சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு, 1993
ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு | |
---|---|
இடம் | சென்னை, தமிழ் நாடு |
நாள் | 8 ஆகஸ்ட் 1993 |
இறப்பு(கள்) | 11 |
காயமடைந்தோர் | 7 |
1993 ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு என்பது சென்னையில் உள்ள தமிழக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க அலுவலகத்தில் 1993 ஆகத்து 8 அன்று நடந்த குண்டு வெடிப்பை குறிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர். இது சம்பந்தமாக அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, ஜிகாத் கமிட்டி நிறுவனர் பழனி பாபா, இமாம் அலி உட்பட 18 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது இல்லாத தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது.[1] வழக்கு விசாரணையில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.[2] விசாரணை நடைபெற்ற காலத்திலேயே 1997 இல் பழனி பாபாவும், 2002 இல் இமாம் அலியும் இறந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கு 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனையை விதித்தது.[3] பின்னர் உச்சநீதிமன்றம் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இரத்து செய்து விடுவித்தது.[4] தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டோர்
[தொகு]குமரி பாலன், காசிநாதன், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணரெட்டி, ராஜேந்திரன், சேஷாத்ரி, தேசிகன், பிரேம்குமார், மோகனா, லலிதா, ரவீந்திரன் ஆகிய பதினொரு நபர்கள் இறந்தனர்.[5]
வழக்கு விசாரணை
[தொகு]இந்த குண்டு வெடிப்பு வழக்கை நடுவண் புலனாய்வுச் செயலகம் விசாரணை செய்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கியக் குற்றவாளி முஸ்தாக் அகமதுவை சி பி ஐ அதிகாரிகள் 24 ஆண்டுகள் கழித்து 5 சனவரி 2018 அன்று கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி முஷ்டாக் அகமது கைது". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/India/2018/01/05181236/CBI-nabs-accused-in-1993-bombing-of-RSS-Chennai-headquarter.vpf. பார்த்த நாள்: 18 March 2021.
- ↑ "ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு 24 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2018/jan/06/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-24-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2839721.html. பார்த்த நாள்: 18 March 2021.
- ↑ ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு:பாஷா விடுதலை-11 பேருக்கு தண்டனை
- ↑ சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை
- ↑ "பிரம்மபுரத்தில் குமரி பாலன் நினைவு தினம்". https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/aug/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9-954226.html. பார்த்த நாள்: 18 March 2021.
- ↑ Prime accused in RSS office blast case held after 24 years
- ↑ After 24 years, CBI nabs key accused of 1993 Chennai RSS office bombing case