போர்க் குழு ஒரு மாவோயிச தீவிரவாத இயக்கமாகும் மேலும் கம்யூனிசமே இதன் முக்கிய கொள்கையாகும்.

தேர்தலில் பேராதரவைப் பெறமுடியாத நிலையில்அவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்த வன்முறையைக் கையிலெடுத்தனர். கம்யூனிசத்தின் பெயரில் இந்திய காவல்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற செல்வாக்கான கல்வி நிலையங்கள் ஆகியவையே இந்த இயக்கத்தின் இலக்காக உள்ளது. மேலும் மக்கள் போர்க் குழு மூத்த அரசாங்க அதிகாரிகளையும் அவர்களது இலக்காக கொண்டுள்ளனர். மேலும் முன்னால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை படுகொலை செய்ய முயற்சித்ததும் இதிலடங்கும்.

நம்பத்தகுந்த தகவல்களின் படி 800 முதல் 1000 வரை ஆயுத வலிமைமிக்க போராளிகள் இந்த அமைப்பில் உள்ளனர். மேலும் நேபாளத்தில் உள்ள மாவோயியவாதிகளுடனும் மற்றும் இலங்கையின் LTTEயுடனும் இவர்கள் தொடர்பு வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின்படி மக்கள் போர்க் குழுவின் தாக்குதல்களினால் சராசரியாக 60க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 60 நக்சல் பயங்கரவாதிகள் மற்றும் ஒரு டஜன் காவலர்களும் ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுகின்றனர்.மேலும் 25 ஆகஸ்ட் 2007 அன்று நடந்த ஹைதராபாத் குண்டுவெடிப்பு, இவர்களது முக்கிய தீவிரவாத தாக்குதலாகும்.

தமிழ்நாடு[தொகு]

முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை LTTE தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராட்டக்குழுவினர் தமிழ்நாட்டில் இயங்கி வந்தனர். LTTE இன் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் பிற ஈழ உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் பல முறை உரை நிகழ்த்தியுள்ளனர். தமிழ் புலிகள், தற்போது தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமாகும், கடந்த காலத்தில் பல நன்கொடைகளையும், இந்தியாவின் ஆதரவையும் இந்த இயக்கம் பெற்றிருந்தது. இந்தியாவில் உள்ள போராட்டக்குழுவான தமிழ்நாடு விடுதலை இயக்கம், LTTEயுடன் தொடர்பு வைத்துள்ளது.

தமிழ்நாடும் இஸ்லாமிய அடிப்படை கொண்ட தீவிரவாதிகளினால் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு என்பதைக் காண்க.

ஏர் இந்திய விமானம் 182[தொகு]

ஏர் இந்திய விமானமான, ஏர் இந்திய விமானம் 182 மோன்ட்ரெல்-லண்டன்-டெல்லி-பம்பாய் தடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. 23 ஜூன் 1985 அன்று போயிங் 747-237B விமானம் ஐரிஸின் மீது பறந்துகொண்டிருந்த போது குண்டுவெடித்ததில் விமானத்தின் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். 11 செப்டம்பர் 2001 வரை ஏர் இந்தியா குண்டுவெடிப்பே விமானத்தின் நடந்த ஒரே இறப்புகளை அதிகமாக ஏற்படுத்திய பெரிய தாக்குதாலாக இருந்தது. கனடாவின் வரலாற்றில் இந்த நாள் அதிகமான படுகொலைகள் நடந்த கருப்புநாளாக உள்ளது. கனடா, அமெரிக்கா, யுனெட்டட் கிங்டம், ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 1985 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்றும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா என்ற முக்கிய தீவிரவாத அமைப்பு இந்த செயலுக்கு பொறுப்பேற்றது.

நரிட்டா விமான நிலைய குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எம்பரர் கனிஷ்கா என பெயரிடப்பட்ட இந்த போயிங் 747-237B விமானம் (c/n 21473/330, reg VT-EFO) 31,000 அடி(9500 மீட்டர்) உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது வெடித்தது. இந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதில் விமானத்திலிருந்த 329 பேர் கொல்லப்பட்டனர். அதில் 280 பேர் கனடாவை சேர்ந்தவர்கள் மற்றும் 22 பேர் இந்தியர்கள்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • ^ "சிலீப்பிங் ஓவர் செக்யூரிட்டி". (26 ஆகஸ்ட் - 8 செப்) பிசினஸ் அண்ட் எகானமி , ப 38

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_தீவிரவாதம்&oldid=3507858" இலிருந்து மீள்விக்கப்பட்டது